தமிழ்நாடு

தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பு : அமைச்சர் சிவசங்கர் தகவல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை - ஆம்னி பேருந்து கட்டணம் மேலும் 5% குறைப்பு : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணைய அலுவலகத்தில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினருடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சொந்த ஊர் செல்வதற்குத் தக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி இன்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்துத் துறை சார்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு இதேபோன்று கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆம்னி உரிமையாளர்களிடம் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி 25% கட்டணம் குறைக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு மேலும் 5% குறைக்கப்பட்டு 30% கட்டணம் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 30% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories