தமிழ்நாடு

பைக் வீலிங் .. பிரபல யூடியூபர் TTF வாசன் சென்னையில் கைது : போலிஸ் அதிரடி நடவடிக்கை!

அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்த பிரபல யூடியூபர் TTF வாசனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

பைக் வீலிங் .. பிரபல யூடியூபர் TTF வாசன் சென்னையில் கைது : போலிஸ் அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருவார். மேலும் இவர் பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாகச் செல்லுவது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இவர் அதிவேகமாக பைக்கை ஓட்டுவதற்கு போலிஸார் வழக்குப் பதிவு செய்து எச்சரிக்கை விடுத்தாலும், மீண்டும் மீண்டும் வேகமாகவே பைக்கை ஓட்டி வருகிறார். இவர் இப்படி பைக் ஓட்டுவதைப் பார்த்து விட்டு இளைஞர்கள் பலரும் வேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.

பைக் வீலிங் .. பிரபல யூடியூபர் TTF வாசன் சென்னையில் கைது : போலிஸ் அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு ரூ.35 லட்சம் விலை உயர்ந்த SUZUKI நிறுவனத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்றபோது வீலிங் செய்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் ஓட்டிவந்த வாகனமும் சுக்கு நூறாக நொறுங்கியது.

பின்னர் அவரை மீட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னைக்கு TTF வாசன் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் TTF வாசன் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பைக் வீலிங் .. பிரபல யூடியூபர் TTF வாசன் சென்னையில் கைது : போலிஸ் அதிரடி நடவடிக்கை!

இதையடுத்து சாலையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் போலிஸார் TTF வாசன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று TTF வாசனை காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் TTF வாசன் பதுங்கி இருந்தார். இதையடுத்து காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலிஸார் இன்று அதிகாலை TTF வாசனை கைது செய்தனர். பின்னர் அவரை காஞ்சிபுரம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories