தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு? - முழு விவரம் இதோ !

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு? - முழு விவரம் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் நேற்றும் இன்றும் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்த எந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு? - முழு விவரம் இதோ !

First Solar :

முதலீடு ரூ.5600 கோடி - வேலை வாய்ப்பு 1,100 பேர் - காஞ்சிபுரம்

JSW Renewable :

முதலீடு ரூ.12000 கோடி - வேலை வாய்ப்பு 6,600 பேர் - தூத்துக்குடி & திருநெல்வேலி

Tata Electronics :

முதலீடு ரூ.12,082 கோடி - வேலை வாய்ப்பு 40,500 பேர் - கிருஷ்ணகிரி

TVS Groups :

முதலீடு ரூ.5,000 கோடி - வேலை வாய்ப்பு 500 பேர்

Mitsubishi :

முதலீடு ரூ.200 கோடி - வேலை வாய்ப்பு 50 பேர் - திருவள்ளூர்

Hyundai :

முதலீடு ரூ.6,180 கோடி - காஞ்சிபுரம்

Vinfast :

முதலீடு ரூ.16,000 கோடி - தூத்துக்குடி

Godrej Consumer :

முதலீடு ரூ.515 கோடி - செங்கல்பட்டு

Pegatron :

முதலீடு ரூ.1000 கோடி - வேலை வாய்ப்பு 8000 பேர் - செங்கல்பட்டு

Tata Power : ரூ.70800 கோடி

முதலீடு ரூ.70800 கோடி - 3800 பேருக்கு வேலை வாய்ப்பு - தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும்.

Stellantis Group :

முதலீடு ரூ. 2000 கோடி - திருவள்ளூர்

Festo India:

முதலீடு ரூ.520 கோடி - கிருஷ்ணகிரி மாவட்டம் - 2000 பேருக்கு வேலை வாய்ப்பு

ENES Ramraj :

முதலீடு ரூ.1000 கோடி - 13000 பேருக்கு வேலை வாய்ப்பு

Adani Groups :

முதலீடு ரூ.42768 கோடி - 13000 பேருக்கு வேலை வாய்ப்பு

Tata chemicals :

முதலீடு ரூ.1000 கோடி - 500 பேருக்கு வேலை வாய்ப்பு - ராமநாதபுரம் மாவட்டம்

CPCL:

முதலீடு ரூ.17,000 கோடி - 2400 பேருக்கு வேலை வாய்ப்பு - நாகை மாவட்டம்

Royal Enfield :

முதலீடு ரூ.3000 கோடி - 2000 பேருக்கு வேலை வாய்ப்பு - காஞ்சிபுரம் மாவட்டம்

Mahindra : ரூ.1800 கோடி

முதலீடு ரூ.1800 கோடி - 4000 பேருக்கு வேலை வாய்ப்பு - திருவள்ளூர் மாவட்டம்

Hinduja Groups :

முதலீடு ரூ. 2500 கோடி - 300 வேருக்கு வேலை வாய்ப்பு

Microsoft India :

முதலீடு ரூ. 2700 கோடி -167 பேருக்கு வேலை வாய்ப்பு - சென்னை.

Feng Tay :

முதலீடு ரூ. 500 கோடி - விழுப்புரம்

Hiyh glory footwear

முதலீடு ரூ. 2302 கோடி - கள்ளக்குறிச்சி

Zhong Bu

முதலீடு ரூ. 48 கோடி - பெரம்பலூர்

TKG Taekwang

முதலீடு ரூ. 1250 கோடி

Hong Fu :

முதலீடு ரூ. 1500 கோடி - ராணிப்பேட்டை

Long Yin

முதலீடு ரூ. 500 கோடி – ராணிப்பேட்டை

banner

Related Stories

Related Stories