தமிழ்நாடு

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

கடந்த 2023ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடந்த சாதனை திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு பின்வருமாறு :-

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜன­வரி

* சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கியத் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை வெளியிட்டார்.

* சட்டப் பேரவைக் கூட்டம் முடியும் முன்பே, பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறினார்.

* தமிழ்நாடு சட்டப் பேரவையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி அம்பேத்கர், காமராசர், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களை வாசிக்காமல் புறக்கணித்தார். இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநருக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி,

* சேது சமுத்திரத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1,250 கிராமப்புறத் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள 2 இலட்சம் ரூபாய் வீதம் 2500 திருக்கோயில்களுக்கு 50 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலைகளை வழங்கிடும் அடையாளமாக 18 திருக்கோயில்களைச் சார்ந்த நிர்வாகிகளிடம் வரைவோலைகளை முதல்வர் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

*தமிழ்நாடு அரசுப் பணிகளில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம். மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.

*தமிழ்நாடு மற்றும் வெளிநாடு பதிப்பகத்தினரிடையே 365 நூல்களை மொழி பெயர்ப்பு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.

* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 5 நிறுவனங்களுக்கு ரூ.750 கோடி முதலீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

*ஓடிசாவில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஓடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் உலகத்தரம் வாய்ந்த வகையில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

*17 ஆண்டுகளுக்குப் பிறகு பழநி மலைக் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

பிப்ரவரி

* அரசு விரைவுப் பேருந்துகளின் இருப்பிடத்தை அறிய சென்னை பஸ் செயலி அறிமுகம்.

* திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த கிரெடாய்' கண்காட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலை நோக்கு திட்டம் 2023ஐ வெளியிட்டார்.

* நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய, 150 செயற்கைகோள்களை சுமந்து சென்ற ஹைபிரிட் சவுண்டிங்' ராக்கெட் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

* தமிழ்நாட்டில் 433 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், 44 இடங்களில் புதிய மருத்துவமனைக்கு அடிக்கல், திருநங்கைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

* மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாநில திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இதன்மூலம் ரூ.50,000 கோடி முதலீட்டை ஈர்த்து 1.5 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஏற்றமிகு சிறப்புத் திட்டங்கள் எனும் பெயரில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்குவது, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம், திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு உள்ளிட்ட ஏழு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

மார்ச்

* சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் மு.கருணாநிதி மாடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.43 கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* தமிழ்நாடு நகர எரிவாயு விநியோக கொள்கை 2023 உள்ளிட்ட, பல்வேறு அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

*தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன.

* தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் ரூ.14,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

*தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* மயிலாடுதுறையில் அமைக்கப்பட்ட மாவட்ட மற்றும் அமர்வு நீதி மன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

*தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 'அவள்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் பெண் காவலர்களின் சூழ்நிலைக்கேற்ப விடுப்பு வழங்குவது உள்ளிட்ட 9 திட்டங்களை அறிவித்தார்.

* தமிழ்நாட்டில் ஒரு கோடி மகளிருக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

ஏப்ரல்

* கேரள மாநிலம், கோட்டயம், வைக்கத்தில் நடந்த வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வைக்கம் சத்தியாகிரக போராட்ட நூற்றாண்டு விழாவிற்கான இலச்சினையை வெளியிட்டார்.

* தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* கடற்கரை ரோந்து மற்றும் மீட்பு இழுவை வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்து, ரூ.20 கோடியில் 12 புதிய தீயணைப்பு நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி, தடையை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் வரை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

ஜூன்

*கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார்.

*தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, சென்னை அடுத்த வரகடத்தில் நிறுவியுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார்.

* சென்னை, கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1,000 படுக்கைகளுடன் 240.54 கோடி செலவில் உலகத் தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் இணைந்து திறந்து வைத்தார்.

* சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.116 கோடியில் நிதி நுட்ப நகரம் அமைப்பதற்கும், முதற்கட்டமாக ரூ.254 கோடியில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் கட்டுவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

* திருவாரூர் மாவட்டம், காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் கலைஞரின் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் அவரது சகோதரி செல்வி செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

* சென்னையில் நடந்த பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி, காடம்புலியூரில் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.70,000 கடனுதவியை 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் மூலம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரூ.125 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 500 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். ஒவ்வொரு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் ஒரு மருத்துவமனைப் பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

ஜூலை

* மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் திறன் மேம்பாட்டுக்காக 6 மாவட்டங்களில் முதற்கட்டமாக பயிற்சி அரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

* மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

*சட்டம் பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'சத்தியதேவ் லா அகாடமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

*ராணிப்பேட்டை சிப்காட் நிலை 3இல் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன், திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்ளுவதற்காக அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

* தமிழ்நாட்டில் முதியோர் உதவித் தொகை ரூ.1,200 உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

* எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கத்தில் ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பப் பதிவு செய்யும் பணியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தொடங்கி வைத்தார்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

ஆகஸ்ட்

* கிழக்குக் கடற்கரை சாலை பேரூரில், ரூ.4,276 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

* நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு முழுவதும் 31,000 அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* பிரபல பின்னணி பாடகர் மறைந்த டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் முழு உருவச் சிலையை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மையில் யு.பி.எஸ். நிறுவனம் - சென்னைப் போரூரில் தொழில்நுட்ப மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாரத்தான் - 2023 போட்டியில் 50,629 ஆண்கள், 21,514 பெண்கள், 1,063 மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்றனர். மொத்தம் 73,206 பேர் கலந்துகொண்ட இப்போட்டி கின்னஸ் சாதனை படைத்ததாக அறிவிக்கப்பட்டது.

* நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* தமிழ்நாட்டில் 31,000 பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருக்குவளையில் தொடங்கி வைத்தார்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

செப்டம்பர்

* தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு 4 முறை மின் கட்டணச் சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

* கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் நிலையே தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

*குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்ட தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், திட்டத்தைத் தொடங்கி வைக்கும் வகையில் 13 பெண்களுக்கு வங்கி பற்று அட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வீதம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

* இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

* சென்னையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன், ராஜரர், சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், வனிதா, நிகார் ஷாஜி, வீரமுத்துவேல் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சமும், பாராட்டு சான்றிதழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

அக்டோபர்

* சென்னையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகள் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, நாராயணன், ராஜரர், சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், வனிதா, நிகார் ஷாஜி, வீரமுத்துவேல் ஆகியோருக்கு தலா ரூ.25 லட்சமும், பாராட்டு சான்றிதழும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

* சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

* அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது வசதிகளுக்கான மின் இணைப்பு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8ல் இருந்து ரூ.5.50 குறைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

நவம்பர்

*சாலைகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக ‘நம்ம சாலை' என்ற புதிய செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் சர்வதேச கருத்தரங்கத்தை (டாஸ்கான் 2023) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.

* கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து எந்தவித கருத்து கூறவோ அல்லது தற்போது அதற்கு தடை விதிக்கவோ முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

* தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன.

* "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாதத்தில் ஒரு நாள் முழுவதும் கிராமங்களில் தங்கி மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.

* சென்னையில் ஒ.எம்.ஆர். சாலையில் இந்திரா நகர் சந்திப்பில் ரூ.18.15 கோடியில் 'U' வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.* சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

“2023ல் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்” : முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் குறித்து சிறப்பு தொகுப்பு !

டிசம்பர்

* மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்கு நிவாரண நிதியை வழங்க கோரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார்.

* மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு ரூபாய் 6000 நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

*கோவையில் *மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

* நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், ரூபாய் 6000, ரூபாய் ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு அம்மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

* வைக்கம் போாராட்ட நூற்றாண்டு விழா - சிறப்பு மலர் வெளியீடு, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் பங்கேற்பு.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 கோடியில் நிவாரணத் தொகுப்பு திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

* கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

Related Stories

Related Stories