தமிழ்நாடு

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நாளை மாபெரும் அமைதிப் பேரணி... கழகத்தினர் திரண்டு வருக !

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நாளை மாபெரும் அமைதிப் பேரணி... கழகத்தினர் திரண்டு வருக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பேரறிஞர் பெருந்தகை - 'திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் நமது மாபெரும் ஜனநாயகப் பேரியக்கத்தைத் தோற்றுவித்த பெருமகன் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது! அந்த நாளில், அவர் தோற்றுவித்த கழகத்தின் சார்பில், மாபெரும் அமைதிப் பேரணி. அறிஞர் அண்ணா நினைவிடம் நோக்கி நடைபெறுகிறது. கழகப் பொதுச் செயலாளர் -அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலும் - பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும் இம்மாபெரும் அமைதிப் பேரணியில், கழக நிர்வாகிகள், முன்னணியினர், அடலேறுகள் ஆயிரக் கணக்கில் பங்கேற்கிறார்கள்.

இம்மாபெரும் அமைதிப் பேரணிக்கு கழகத்தினர் திரண்டு வருமாறு சென்னை மாவட்டக் கழகங்களின் செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அதன் விவரம் வருமாறு:- காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலுவீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல் லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - 'கடமை - கண்ணியம் - கட்டுப் பாடு' எனும் மகத்தான தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்.

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு. நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் “மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் சுயமரியாதைச் சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் எழுத்து வேந்தர் தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. !

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நாளை மாபெரும் அமைதிப் பேரணி... கழகத்தினர் திரண்டு வருக !

அந்நாளையொட்டி - கழகத்தின் சார்பில் மாபெரும் அமைதிப் பேரணி. நாளை (3.2.2024 சனிக்கிழமை) காலை 8.00 மணி அளவில் திருவல்லிக் கேணி - வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை' அருகில் தொடங்கி, அண்ணா நினைவிடம் நோக்கி நடைபெறுகிறது. கழகத்தின் இம்மாபெரும் அமைதிப் பேரணிக்கு கழகப் பொதுச் செயலாளர் - அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமை வகிக்கிறார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

கழக இந்நாள் அமைச்சர்கள், இந்நாள் - முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மீனவர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு. வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, அனைத்து கழக நிர்வாகிகளும், செயல் வீரர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர்!"

என சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை கிழக்கு, சென்னை தெற்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

banner

Related Stories

Related Stories