
சென்னை மதுரவாயில் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது கார் மேற்கு சி.ஐ.டி நகர் அருகே சென்றபோது பொதுமக்கள் சிலர் கூட்டமாகச் சாலையில் நின்று கொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்தி அங்குச் சென்று அமைச்சர் விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த உணவு டெலிவரி இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது.
உடனே பொதுமக்கள் உதவியுடன் இளைஞரை மீட்டு தனது காரி ஏற்றி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் வேறு காரில் ஏரி அமைச்சர் அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து மருத்துவமனையைத் தொடர்புகொண்டு இளைஞரின் உடல் நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த செயலுக்குப் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.








