தமிழ்நாடு

”உங்களை போன்று சேரி மொழியில் பேச முடியாது” : குஷ்புக்கு வலுக்கும் கடும் எதிர்ப்பு!

சேரி மொழி என கருத்து தெரிவித்த குஷ்புக்கு சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

”உங்களை போன்று சேரி மொழியில் பேச முடியாது” :  குஷ்புக்கு வலுக்கும் கடும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் 'லியோ'. விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் வெற்றியைத் தொடர்ந்து அண்மையில் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது நடிகை திரிஷா குறித்து அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகை திரிஷாவும் சமூகவலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் நடிகர்கள் பலரும் நடிகர் மன்சூர் அலிகான், ”தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க தலைமையின் ஆதரவால் மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கும் குஷ்பு சமூகவலைதளத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு ஆதரவு வந்த அதே நேரம் எதிர்ப்பும் எழுந்தது. சிலர் சமூகவலைதளத்தில், "மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டபோது கருத்து தெரிவிக்காமல் தற்போது நடிகை என்பதால் திரிஷாவுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதா?" என நடிகை குஷ்புக்கு கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதைப் பார்த்து ஆவேசமடைந்த அவர், "உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என தனது கருத்துக்கு எதிர் வினையாற்றியவர்களை விமர்சித்திருந்தார் குஷ்பு. இதையடுத்து சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நடிகை குஷ்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் பா.ஜ.கவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் "இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வலியுடன் உணர்ந்தேன்.

சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "சேரி மொழியை" பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என குஷ்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories