தமிழ்நாடு

சென்னையில் 75வது குடியரசு தினவிழா : தேசிய கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.

சென்னையில் 75வது குடியரசு தினவிழா :  தேசிய கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

75வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் முப்படை வீரர்கள், காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து வீரதீரச் செயலுக்காக யாசர் அராபத், செல்வன் தே.டேனியல் செல்வசிங், சு.சிவக்குமார் ஆகியோருக்கு அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் முகமது ஜூபேருக்கும், முதலமைச்சர் சிறப்பு விருது ஆயி அம்மாளுக்கும், காந்தியடிகள் பதக்கம் கோ.ச.சாங்சாய், ப.காசி விஸ்வநாதன், முனியசாமி, பாண்டியன், ஜெ.ரங்கநாதன் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினர்.

பின்னர் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது மதுரை மாநகரம், நாமக்கல் மாவட்டம் இரண்டாம் பரிசு, பாளையங்கோட்டை காவல்நிலையம் மூன்றாம் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதேபோல், தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கி விளையாட்டு, வேளாண்மை, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் உட்பட 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

banner

Related Stories

Related Stories