தமிழ்நாடு

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறப்பு? : அமைச்சர் சேகர்பாபு சொன்ன மகிழ்ச்சியான செய்தி!

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறப்பு? : அமைச்சர் சேகர்பாபு சொன்ன மகிழ்ச்சியான செய்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக (SETC) மற்றும் தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகப் (TNSTC) பேருந்துகளுக்கு 8 தொகுதிகளைக் கொண்ட 215 பேருந்து பாந்துகளும் (Bus Bays), இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டடுக்கு அடித்தள நிறுத்துமிட வசதியும் உள்ளன.

சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் வரை மாநகரப் பேருந்துக் கழகப் (MTC) பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், மாநகரப் பேருந்துக் கழக முனையம், ஜி.எஸ்.டி. சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துக் கழக முனையத்திலிருந்து (MTC) பிரதான முனையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு, இயங்குபடிகள் மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறப்பு? : அமைச்சர் சேகர்பாபு சொன்ன மகிழ்ச்சியான செய்தி!

மேலும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள், தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம் மற்றும் முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் / துரித உணவு மையம், ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம், ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்று குத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் சேகர்பாபு, "கிளாம்பாக்கம் போன்று பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கம் பேருந்து நிலையமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும்.

அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி குத்தம்பாக்கத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குத்தம்பாக்கத்தில் கூடுதலாக குளிர்சாதன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories