தமிழ்நாடு

”உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு”.. கலாநிதி வீராசாமி MP பெருமிதம்!

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என கலாநிதி வீராசாமி எம்.பி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

”உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு”.. கலாநிதி வீராசாமி MP பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசு பிசியோதெரபிஸ்ட் சங்கத்தின் சார்பில் உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்பட்டது. இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கலாநிதி வீராசாமி எம்.பி, " தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அனைத்து திட்டங்களுக்கும் முன்னுரிமை அளித்து வரப்படுகிறது.. அதிலும் இலவச பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெண்களுக்குப் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடுதான் திகழ்ந்து வருகிறது. அதற்குக் காரணம் தமிழ்நாட்டின் சுகாதார கட்டமைப்புதான். தற்போது, உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நிச்சயம் முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் பலரும் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வருவார்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories