தமிழ்நாடு

புதிய பேருந்து நிலையம்: “90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு” - அமைச்சர் சேகர்பாபு!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட 35 நாட்களுக்குள் 90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார்.

புதிய பேருந்து நிலையம்: “90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு” - அமைச்சர் சேகர்பாபு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 36 நாள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

புதிய பேருந்து நிலையம்: “90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு” - அமைச்சர் சேகர்பாபு!

அதன்படி தற்போது ரூ.14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த காவல் நிலையம், காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. முடிச்சூர் ஆம்னி பேருந்துகளுக்காக கட்டப்படும். அந்த பணியும் ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெறும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 32 கடைகள் பயன்பாட்டில் இருந்தது. அதன் உரிமையாளர்களுக்கு மாற்று கடைகள் சலுகை விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பேருந்து நிலையம்: “90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு” - அமைச்சர் சேகர்பாபு!

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்படுகிறதோ? அதன் பிறகு முடிவு செய்யப்படும்?

கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்படும்போது புகார்கள் சொல்லியே மாய்ந்து போனார்கள். அங்கு 7 வருடங்கள் கழித்தே ஆம்னி பேருந்துகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட 35 நாட்களுக்குள் 90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு.” என்றார்.

banner

Related Stories

Related Stories