தமிழ்நாடு

பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : சந்திப்பின் போது பேசியது என்ன?

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :  சந்திப்பின் போது பேசியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 2024-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டியில் 27 வகையான விளையாட்டுகளுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இடம் பெற உள்ளது. நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா இளைஞர் போட்டிக்கான திருவள்ளுவர் இலச்சினையை அண்மையில் வெளியிட்டார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழா அழைப்பிதழை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையின் பன்முக வளர்ச்சி குறித்து பிரதமருடன் கலந்துரையாடினேன். முதலமைச்சர் கோப்பை மற்றும் ஆசிய ஹாக்கி தொடர் வெற்றிகரமாக நடத்தியது குறித்தும் எடுத்துரைத்தேன்.

அதுமட்டுமல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை மறுசீரமைக்க உடனே தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்குப் பிரதமர் தேவையான நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்தார்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories