தமிழ்நாடு

“வெள்ளை அறிக்கை வாய்ப்பில்லாத ஒன்று..” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 5213 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“வெள்ளை அறிக்கை வாய்ப்பில்லாத ஒன்று..” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மயூரவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேச பெருமாள் மற்றும் பேயாழ்வார் திருக்கோயில் ராஜகோபுரம் பெருமாள் தாயார் ஆண்டாள் மற்றும் சுற்று பிரகார சன்னதிகளின் திருப்பணி தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு கலந்து கொண்டு ரூ.3 கோடி செலவில் நடைபெற உள்ள முன் கருங்கல் மண்டபம் அமைப்பது, மடப்பணி அரங்கம் மற்றும் கோயில் அலுவலகம் அமைப்பது, கோயில் சீரமைத்த புதுப்பிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, "மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.3 கோடி செலவில் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த திருக்கோவிலின் பணிகள் விரைவாக முடிக்கப்படும். தமிழ்நாட்டில் வெகு ஆண்டுகளாக திருக்கோயில்களின் பணி நிறைவு பெற்று நன்னீர் ஆறிருவிழா நடைபெறாமல் உள்ள திருக்கோயில்களுக்கு விரைந்து நடத்தி முடித்திட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“வெள்ளை அறிக்கை வாய்ப்பில்லாத ஒன்று..” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !

தமிழ்நாட்டில் இன்று மட்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று வரை 1075 திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்து அறநிலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.5213 கோடி மதிப்புள்ள 5769.60 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மட்டும் கோயில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது இதில் உபயோதாரர் நிதியாக ரூ.40 கோடி மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 81 திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோயில் நிலங்களில் வாடகை இருக்கக்கூடியவர்கள் நான்கு லட்சத்திற்கும் மேல் உள்ளார்கள். அதுமட்டுமின்றி அதனை வெள்ளை அறிக்கையாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்பது வாய்ப்பில்லாத ஒன்று. மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறக்கூடிய குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இதுவரை கோயில் நிலங்கள் வாடகை குத்தகைத் தொகையாக ரூ.400 கோடி வரை வாடகை தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

“வெள்ளை அறிக்கை வாய்ப்பில்லாத ஒன்று..” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !

கோயில் நிலங்கள் மீட்பு தொடர்பாக முதலமைச்சரின் உத்தரவில் பேரில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து வருகிறது. எனவே அக்குழு அளிக்கும் அறிக்கையின் பெயரில் விரைவில் தீர்வு எடுக்கப்படும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாகவும், கோயில் நிலங்களின் பட்டா சிட்டா உள்ளிட்ட பத்திரங்கள் பெயர் மாற்றம் தொடர்பாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக 10,000 ஏக்கர் மேல் கோயில் நிலங்கள் அபகரிப்பு செய்து பட்டா சிட்டா மாற்றம் செய்ததை திருத்தி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோயில்களின் திருப்பணிகள் அனைத்தும் இந்து சமய அறநிலைத்துறை மட்டுமே செய்ய வேண்டும். குறிப்பாக உபயதாரர்கள் வழங்கிய நிதியை விட இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோயில் திருப்பணிகளுக்கு அளிக்கப்பட்ட நிதியே அதிகம். குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து திருக்கோயிலின் பணிகளுக்காக உபயோதாரர்கள் வழங்கக்கூடிய நிதி முழுமையாக கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்கின்ற நம்பிக்கை உபயோதாரர்களுக்கு உண்டு.

சென்னையில் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாக எங்கும் மழை நீர் தேங்க வில்லை. குறிப்பாக வருகின்ற பருவ மலைக்கு முன்பாகவே நடைபெற்று வரக்கூடிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணிவானது முடிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவின் பெயரில் பணியை துரிதப்படுத்தி முடிக்கப்படும்." என்றார்.

banner

Related Stories

Related Stories