தமிழ்நாடு

”இந்தியாவை காக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா” : சீத்தாராம் யெச்சூரி பேச்சு!

பா.ஜ.கவைத் தோற்கடிக்கும் பாரம்பரியத்தை தமிழ்நாடும், கேரளமும் தொடரட்டும் என்று சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்துள்ளார்.

”இந்தியாவை காக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா” : சீத்தாராம் யெச்சூரி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், திருச்சி மாவட்டம் சிறுகனூரில், 'வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஐ தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, "ன்று நாம் முன்வைக்க வேண்டிய ஒரே முழக்கம் “இந்தியாவை காப்பாற்ற வேண்டும்” என்பதுதான்! நாளை செழுமையான இந்தியாவை உருவாக்க இன்றைய இந்தியா காப்பாற்றப்பட வேண்டும். இன்றைய இந்தியாவை காப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளமும் தமிழ்நாடும் இணைந்து இந்தியாவை காக்கும் போராட்டத்தில் முன்னணியில் உள்ளன.

கேரளத்தில் எங்களது கட்சியான சி.பி.ஐ(எம்) தலைமையில் இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றிபெற முடியவில்லை. கேரளத்தில் சட்டமன்றத்தில் கூட அவர்கள் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை. இந்த இரண்டு மாநிலங்களில்தான் பாஜக-வுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட கிடையாது. இந்த நிலையை நீங்கள் வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க இயலாது. தமிழ்நாட்டு மக்களும் கேரள மக்களும் ஒரு இடம் கூட பாஜக-வுக்கு தரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். எனவேதான், இரு மாநில மக்களும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளனர்.

”இந்தியாவை காக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு, கேரளா” : சீத்தாராம் யெச்சூரி பேச்சு!

2019 தேர்தல்களை போலவே 2024 தேர்தல்களிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்கும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஒரு இடத்தில் கூட பாஜக-வை வெற்றிபெற விடாது என்பதை உத்தரவாதம் செய்யும் என நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்கள் ஒரு பாஜக உறுப்பினரை கூட இங்கிருந்து தில்லிக்கு அனுப்பாத அந்த பாரம்பரியத்தை தொடர்வார்கள் என்பது நிச்சயம்.

இந்துத்துவா சக்திகள் இந்திய குடியரசின் ஜனநாயக மதச்சார்பின்மை தன்மைகளை மாற்ற முயல்கின்றன. அவர்கள் ஜனநாயக மதச்சார்பற்ற குடியரசு என்பதற்குப் பதிலாக மனுஸ்மிருதி அடிப்படையில் செயல்படும் ஒரு இந்துராஷ்ட்ரா அமைப்பை உருவாக்க கடுமையாக முயல்கின்றனர். எனவேதான், சாதிய ஒடுக்குமுறைகள் தொடர்வதை பார்க்க முடிகிறது. மனுஸ்மிருதி அடிப்படையில் ஆட்சி அமைந்தால் இந்த ஒடுக்குமுறைகள் இன்னும் தீவிரமாகும். அவர்கள் சாதிய அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை விரும்பவில்லை. ஏனெனில் சமூகத்தில் எத்தகைய சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளன என்பதும், எத்தகைய சாதியப் பிளவுகள் இருக்கின்றன என்பதும் வெளிச்சத்திற்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க வேண்டும் என்ற திசைவழியில் பயணிக்க வேண்டும் எனில், நாம் செய்ய வேண்டிய முதல் பணி பாஜக-வை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories