தமிழ்நாடு

“மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்

ஒன்றிய அரசாங்கம் இப்போதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அந்தக் கட்சியினர் எதையாவது கொஞ்சம் சேர்த்து வைத்தார்கள் என்றால் அவற்றையெல்லாம் நிர்மலா சீதாராமனும், தமிழிசையும் அழித்து விட்டார்கள்.

“மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சன் நியூஸ் தொலைக்காட்சியில் "நிவாரண நிதி கோரிக்கையை திசை திருப்பும் ஒன்றிய அரசு? பேரிடரிலும் அரசியல் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்- வெள்ளச் சேத ஆய்விலும் தமிழ்நாடு அரசை விமர்சித்த நிர்மலா சீதாராமன்” என்ற தலைப்பில் நடைபெற்ற ‘கேள்விக் களம்' பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கனகராஜ் விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:-

இங்கே பேசியவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். கடைசி வருடம், 2021-2022 ஆண்டு, ஜி.எஸ்.டி. வரியில் 59 சதவிகிதம். ஜி.எஸ்.டி.யில் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன இருக்கு? நமது மக்கள் தானே பொருட்களை வாங்குகிறார்கள். அந்த வரி தானே உடனுக்குடன் கொடுக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி சம்பாதிக்கின்ற லாபத்திற்கும் சேர்த்து அடுத்த வருடம் மார்ச் 31-ஆம் தேதி கட்டினால் போதும், ஆனால் நாம் ஏப்ரல் 1-ஆம் தேதி வாங்கும் பொருள்களுக்கும் வரி கட்டுகிறோம். நிர்மலா சீதாராமன் நாட்டினுடைய முக்கியமான அமைச்சர். அவர் "புள்ளி இரண்டு சதவிகிதம் எனக்குச் சொல்லவில்லை, அதனால் கெட்டுப்போச்சு என்று சொல்கிறார்கள்” என்று கூறினார்.

ஒரே ஒரு விஷயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், அல்லது தங்கம் தென்னரசு இவர்கள் எல்லாம் சொன்னால் நிர்மலா சீதாராமன் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருத்தர் சொல்லி இருக்கிறார், The None of the weather predection models anticipated the 90 cm rainfall witnessed in kayalpatinam municipality in tuticorin district of tamilnadu last week அப்படி என்று சொல்லிட்டு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் The ministry of earth sciences plans to setup two high performance computers in Noida and Pune to enhance the weather forecasting accuracy. ஆனால், துல்லியமாக சொன்னார்கள் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். புள்ளி இரண்டு சதவிகிதம் வேறுபாடு இருந்து அதற்காக தமிழ்நாடு அரசு அங்கலாய்த்ததாக கூறியது நிர்மலா சீதாராமன் கூட விமர்சிக்கிறார்.

“மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்

இன்றைக்கு இதனை அறிவியல் துறையின் முன்னாள் செயலாளர் எம். ரவிச்சந்திரன் கூறியுள்ளார். அந்தக் கூட்டத்தில் ஒன்றிய புவியியல் துறை அமைச்சர் கிரன் ரிஜூவும் கலந்துகொண்டிருக்கிறார். இப்போது திருமதி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும். கட்டாயமாக கோவிலில் வேலை செய்கின்ற எல்லோருக்கும் நியாயமான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. அதில் ஏதாவது இருந்தால் நாங்கள் தான் முதலில் சங்கம் வைப்போம்.

ஆனால் 'உண்டியலில் போடாதே, தட்டில் போடு' என்பதை வேறு யாராவது சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள். நான் கேட்பது 'எனக்கு கொடுக்கவில்லை, எனவே நீங்கள் ஒன்றிய அரசாங்கத்திற்கு வரி கொடுக்காதீர்கள்' என்று சொன்னால் அதனை விட்டு விடுவீர்களா? ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர், அவர் உண்டியலில் போடாதே தட்டில் போடு என்று சொன்னால் இப்படி ஒரு கோரிக்கை வைத்தால் இது எப்படி இருக்கிறது?

நிர்மலா சீதாராமன் எதற்காக இங்கு வந்தார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மேல் நிறைய விமர்சனம் வந்தபிறகு ஏதோ கரிசனத்தோடு சொல்வார்கள் என்பதற்காக வந்தார். மற்றபடி அவர்கள் வருவதற்கான அடிப்படையான காரணங்கள் எதுவுமில்லை. ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே வந்து எல்லா ஆலோசனைகளை செய்துவிட்டுப் போய்விட்டார்.அதேபோல தமிழிசை சௌந்தரராஜன், அவர் இங்கே வந்து அவர் வடித்த கண்ணீர், ஏற்கனவே வந்த மழைத் தண்ணீரை விட அதிகமாகப் போய்விட்டது.

புதுச்சேரியில் நான் ரேஷன் அரிசிக்கு பதிலாக காசு தருகிறேன். அது நல்ல மாடல் என்று சொல்லி, பத்து மாதம் காசு கூட ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. பெரிய போராட்டம் செய்த பிறகு நான்கு மாதம் கொடுத்தார்கள், இந்த மாதப் பணம் இதுவரை வரவில்லை. தமிழிசை சௌந்தரராஜன் தான் நிர்மலா சீதாராமனிடம் சென்று அழ வேண்டும். அடுத்து 'காசு மெல்ல கொடுப்போம், மெல்ல கொடுப்போம்' என்று சொல்கிறார்கள். இந்த மாதத்துக்கு கொடுத்தார்கள்.

“மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்

உடனே கொடுத்தார்கள். ஆனால் இன்டர் மினிஸ்ட்ரியல் டீம் சென்று பார்த்துட்டு கொடுத்தார்கள். அவர்கள் ரிசர்வ் பேங்குக்கு ஒரு லட்டர் அனுப்பி இருக்கிறார்கள். 2020, 21, 22இல் கொடுத்ததை இந்த வருடம் தான் கொடுத்து இருக்கிறார்கள். இந்த வருடம் லோக் சபாவில் கேள்வி நம்பர் 4591 தேதி 28.3.2023 என்.கே.பிரேமசந்திரனுக்கு பதிலில், அந்த டீம், வந்த பிறகு தான் கொடுக்கனும். ஆனால், என்.டி.ஆர்.எப். இல் இருந்து கொடுக்கலாம் என்று அதில் இருக்கிறது. பொதுவாக டீம் வரும்; பணம் கொடுப்பாங்க; ஆனால் ஸ்டேட் கவர்ன்மெண்டிடம் போதுமான பண்ட் இல்லை என்றால் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் என்.டி.ஆர்.எப்.பில் இருந்து அட்வான்சா பணம் கொடுக்க வேண்டும்.

ஐ.எம்.சி.டி.க்காக காத்திருக்கக் கூடாது, உள்ளூர் மட்டத்தில் இருக்கக்கூடிய மக்கள் அவர்கள் பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு இந்தப் பணத்தை கொடுக்கலாம் என்று அவர்கள் அதில் சொல்லி இருக்கிறார்கள். நிர்மலா சீதாராமன், வந்தார், பார்த்தார், நேற்று கூட 'இரண்டரை லட்சம் பேருக்கு உடனே விவசா யத்திற்கு காப்பீட்டுத்தொகை கொடுத்துவிடுங்கள்' என்று.

அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, விவசாயம் என்பது வெறும் பயிர் மட்டும் அழிந்துவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள், தண்ணீர் ஆற்றை கடந்து போகின்ற போது நிலத்தில் இருந்து அந்த வண்டல் மண்ணையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. திரும்பி வரும்போது மணலைக் கொண்டு வந்து கொட்டிவிட்டது. அடித்துக் கொண்டு போன இடத்திலும் மணலை போட வேண்டும். திரும்ப சேர்த்த மணலையும் வெளியே எடுத்து விட்டுப் போட்டால் மட்டும் தான் நிலத்தைப்பாதுகாக்க முடியும். வீடுகளை நாம் பார்க்கும்போது டி.வி., ப்ரிட்ஜ், போர்வை, துணி, சாப்பாட்டுக்கு வைத்திருந்த பொருள்கள், கால்நடை, வாகனம் எல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டன. வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிர்மலா சீதாராமன் ஒரு பவர் புல் போஸ்டிங்கில் இருக்கிறார்.

நம்மிடம் கூறிய அதே பாடி லாங்வேஜோடு, அப்பா நீங்கள் கொடுத்த பொருள்கள் எல்லாம் இப்படி வெள்ளத்தில் போய் விட்டது. நீங்கள் என்ன செய்யலாம் என்றால் கார்ப்பரேட் சோஸியல் ரெஸ்பாலிட்டி என்று வைத்து இருக்கிறீர்களே பண்ட், இவர்கள் தான் உங்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கிறார்கள், அதில் ஒரு பகுதியை ஒதுக்கி நஷ்டஈடா கொடுங்கள் என்று சொல்லலாம்.

“மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்

தமிழ்நாட்டில் யாராவது, பா.ஜ.க.வினர் நிர்மலா சீதாராமனிடத்தில் ஒரு பைசாவாவது உடனடியாக கொடுங்கள் என்று கேட்டார்களா? இல்லை! ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மாநில அரசுக்கு நிதி கொடுங்கள் என்று கேட்டிருந்தார். ஒன்றிய அரசு நிதி கொடுக்காதது தவறு தான். வாய்ப்பு இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்தியாவில் புயல் பாதிப்புவரும் என்ற அறிவிப்பு அறிவித்த உடனேயே 14, 15 ஆகிய இரண்டு தேதிகளில் ஒரு மாத காலத்தில் குழந்தை பிறக்கும் என்று வாய்ப்பு இருக்கக்கூடிய பதிவு செய்திருக்கக்கூடிய பெண்கள் அனைவரையும் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தது மாதிரி ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியாவிலேயே வேறு எங்கேயும் நடந்ததில்லை. தமிழ்நாட்டில் தான் இது நடந்து இருக்கிறது.

கொள்கைப் பிரச்சினையில் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நாங்கள் நியாயத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். வேலை நேரம் மாற்றத்தில் கூட நாங்கள் குரல் கொடுத்தோம். ஆனால் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அரசியலுக்காகக் கூட குரல் கொடுக்கவில்லை. நான் இந்த மழை பெய்து முடிந்து பிரச்சினை என்று வந்த உடனே திருநெல்வேலியில் இருந்தேன். அதிகாரிகள் அமைச்சர்கள் கீழே நின்றார்கள். ஆனால், அவ்வளவு நின்ற பிறகும் மக்கள் பரிதாபமாக பாதிக்கப்பட்டார்கள். ஏன் என்றால் வெள்ளம் அந்த அளவிற்கு அதிகமாக இருந்தது.

கையில் உணவு இருக்கிறது; எதிரே பசித்தவர்கள் இருக்கிறார்கள்; கொடுக்க முடியவில்லை. டைரக்டர் மாரிசெல்வராஜ் குடும்பத்தினர் பாதிக்கப்படுகிறார்கள். அமைச்சர் எங்கே இருக்கிறார் என்று கேட்டு இவர்கள் எல்லாம் ஏற்பாடு செய்த பிறகும் அவர்களை மீட்க முடியவில்லை. உங்களுக்குத் தெரியும் ரயில்இருந்தது. ஆனால் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு முடியவில்லை. அத்தனை பேரும் சேர்ந்தும் செய்யமுடியாத சில காரியங்கள் இருந்தன. ஆனால் இதற்கெல்லாம் அரசோ, மற்ற அதிகாரிகளோ குறைந்து போனார்கள் என்று சொல்ல முடியாது.

“மழை வெள்ளத்திலும் மட்டமான அரசியல் செய்யும் பாஜக”: விவாத நிகழ்ச்சியில் மோடி அரசை வெளுத்து வாங்கிய கனகராஜ்

முழங்கால் அளவு தண்ணீரில் ஒரு நர்ஸ் உட்கார்ந்து ஏரலில் பிரசவம் பார்த்து இருக்கிறார். அதற்குப் பின்னால் மூன்று நாள் அங்கேயே இருந்தார். கழுத்தளவு தண்ணீரில் ஒருவர், அவர்களுக்கு வேண்டியதை கொண்டு போய் கொடுத்து இருக்கிறார்கள். எனவே என்னைப் பொறுத்தவரையில் எல்லாம் சரியாகவே நடந்தது. அமைச்சர்கள் அதிகாரிகள் களத்தில் இருந்தும் வெள்ளத்திற்கு முன் ஈடுகொடுக்க முடிய வில்லை. அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் மாட்டிக்கொண்டார்.

தூத்துக்குடி ஆட்சியர் தண்ணீரில் மாட்டிக்கொண்டார். இவர்கள் எல்லாம் அதனை எதிர்பார்க்காமல் நடந்துவிட்டன. ஒன்றை மட்டும் சொல்கிறேன், மாநில அரசாங்கம் பெரும் முயற்சி எடுத்தார்கள் என்பதுதான் உண்மைம. எனவே ஒன்றிய அரசாங்கம் இப்போதாவது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பா.ஜ.க. அந்தக் கட்சியினர் எதையாவது கொஞ்சம் சேர்த்து வைத்தார்கள் என்றால் அவற்றையெல்லாம் நிர்மலா சீதாராமனும், தமிழிசை சௌந்தரராஜனும் அழித்து விட்டார்கள். இந்த அரசியலில் தி.மு.க.விற்கு இலாபம் தான். ஆனால் இதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதினால் தான் ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்கிட வேண்டும் என்று திரும்ப திரும்ப கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கே.கனகராஜ் விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

banner

Related Stories

Related Stories