தமிழ்நாடு

நீட் முதல் மாநில சுயாட்சி வரை... கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள் என்னென்ன?

தி.மு.க இளைஞர் அணியின் மாநாட்டில் 25 தீர்மானங்களை வாசித்தார் இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

நீட் முதல் மாநில சுயாட்சி வரை... கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தி.மு.க இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகங்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்றே சேலம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தொண்டர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தி.மு.க இளைஞர் அணியின் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இதில் தி.மு.க இளைஞரணியின் மாநாட்டுத் தீப ஒளி சுடரை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். பிறகு மாநாடு திடலில் இந்த தீப ஒளி சுடர் ஏற்றப்பட்டது.

பின்னர் தி.மு.க இளைஞரணியின் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி 13 நாட்கள் 8647 கிலோ மீட்டர் பயணித்து இன்று சேலம் மாநாட்டுத் திடலுக்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து தி.மு.க இயக்கத்தின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியை அடுத்து திராவிட இயக்கத்தின் வரலாற்றை மெய்சிலிர்க்க வைத்த ட்ரோன் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1500 ட்ரோன்கள் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலித்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த நிலையில் இன்று காலை சுமார் 9.15 மணியளவில் மிக பிரம்மாண்டமாக மாநாட்டின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. இந்நிகழவில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நீட் முதல் மாநில சுயாட்சி வரை... கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள் என்னென்ன?

இதைத்தொடர்ந்து மேடையில் முதலமைச்சர் உரையாற்றிய பிறகு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார். அந்த 25 தீர்மானங்கள் பின்வருமாறு :

1. இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!

2. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!

3. மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணம்!

4. குடும்பத் தலைவியரின் உழைப்பை மதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

5. மாணவர்களின் உடல் நலன் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவுத் திட்டம்!

6. நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் - புதுமைப் பெண் திட்டங்கள்!

7. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் திட்டங்கள்!

8. நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சிப் பொங்க வைத்த பொங்கல் பரிசுத் தொகுப்பு!

9. வரலாறு காணாத மழையிலும் மக்களைக் காத்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!

10. நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்!

11. தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக்கிய முதலமைச்சர்!

12. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர்

நீட் முதல் மாநில சுயாட்சி வரை... கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 25 தீர்மானங்கள் என்னென்ன?

13. உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!

14. குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்

15. மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக!

16. முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர்

17. ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!

18. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு

19. மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்

20. கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக!

21. அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

22. நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்!

23. இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்.

24. பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்!

25. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை

banner

Related Stories

Related Stories