தமிழ்நாடு

'கடலை காப்போம்' : 20 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மூன்று சிறுவர்கள்!

சென்னையில் 20 கிலோமீட்டருக்கு மூன்று சிறுவர்கள் நீச்சலடித்து 'கடலை காப்போம்' என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

'கடலை காப்போம்' : 20 கிலோ மீட்டர் நீச்சல் அடித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மூன்று சிறுவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையை சேர்ந்த தாரகை ஆராதனா (9), நிஷ்விக் (7), அஸ்வதன் (14) ஆகிய மூன்று சிறுவர்கள் சென்னை நீலாங்கரை கடற்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீச்சலடித்து 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்ப்போம்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

ஸ்கூபா நீச்சல் பயிற்சியாளர் அருண் என்பவரின் மகள்தான் தாரகை ஆராதனா. இவர் தனது 7 வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ஆம் தேதி பல்வேறு கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு 'கடலை காப்போம் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்ப்போம்' என கடலில் நீச்சலடித்து விழிப்புணர்வு ஏற்படுத்து முடிவு செய்துள்ளார். இதையடுத்து இவருடன் அஸ்வதன் மற்றும் நிஷ்விக் என்ற இரண்டு சிறுவர்களும் இணைந்து கொண்டனர்.

பின்னர் இவர்கள் மூன்று பேரும் இதற்காகத் தொடர்ச்சி பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று சென்னை நீலாங்கரையிலிருந்து மெரினா கடற்கரை வரை உள்ள 20 கிலோமீட்டர் கடற்கரை நீச்சல் அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories