தமிழ்நாடு

#HBDPeriyar145 : “இந்த ஆட்சி எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !

தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

#HBDPeriyar145 : “இந்த ஆட்சி எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆம் தேதி என இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் முப்பெரும் விழாவாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

#HBDPeriyar145 : “இந்த ஆட்சி எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !

இன்று தந்தை பெரியாரின் 145-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பகுத்தறிவு பகலவன், பெண் சுதந்திரத்திற்காக போராடியவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க அரும்பாடு பட்டவர், இவரது பிறந்தநாள் தமிழ்நாட்டில் 'சமூக நீதி நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டும் வருகிறது.

#HBDPeriyar145 : “இந்த ஆட்சி எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !

அந்த வகையில் இன்று நடைபெறும் முப்பெரும் விழாவை முன்னிட்டு தற்போது வேலூரில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூரில் உள்ள அண்ணா சாலையில் தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சமூகநீதி நாள் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

தொடர்ந்து தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு திமுக இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்! மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து - மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர். தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!

பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே! பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories