தமிழ்நாடு

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

சிந்தனையற்ற முறையில் உதயநிதி ஸ்டாலினைத் தாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஓரங்கட்டப்படும் நிலையைத் தேடி வரவழைத்துக் கொள்கிறது.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சிந்தனையற்ற முறையில் தாக்குவதால், தனக்குத் தானே சுருக்கிட்டுக் கொள்கிறது பா.ஜ.க. என்று 'தி வயர்' இணைய தளத்தில் அதன் ஆசிரியர் (அரசியல்) அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஷ்டா எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் 'தி வயரில்' வெளியான சிறப்புக் கட்டுரை வருமாறு:-

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலின் அவர்கள் சனாதன தருமம் பற்றிக் குறிப்பிட்ட கருத்துகள் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளன. சனாதன தருமத்துக்கு ஸ்டாலின் தெரிவித்த இந்தக் கண்டனத்தால் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், திராவிடத் தலைவர் இந்துக்களை பூண்டோடு அழிக்க வேண்டும், இனப் படுகொலை செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்ததாகக் கூறுகின்றனர்.

எனினும் அரசியல் போரின் கடினமான கட்டத்தில் இந்துத்துவா கருத்தியல் கொள்கையாளர்களுக்கும் சமூக நீதி அரசியலுக்கும் இடையில் ஆழமாக வேரூன்றிய கருத்து வேறுபாடு ஒரு மட்டத்திலும், இந்து வைதீக (பழமைவாத) முறைக்கும் 19 ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதி களுக்கு மிடையிலான வரலாற்று ரீதியிலான வேறுபாடுகள் இன்னொரு மட்டத்திலும் என இருக்கின்றன.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

சனாதன தருமக் கருத்துருவுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாடு செப்டம்பர் 2, சனிக்கிழமையன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய உதயநிதி, “சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் சூட்டுவதற்குப் பதிலாக சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பெயரிட்டமைக்காக இந்த மாநாட்டின் அமைப்பாளர்களை நான் பாராட்டுகிறேன்" என்று பேசினார்.

"நாம் சிலவற்றை வெறுமனே எதிர்க்க முடியாது; நாம் ஒழிக்க வேண்டிய சில விஷயங்க ளும் இருக்கின்றன. கொசுக்கள், டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றை நாம் எதிர்க்கமுடியாது. அவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும். சனாதனமும் இதுபோன்றதேயாகும். சனாதனத்தை எதிர்ப்பதல்ல; அழிப்பதே நமது முதல் பணியாக கடமையாக இருக்க வேண்டும் - என அவர் பேசினார்.

இந்தப் பேச்சு பா.ஜ.க. வினரிடமிருந்து கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியது. அதனுடைய ஐ.டி. பிரிவின் தலைவர் அமித் மால்வியா, உதயநிதியின் பேச்சு "பாரதத்தின் மக்கள் தொகையில் 80% விழுக்காட்டினராக இருக்கக்கூடிய சனாதனிகளை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்பு" என்று விளக்கமளித்தார்.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

இராஜஸ்தானில் தேர்தல் பேரணி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தச் செய்தியை புதிதாக அமைக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா (INDIA) கூட்டணிக்கு ஒரு அறைகூவலாக எடுத்துச்சென்றார். "ஒரு முதலமைச்சரின் மகன் (உதயநிதியைக் குறிக்கும் வகையில்) அதுவும் தமிழ்நாடு முதலமைச்சரின் மகனாக இருக்கக் கூடியவர் சனாதன தருமத்தை அழிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

வாக்கு வங்கி மற்றும் சமாதானப்படுத்தும் அரசியலுக்காக இவர்கள் சனாதன தரும ஒழிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது நமது கலாசாரம், வரலாறு மற்றும் சனாதன தருமம் ஆகியவற்றைப் புண்படுத்துவதாகும், அவமதிப்பதாகும்." - இவ்வாறு அமித்ஷா கூறினார். உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மறுத்து தனது பேச்சு திரித்துக் கூறப்பட்டு வருவதாக பதில் கொடுத்தார்.

"சனாதன தருமத்தைப் பின்பற்றுகின்ற மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென்று ஒருபோதும் நான் அழைப்பு விடுக்கவில்லை. சனாதன தருமம் என்பது மக்களை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும்பிரிக்கிற ஒரு கொள்கையாகும். சனாதன தருமத்தை வேருடன் பிடுங்கி எறிவது மனிதாபி மானத்தையும் மனித சமத்துவத்தையும் உயர்த்திப் பிடிப்பதாகும்”. என ஓர் அறிக்கையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

"நான் எந்த அறைகூவலையும் அது நீதிமன்றத்திலாக இருந்தாலும், மக்கள் மன்றத்திலாக இருந்தாலும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறேன். தவறான செய்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்" என்று கூறியவர், "சனாதன தருமமே பல தீமைகளுக்கும் காரணமாக இருந்தது". என்றும் தொடர்ந்து கூறினார்.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

இந்து மதத்துக்கும் இந்துத்துவத்துக்குமான போட்டியில் தென்னிந்தியாதான் இறுதி எல்லைப் பகுதி. உண்மையில், தமிழ்நாடு அமைச்சர் சனாதன தருமத்துக்கு அவருடைய கருத்தியல் அறைகூவல் / கொள்கை அறை கூவல் மீது விளக்கமளித்து அதே பேச்சில் கூறியவற்றை பா.ஜ.க தனது தாக்குதலுக்காக எடுத்துக்கொண்டது.

"சனாதன தருமம் என்பது என்ன? இந்தப் பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனமென்பது சமத்துவத்துக்கு, சமூக நீதிக்கு எதிரானது என்பது தவிர வேறுஎன்ன? சனாதனம் என்பதன் பொருள் என்ன?அது நிலையானது மாற்ற முடியாதது; யாரும் அதைக் கேள்வி கேட்கமுடியாது. அதுதான் அதன் பொருள்" என்று உதயநிதி கூறினார்.

அவர் தொடர்ந்து, "சனாதன தருமம் பெண்களுக்கு என்ன செய்தது? கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளியது [முன்பு இருந்த உடன் கட்டை ஏறும் வழக்கம்]. விதவைப்பெண்களின் தலைகளை மொட்டையடித்து அவர்களை வெள்ளைச் சேலைகளை உடுத்திக் கொள்ளச் செய்தனர், குழந்தைத் திருமணங்களும் கூட நடந்தன” -என்று கூறினார். சனாதனத்தின் நெகிழ்ச்சியில்லாத, மாறாத்தன்மையை திராவிடக் கொள்கையுடன் ஒப்பிட்ட, அது சமத்துவத்துக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும் போராடியதெனக் உதயநிதி கூறினார்.

"நம்முடைய தலைவர் கலைஞர் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் கோவிலில் அர்ச்சராகலாம் என்பதற்கான சட்டத்தை இயற்றினார். நம்முடைய முதலமைச்சர் [மு.க.ஸ்டாலின்], கோயில்களில் அர்ச்சகர்களாவதற்குப் பயிற்சி பெற்றவர்களை கோயில்களில் பணியமர்த்தினார். இதுதான் திராவிட மாடல்" என உதயநிதி கூறினார்.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

மனிதர்களிடையே பாகுபாடு!

*திராவிடம் தி.மு.க.வால் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை என்ன செய்தது? பெண்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யவும், மாணவிகளின் கல்லூரிப் படிப்பிற்காக உதவியாக மாதங்தோறும் ரூ1000 உதவித்தொகை வழங்கியும் திட்டம் தந்தது என அவர் கூறினார்.

இந்தச் சொற்போர் தொடங்கியதிலிருந்து, இந்தப் பேச்சிலிருந்து பின்வாங்க உதயநிதி ஸ்டாலின் மறுத்தார். சனாதன தருமத்தின்மீது தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி சனாதனக் கொள்கைகளில் மனிதர்களிடையே பாகுபாடு என்பது ஆழப்பதிந்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.

இந்தச் செய்தி பிளவுபடுத்தும் மற்றுமொரு அரசியல் பிரச்சினையாக ஆகியிருந்தபோதிலும், பா.ஜ.க.வின் இந்து தேசியவாத அரசியலுக்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் வரலாற்றில் நீண்ட தொலைவு பின்னோக்கிச் செல்கிறது. இந்துத்துவ குழுக்களிடமிருந்து

முரண்படும் அம்பேத்கரின் பார்வை:-

சனாதன தருமம் என்பது. சமுதாயங்களுக்கு 'அவரது (சாதி) கடமைகளை, தொழில்களை, ஒதுக்கீடு செய்து, இந்தியாவில் சாதி முறையை வரையறுப்பதற்காக புகழ்பெற்றது; நம்பிக்கை பெற்றது. சனாதன தரும செயற்பாடுகள், நடைமுறைகள் எப்போதும் மாறாமல் நிலையாக இருக்கும் விதிகளைப் பற்றிப் பேசுகின்றன என திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அந்தச் சட்டங்களின் விளைவாக பாகுபடுத்தும் சாதிய பழக்கவழக்கங்கள் நிறுவனப்படுத்தப்பட்டு, இந்து சமூகத்தில் பார்ப்பனிய மேலாதிக்கநிலையை தொடர்ந்து இருக்கச் செய்தது.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரைப் பொருத்தவரை சனாதனம் என்பது "முரண்டு பிடிக்கும் வைதீக (பழமைவாத) இந்து மதத்தின் பழைய பெயராகும்" - என்றார். 1943ஆம் ஆண்டில், "தீண்டத்தகாதவர்களுக்கு எதிரான இந்துக்களின் சனாதனம் என்பதிலிருந்து கொள்கையளவிலும், விளைவிலும் யூதர்களுக்கு எதிராக நாஜிகளின் செமிட்டிக் இன எதிர்ப்பு எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.” - என்று எழுதினார்.

அண்மைக்காலமாக இந்து எனும் ஒரே தன்மையை நிலைநிறுத்துவதற்காக இந்துத்துவ அமைப்புகள் சனாதன தருமம் என்பதை எங்களின் உதவிக்கு அழைத்துள்ளன. இந்தியா முழுமையும் உள்ள வேறுபட்ட மத நடைமுறைகள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றன. சாதி எதிர்ப்பு அமைப்புகள், இந்துத்துவ சக்திகளால் செய்யப் படும்.

அப்படிப்பட்ட நிலைநிறுத்தல் முயற்சிகளை இயற்கையாகவே எதிர்த்துள்ளன. தற்காலத்தில் சாதிய முறையை அழியாமல் நிலைத்திருக்கச் செய்தலுக்காக அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. பா.ஜ.க. தனது அரசியல் வசதிக்கேற்றபடி உதயநிதியின் கூற்றுகளுக்கு விளக்க மளித்திருக்கலாம், ஆனால் அது துன்பங்களின் பிறப்பிடம் எனப்படும் பான்டோரா பெட்டியை (PANDORA'S Box) திறந்துள்ளது.

பார்ப்பன - பனியாக்களின் கட்சி என்று நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த காவிக்கட்சி இந்த முகவரிச் சீட்டை கழற்றி எறிவதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பிறருடன் உடன்பாடான முயற்சிகளை மேற்கொண்டது.

இந்துத்துவாவும் சாதி எதிர்ப்பு அரசியலும் ஒன்றுக்கொன்று வரலாற்று ரீதியாக பகையாகவே இருந்துள்ளன. இந்துத்துவம் என்பது பாகுபடுத்துவது உள்ளார்ந்த பார்ப்பனியம் உடையது என்கிற புரிதல், திராவிட, அம்பேத்கரிய மற்றும் மண்டல் (குழு ஆதரவு) கட்சிகளை நீண்ட காலமாக காவிக் குடைக்கு அப்பால் வைத்திருந்தது.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

எனினும், இந்த முரண்பாடுகளை நீக்கு வதற்காக, பின்னுக்குத் தள்ளுவதற்காக மோடி அவர்கள் தேசியவாதம், முன்னேற்றம் ஆகியவற்றைச் சுற்றிலும் அரசியல் விளக்கவுரை களெனும் ஆடையை நெய்தார். வேறு எதையும் விட முஸ்லீம் எதிர்ப்புணர்வுக்கு மிக அதிகமாக எண்ணெய் ஊற்றி வெறுப்பை வளர்ப்பதன் மூலமாக இந்துத்துவத்தைப் பிரபலப்படுத்த லாம் என முடிவு செய்து, அரசியல் தளத்தில் இந்த முரண்பாடுகளுக்குள் செல்ல வேண்டாமென மோடியின் தலைமையின் கீழான பா.ஜ.க. கவனமாக இருந்தது.

உண்மையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் (தாழ்த்தப்பட்ட) சமூகத்தினரில் கணிசமான பகுதியினரை வெல்வதற்கு கட்சி செய்திட்ட வெற்றிகரமான முயற்சிகள் பா.ஜ.க.வின் அண்மைக்கால வெற்றிக்குக் காரணமாகக் கூறப்பட்டன; மேற்குறிப்பிட்ட பிரிவினரைப் பொருத்தவரை சாதியப் பாகுபாடு என்பது உயிர்வாழும் உண்மையாகும்.

சனாதன தருமத்தில் உள்ளார்ந்திருக்கும் சாதிய முறைக்கு எதிராகப் பேசிய உதயநிதியின் மீது தாக்குதலைத் தீவிரப்படுத்துவதன் மூலமாக பா.ஜ.க. சமூக நீதி எனும் வாக்கு வன்மைக்கு, பேச்சுத்திறனுக்கு அலட்சியமாக முக்கியத்துவம் கொடுக்கும் இடருக்குள் சிக்கிக் கொள்கிறது. இந்த சமூகநீதி பற்றிய பேச்சுத்திறன் இந்துத்துவத்தை பலமுறை கடந்த காலங்களில் துருப்புச் சீட்டாக இருந்து வீழ்த்தியுள்ளது.

பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால்பதிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறது, வெளிப்படையாக இந்துத்தவா கொள்கையைப் பேசுவது பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புக்குக் கேடுவிளைவிப்பதாக இருக்குமென்பதை மாநிலத் தலைவர் (அண்ணாமலை) நன்கு அறிந்திருக்கிறார். இந்து சமய வைதீக (பழமைவாத) முறையானது, சமூக சீர்திருத்த அமைப்புகளின் வளர்ந்து வரும் செல்வாக்கினைத் தடுத்திட பாரத் தர்மா மகாமண்டல், சனாதன தருமா, இரக்ஷினி சபா, இலாகூர் சனாதன தரும சபா ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழுக்- கள் சனாதன தருமக் கொள்கைகளின்படி இந்து என்கிற ஒரே தன்மையை, அடையாளத்தை ஒரே மாதிரியானதாக ஆக்கிட, தரநிலைப்படுத்திடவும் கூட பெரிதும் முயன்றன.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அப்போதிருந்து இந்தக் குழுக்களை நம்பத்தகுந்த ஆலோசகர்களாக எதிர்பார்த்தனர். மோடியும் அமித்ஷாவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகத்தினரையும் எட்டிப்பிடித்திருந்த போதிலும், அவற்றின் (பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்) தற்போதைய இந்துத்துவ ஆதரவு செயல்முறைகள் 19 ஆம் நூற்றாண்டு இந்து சமய வைதீக (பழமை வாத) முறையின் முயற்சிகளை ஒத்திருக்கின்றன.

ஆரியசமாஜம், இராதா சோமிஸ் அல்லது இராம கிருஷ்ண மிஷன் போன்ற சீர்திருத்த அமைப்புகள் அவற்றின் கடந்த 19 ஆம் நூற்றாண்டின் செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு உள்ளதாய் இருக்கும் நிலையைப் படிப்படியாகத் தோற்றுவித்தன. இந்த அமைப்புகளை விட- வும்பா.ஜ.க.விடம் நெருக்கம் கொண்டன. வைதீக முறைக்கும் இந்தக் குழுக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் தற்காலத்தில் சமமாக்கப்பட்டன.

இருப்பினும், சனாதன தருமத்தை வலியுறுத்துவதன் மூலமாக 'இந்துத்துவ ஒரேதன்மை' என்கிற அடையாளத்தை நிலைப்படுத்தும் முயற்சியில் தொடருமானால். இரண்டு அமைப்புகளுக்கும் இடையிலான வாலாற்று ரீதியானவேறுபாடு மீண்டும் குறிப்பிடத்தக்கதாக ஆகிவிடும்.

அதுபோலவே, 19 ஆம் நூற்றாண்டின் சமூகசீர்திருத்தவாதிகளான சுவாமி விவேகானந்தரும், நாராயணகுருவும் சங் பரிவாரத்தினரால் இந்து சமயத்தின் தூதுவர்கள் என அடிக்கடி துதி பாடினர்; மேற்கூறிய சீர்திருத்தவாதிகள் சனாதன கொள்கைகளிலுள்ள சாதி நடைமுறைகளை வலிமையாகத் தாக்கிப் பேசினர், செயற்பட்டனர்.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

சனாதன தருமத்தை உதயநிதி ஸ்டாலின் கண்டனம் செய்ததும் துல்லியமாக இந்த ஆதாரத்தின் அடிப்படையில் தான். அண்மையில் வெளியிடப்பட்ட 'விவேகானந்தா சுதந்திரத்தின் தத்துவவாதி' எனும் நூலின் ஆசிரியர் வி.கோவிந்த் கிருஷ்ணா அவர்கள் 'தி ஒயர்' இதழுக்கு பேட்டியளித்தபோது, "சத்திரியர்களும், பிராமணர்களும் கீழ்ச்சாதி யினரை சமூக, பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்கியதுதான், உலகின் முன்னணி நாகரிகங்களில் ஒன்றாக இருந்த இந்தியாவின் வீழ்ச்சிக்கும் சரிவிற்கும் காரணமாகும் என விவேகானந்தர் கருதினார். மேலை நாடுகளில் சுற்றுப் பயணம் முடித்த பிறகு தென்னிந்தியாவில் ஆற்றிய தொடர்சொற்பொழிவுகளில், தீண்டாமையையும் அனைத்துவகையான சாதி உரிமைகளையும் ஒழித்திட அழைப்பு விடுத்தார். என்று தெரிவித்தார்.

இந்தியாவின் நாகரிக வீழ்ச்சிக்கு அயல்நாட்டினரின் படையெடுப்பைக் குறை கூறும் இந்துத்தவ பார்வையை, கருத்தை அவர் தள்ளுபடி செய்தார். “சாதிக்கு எதிராக கேரளத்தில் ஈழவர் இயக்கம் நடத்திய கட்சி சார்பற்ற முதலாவது இலக்கத்தின் மீது இது மாபெரும் செல்வாக்கு பெற்றது. நாராயண குருவும் விவேகானந்தரும் வேதாந்திகளாக இருந்தமையால் சாதி குறித்து இருவரின் கருத்துகளும், பார்வையும் பெருமள- வுக்கு ஒத்திருந்தன. இறுதியாக சாதியானது இந்தியாவிலிருந்து மறைந்து விடுமென விவேகானந்தர் நம்பினார் எனத் தோன்றுகிறது. சாதிப் பாகுபாடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. ஜனநாயகக் கருத்துகள் வளர்ச்சியடையும் பொழுது இறுதியில் சாதி மறைந்துவிடும் என விவேகானந்தர் கூறுகிறார்" என்று கோவிந்த் கிருஷ்ணா மேலும் கூறினார்.

எனினும், சாதிய நடைமுறைகள், செயற்பாடுகள் எந்த வகையிலும் மறைந்திடவில்லை; தற்கால இந்தியாவின் சமூகத்திலும் அரசியலிலும் கூட ஆழமாக வேரூன்றி இருக்கிறது. உதயநிதியின் குறிப்புரைகள் முன்னோக்கிச் சென்று முக்கியமான பிரச்சினையில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்தப் பிரச்சினைதான் சாதி ஒடுக்கு முறைக்கும், வன்முறைக்கும் உரிமைப் பறிப்புக்கும் வரலாற்று ரீதியான காரணமாக இருந்திருக்கிறது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் 'இந்திய விடுதலைப்போரில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கு என்னும் தலைப்பிலான ஒரு நூலை உதயநிதி வெளியிட்டார். திராவிடத் தலைவர் (உதயநிதி) மீது பா.ஜ.க, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு இந்த நூல் வெளியீடும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த நூலில் காந்தி படுகொலையும், ஒரு மனிதன் காலணியை நக்குவது போன்ற படமும் அட்டைப் படத்தில் முக்கியத்துவமளித்துப் வரையப்பட்டுள்ளன.

“உதயநிதி மீது குறியா? - தமிழ்நாட்டில் பா.ஜ.க நிச்சயம் ஓரங்கட்டப்படும்” : ‘The WIRE’ சிறப்புக் கட்டுரை!

அந்த நூலில் உள் பக்கங்கள் சில காலியாக விடப்பட்டிருந்தன. அதில், பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பங்கு மிகமிகக் குறைவே என்பதைக் குறிப்பிடும் வகையில் மூன்று சுழியங்களை (zeros) உதயநிதி வரைந்தார். குஜராத் மாநிலத்தில் படோட் பகுதியில் சனாதன தரும ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடையிலான குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மோடியின் சொந்த மாநிலமும் இந்துத்துவாவின் ஆய்வகமுமாகிய குஜராத்திலேயே கூட எவ்வாறு தொடர்ந்து தகராறுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை அவை விளக்குகின்றன. சாலாங்பூரில், சுவாமி நாராயண் பிரிவினரால், மாபெரும் ஹனுமான் சிலையின் பீடத்தில் ஒரு சுவரோவியம் வைக்கப்பட்டது தான் கருத்து வேறுபாடுகளுக்குக் காரணமாகி தீவிரமடைந்து கொண்டிருக்- கிறது. அந்த இடத்திற்கு ஊடகத்தினர் செல்லக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரைக் குறிப்பிட்ட காரியத்துக்கு எடுத்துக் கொண்டு தனது தலித் அரசியலை வெளியே தள்ளிட பா.ஜ.க. முயற்சிப்பதால் பா.ஜ.க.வுக்கு இது பெரும்பிரச்சினையாக சிக்கலாக ஆகிவிடக்கூடும். கருநாடகத்தில் பா.ஜ.க. வுக்கு ஆதரவாக இருந்த மிகுந்த செல்வாக்குள்ள லிங்காயத்துகளும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துகள் கொண்டுள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் துணைப் பிரிவுகளாக ஆக்கிட வகை செய்யும் ரோகினி கமிஷனின் அறிக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய மோடி அரசு 'யு டர்ன்' (U Turn) அடித்துள்ளது. இவையிரண்டும் சேர்ந்து இந்திய தேர்தல் அரசியலில் கட்டமைப்புப் பிழையின் விளைவை ஏற்படுத்தும் குற்றக் கோடாக ஆகலாம்.

சிந்தனையற்ற முறையில் உதயநிதி ஸ்டாலினைத் தாக்குவதன் மூலமாக தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஓரங்கட்டப்படும் நிலையைத் தேடி வரவழைத்துக் கொள்கிறது என்பது மாத்திரமல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பா.ஜ.க. தன்னைத்தானே பல சிக்கல் முடிச்சுகளில் சுருக்கிட்டுக் கொள்ளும் இடருக்கு ஆட்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு 'தி வயர்' இணையதள சிறப்புக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது

Related Stories

Related Stories