தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : தமிழ்நாடு காவல்துறையின் முழு விளக்கம் என்ன ?

ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : தமிழ்நாடு காவல்துறையின் முழு விளக்கம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு கடந்த 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்றும் போலியான குற்றச்சாட்டை மாறி மாறி ஆளுநர் மாளிகை முன்வைத்து வருகிறது. மேலும் குற்றவாளி மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போலியான குற்றசாட்டை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.

இந்த நிலையில், ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு தலைமை காவல் இயக்குனர் டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி அருண் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சிங்கா உள்ளிட்டோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தன.

செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், " சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கடுக்காய் வினோத் எங்கிருந்து வந்தார் என முழுமையாக ஆய்வு செய்ததில், நந்தனம் சிக்னலில் இருந்து தொடர்ச்சியாக நடந்தே ஆளுநர் மாளிகை வரை கையில் பையுடன் வந்துள்ளார். சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது தனது பையை தூக்கி வீசிவிட்டு தான் வைத்திருந்த 4 பெட்ரோல் குண்டுகளை சட்டைபையில் மறைத்து வைத்து அங்கிருந்து நீதிமன்றம் தாண்டி சென்றுள்ளார். நீதிமன்றம் தாண்டி செல்லும் பொழுது அவர் கையில் வைத்திருந்த பை எதுவும் இல்லாமல் இருந்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் : தமிழ்நாடு காவல்துறையின் முழு விளக்கம் என்ன ?

அங்கிருந்து அவர் நேரடியாக சென்று ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசும் முயற்சித்துள்ளார். தனியாக பாதசாரியை போன்று நடந்து வந்து 4 குண்டுகளில் இரண்டு குண்டுகளை உள்ளே வைத்துக் கொண்டு மீதமுள்ள இரண்டை மட்டும் வீசி உள்ளார்.காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து காவலர்கள் மட்டுமே அதை தடுத்து அவர்களிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கியுள்ளனர். உடனடியாக ரோந்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது

கடந்த 2022 ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மயிலாடுதுறையில் ஆளுநர் கான்வாய் வாகனம் கடந்து சென்ற பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் கருப்பு கொடிகளை சாலையில் வீசினர். ஆளுநரின் கான்வாய் வாகனம் முழுமையாக சென்ற பின்னர் அவை பின்னால் வந்த வாகனங்கள் மீது தான் விழுந்தன. அந்த விவகாரத்தில் ஆளுநர் தாக்கப்படவில்லை. இதைதான் வீடியோ காட்சிகளும் தெரிவிக்கின்றன. அவர் தாக்கப்பட்டாரா என்பது குறித்து பதிவு தவறானது. எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவித்தார்கள். ஆனால் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.டிஜிபி சென்னை பாதுகாப்பான நகரம் என பல ஆய்வுகளில் தெரிவித்து வருகின்றன. சென்னை மாநகரம் அமைதியாக தான் உள்ளது" எனத் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories