தமிழ்நாடு

காவல்நிலையத்தின் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.. மனைவியுடனான சண்டையால் விபரீத முடிவு !

காவல்நிலையத்தின் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் மீட்டனர்.

காவல்நிலையத்தின் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.. மனைவியுடனான சண்டையால் விபரீத முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருக்கு திருமணம் முடிந்து நிறமாத கர்ப்பிணியாக மனைவி ஒருவர் உள்ளார். , சூர்யா சமீப காலமாக போதைப் பழக்கங்களில் ஈடுபட்டு அடிக்கடி ரகளியல் ஈடுபட்டு வந்ததால் மனைவிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று சூர்யா போதையில் சென்று அவரது மனைவியிடத்தில் தகராறு செய்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். அது தொடர்ந்து காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

அங்கு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்க இருந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் காவல் நிலைய கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தான் இங்கிருந்து குதித்து விடப் போவதாகவும் நெருங்கி வந்தால் நிச்சயம் குதித்து தற்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

காவல்நிலையத்தின் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.. மனைவியுடனான சண்டையால் விபரீத முடிவு !

இதை அடுத்து பல்லாவரம் உதவியாணையாளர் வெங்கடகுமார் தாம்பரம் காவல் துணை ஆணையாளர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் அந்த போதை வாலிபரிடம் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அந்த வாலிபர் சமாதானம் ஆகாமல் வெகு நேரம் தன் கையில் வைத்திருந்த கூர்மையான இரும்பு பொருளினால் தன் உடலில் அறுத்துக் கொண்டார்.

எனினும், நாலு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பல்லாவரம் உதவி ஆணையாளர் வேங்கட்குமார் அந்த வாலிபரிடம் சதுரயமாக பேசி சமாதானம் செய்து தண்ணீர் தொட்டியில் இருந்து லாவகமாக கீழே இறக்கினார் பின்னர் அந்த வாலிபருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் அமர்த்தி கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories