தமிழ்நாடு

'வெண் பனியே' - காஷ்மீராக மாறிய ஊட்டி : 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!

உதகையில் 0.8 டிகிரி செல்சியஸ் பணிப்பொழிவு பதிவாகியுள்ளது.

'வெண் பனியே' - காஷ்மீராக மாறிய ஊட்டி : 0.8 டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருந்ததால் பனிப்பொழிவின் தாக்கம் சற்று தாமதமாகத் துவங்கியது.

இம்மாதம் தொடக்கத்திலிருந்து உதகை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை உதகையில் 0.8டிகிரி செல்சியஸ் பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. அதேபோல் அவலாஞ்சி உட்பட புறநகர்ப் பகுதிகளிலும் ஜீரோ டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும், நீர் நிலைகள் மற்றும் சதுப்புநிலங்களை ஒட்டி அமைந்துள்ள புல்வெளிகளில் பனிப்பொழிவு நன்கு தெரிகிறது. குறிப்பாக உதகை குதிரைப் பந்தய மைதானம், காந்தல், தலைக்குத்தா, ஹெச்பி எப், லவ்டேல் உள்ளிட்ட பகுதிகளில் உரை பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால் அதிகாலையில் தேயிலை பறிக்கும் பணிக்குச் செல்வார்கள், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் அறுவடை பணிக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் கடும் குளிர் காரணமாக நெருப்பு மூட்டியும் குளிரிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொண்டனர்.

banner

Related Stories

Related Stories