தமிழ்நாடு

50 சவரன் நகை திருட்டு : 30 ஆண்டுக்கு பிறகு குற்றவாளி கைது - போலிஸார் துப்பு துலக்கியது எப்படி?

நகை திருட்டு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியைச் சென்னை போலிஸார் கைது செய்துள்ளனர்.

50 சவரன் நகை திருட்டு : 30 ஆண்டுக்கு பிறகு குற்றவாளி கைது - போலிஸார் துப்பு துலக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியைச் சேர்ந்வர் இப்ராகிம். இவரது வீட்டில் 1993ம் ஆண்டு நான்கு பேர் கொண்ட கும்பல் புகுந்து 50 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கை வளசரவாக்கம் போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கொள்ளையில் ஈடுபட்ட முத்து, தீர்த்தமலை, மகேந்திரன், சக்திவேல் ஆகிய நான்கு பேரை போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதற்கிடையில் குற்றவாளி தீர்த்தமலை மற்றும் முத்து ஆகிய இருவர் உயிரிழந்தனர். பின்னர் மகேந்திரன், சக்திவேலுக்கு 1998ம் ஆண்டு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து இவரும் தலைமறைவாகவே இருந்து வந்தனர். மேலும் வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் அவர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

50 சவரன் நகை திருட்டு : 30 ஆண்டுக்கு பிறகு குற்றவாளி கைது - போலிஸார் துப்பு துலக்கியது எப்படி?

இதையடுத்து அவர்களை தேடும் பணி போலிஸாருக்கு சவாலான காரியமாக மாரியது. முற்றிலுமாக இருவரும் தங்களது உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் குறித்த தகவல்கள் கிடைப்பது போலிஸாருக்கு சிக்கலாக இருந்தது. இதனால் அவர்களை தேடும் பணி ஆண்டுக்கணக்காக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மகேந்திரனை போலிஸார் கைது செய்தனர். பிறகு அவர் கொடுத்த தகவல் படி தலைமறைவாக இருந்த சக்திவேலை போலிஸார் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்த போது இவர்கள் இருவரும் வாலிபர்களாக இருந்தனர். இதனால் அவர்களை அடையாளம் காண்பது போலிஸாருக்கு சிரமமாக இருந்தது. இந்த சவாலுக்கு இடையில்தான் குற்றவாளிகளை போலிஸார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது தொடர் தேடுதல் வேட்டையில் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories