தமிழ்நாடு

இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது தமிழ்நாடு அரசு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது என்ன?

இந்தியாவின் வரலாற்றிலேயே வடகிழக்கு பருவ மழைக்காக 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தி தமிழ்நாடு அரசு சாதனை புரியவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது தமிழ்நாடு அரசு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ராயப்பேட்டை இன்று அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று 5-வது வாரம்.

கடந்த நான்கு வாரங்களில் 8,380 முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முழுவதும் உள்ள வார இறுதி நாட்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இந்தியாவின் வரலாற்றிலேயே வட கிழக்கு பருவ மழைக்காக 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவ முகாம் நடத்தி தமிழ்நாடு அரசு சாதனை புரியஉள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த முகாம்கள் மூலம் பயனடைகிறார்கள்.

இந்தியாவில் யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது தமிழ்நாடு அரசு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது என்ன?

சென்னையில் இருக்கும் ஒட்டுமொத்த நாய்களும் கணக்கெடுக்கப்படவுள்ளது. மேலும், நாய்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும். வெறிபிடித்த நாய்களைக் கண்டால் பொதுமக்கள் மாநகராட்சிக்குத் தெரியப்படுத்தவும். நாய் கடித்தவர்கள் பயப்படத் தேவை இல்லை. அவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories