தமிழ்நாடு

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலின் தலைப்பில் மறைந்திருக்கும் 5 உள்ளடக்கம் இதுதான் : அது என்ன?

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய படைப்பான ‘மகா கவிதை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலின்  தலைப்பில் மறைந்திருக்கும் 5 உள்ளடக்கம் இதுதான் : அது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கவிப்பேரரசு வைரமுத்துவின் புதிய படைப்பான ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் காமராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது. ‘மகா கவிதை’ நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் கலைஞானி கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

‘மகா கவிதை’ என்பது நிலம், நீர், காற்று, தீ, வெளி என்ற ஐம்பூதங்கள் பற்றிய ஐந்து நெடுங் கவிதைகளின் பெருந்தொகுப்பு ஆகும். கவிப்பேரரசு வைரமுத்துவின் 30 மாதக் கடும் உழைப்பினால் உருவானது இந்தக் கவிதைநூல்.

“அகவியல் புறவியல் அறவியல் இறையியல் என்றெல்லாம் பேசிய தமிழ்க்கவிதை முதன்முதலில் முழுக்க அறிவியல் பேசுகிறது. ஐம்பூதங்களின் அறிவியலும் ஈராயிரமாண்டு நீண்டு கிடக்கும் தமிழ்க் கவிதையின் அழகியலும் ஒருங்கிணைந்த பெருங்கவிதை மகா கவிதை. இளைய தலைமுறையின் எதிர் காலத்திற்கு இந்த மகா கவிதை விஞ்ஞான வாசலைத் திறந்துவிடும்” என்று கவிப்பேரரசு வைரமுத்து உறுதிப்படத் தெரிவிக்கிறார்.

வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூலின்  தலைப்பில் மறைந்திருக்கும் 5 உள்ளடக்கம் இதுதான் : அது என்ன?

இந்த விழாவிற்கு முன்னதாக மகா கவிதை என்ற தலைப்பின் 5 எழுத்துக்களிலும் 5 உள்ளடக்கங்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துச் சரியான விடை சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மகா கவிதை தலைப்பின் உள்ளடக்கத்தை 9 பேர் சரியாகக் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ரூ.5 லட்சம் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நூல் வெளியிட்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

மகா கவிதை தலைப்பின் 5 எழுத்துகளில் மறைந்திருக்கும் உள்ளடக்கம் அதுதான்.

ம - மண் அல்லது நிலம்.

கா - காற்று

க - தீ

வி - விண் அல்லது விசும்பு

தை - தண்ணீர்

banner

Related Stories

Related Stories