தமிழ்நாடு

"நாட்டை அழிக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" : மகளிர் உரிமை மாநாட்டில் பெண் தலைவர்கள் சூளுரை!

இந்திய நாட்டை அழித்து வரும் மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என ஆனி ராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

"நாட்டை அழிக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" : மகளிர் உரிமை மாநாட்டில் பெண் தலைவர்கள் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டை யொட்டி, தி.மு.க மகளிர் அணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி , ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா ,ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங். செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், பீகார் அமைச்சர் லெஷி சிங் உள்ளிட்ட INDIA கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

"நாட்டை அழிக்கும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" : மகளிர் உரிமை மாநாட்டில் பெண் தலைவர்கள் சூளுரை!

இதில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ்,"முற்போக்கு சிந்தனையாளர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டின் சிறந்த அடையாளமாக திகழ்கிறார். பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைஅதிகரித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். மகளிர் உரிமை, பாலின சமநிலை, பெண்களுக்கு சொத்தில் உரிமை என பல்வேறு திட்டங்களிலும் சமாஜ்வாதி கட்சி அரசுக்கு தமிழ்நாடு தான் முன்மாதிரி" என தெரிவித்துள்ளார்.

பின்னர் பேசிய CPI இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, "பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி உதவி கோரி கதறி அழுததும் நம் கண்முன்னால் தான் நடந்தது. பெண்களுக்கு எதிரானகொடுமைகள் முன்பும் இருந்தாலும் இப்போது எண்ணிக்கையில் மிக அதிகமாகவும், மிகவும் குரூரமாகவும் உள்ளது.

ரயில்களில் பயணிகளை காப்பாற்ற வேண்டிய காவலர்கள், பயணிகளை சுட்டுக்கொல்லும் நிலை இப்போது உள்ளது. மதசார்பற்ற இந்த நாட்டில் இப்போது எங்கும் கேட்கிறது ஜெய்ஸ்ரீராம் என்ற குரல். இத்தகைய இக்கட்டான சூழலில் தான் இந்த மகளிர் உரிமை மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories