தமிழ்நாடு

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துகளைப் பேசி வருகிறார். மேலும் பா.ஜ.க தலைவர்போல் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ள மசோதாக்களுக்குக் கையெழுத்திடாமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள், மக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலிலும், ஆளுநர் தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார். இதனால் ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். குற்றங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு ஒப்புதலளிக்க அனுப்பப்பட்ட 4 கோப்புகள் ஆளுநரால் கிடப்பில் கிடக்கிறது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

அதேபோல், தண்டனைக் காலத்துக்கு முன்பு விடுவிப்பதற்கான 54 கைதிகளின் கோப்புகளும், தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான 14 பதவிகளில் 10 நியமனங்களுக்கான கோப்புகளும் கிடப்பில் கிடக்கின்றன. இது மிவும் முக்கியமான பிரச்சனை. கூடிய விரைவில் என்கிற வார்த்தையை ஆளுநர் தவறாகப் பயன்படுத்த முடியாது. ஆளுநர் என்ற அதிகாரத்தையும் அந்த பொறுப்பையும் ஆர்.என்.ரவி முறைகேடாகப் பயன்படுத்துகிறார்" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்" என கருத்து தெரிவித்தனர். மேலும் மசோதாக்கள் நிறுத்திவைத்தது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஒன்றிய அரசுக்கும் நோட்டிஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories