தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை அறிவித்த தி.மு.க!

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்ததை நடத்திடும் குழுவை தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் - கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை அறிவித்த தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் ஒன்றிய பா.ஜ.க அரவை வீழ்த்தும் வகையில் எந்த தேர்தலிலும் இதுவரை இல்லாத அளவிற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த 'இந்தியா' கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகளையும் தொடங்கி விட்டன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவை தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதில், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி, துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும்,நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இயங்கோவன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்துப் பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன், அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன்,மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories