தமிழ்நாடு

“4000 பேருக்கு வேலைவாய்ப்பு.. காலணி & தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி” - அமைச்சர் TRB ராஜா!

4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலான தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலையின் தொடக்கவிழா வரும் 28-ம் தேதி பெரம்பலூரில் நடைபெறவுள்ளது.

“4000 பேருக்கு வேலைவாய்ப்பு.. காலணி & தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி” - அமைச்சர் TRB ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் கடந்தாண்டு, காலணி மற்றும் தோல் உற்பத்திப் பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதி வர்த்தகத்தில் தேசிய அளவில் தமிழ்நாடு 48% பங்களிப்பை தமிழ்நாடு வழங்கி வருகிறது.

“4000 பேருக்கு வேலைவாய்ப்பு.. காலணி & தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி” - அமைச்சர் TRB ராஜா!

இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்ட ஜே.ஆர்.என். கோத்தாரி காலணி நிறுவனம் உற்பத்தியை விரைவில் தொடங்கவுள்ளது. இந்த தொழிற்சாலையின் தொடக்கவிழா, வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொழிற்சாலையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரம்பலூர் சிப்காட் தொழில்பூங்காவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும் நிலையில், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே இருக்கும் நல்ல புரிந்துணர்வை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

“4000 பேருக்கு வேலைவாய்ப்பு.. காலணி & தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி” - அமைச்சர் TRB ராஜா!

இதனிடையே, தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய தலைமையில், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கவும், அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தோல் அல்லாத காலணித் துறையில், நமது அரசு அடைந்து வரும் முன்னேற்றம், மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளுக்கு சான்று.

தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்ற முதலமைச்சரின் லட்சியத்தை அடைவதில் இதுவும் முக்கிய பங்கு அளிக்கும். தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உற்பத்தி துறையானது, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைகளை வழங்கியுள்ளது. அவர்களின் நிதி நிலையை பெரிதும் மேம்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories