தமிழ்நாடு

மக்களே உஷார் - நாளை வரை தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

நாளை வரை தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களே உஷார் - நாளை வரை தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து குமரிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக விடாமல் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார் - நாளை வரை தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வரும் 26-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நவ.28ம் தேதி வரை மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தமிழ் நாட்டிற்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 8:30 மணி வரை 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஆரஞ்சு நிற மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories