தமிழ்நாடு

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்கா கடத்தி வந்த பா.ஜ.க கவுன்சிலர்.. தனிப்படை அமைத்து அதிரடி கைது !

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு 1500 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை பா.ஜ.க கவுன்சிலர் செண்பகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்கா கடத்தி வந்த பா.ஜ.க கவுன்சிலர்.. தனிப்படை அமைத்து அதிரடி கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தடையை மீறி சிலர் இந்த போதை பொருட்களை இரகசியமாக மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் என கடத்தி செல்கின்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு கிடைக்கப்படும் தகவலின் பேரில் அவர்கள் விரைந்து தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் இதற்கு அதிரடி தடை என்பதால் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து இங்கு கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. இது போன்ற குற்றச்செயல்களில் பெரும்பாலும் அதிமுக, பாஜகவை சேர்ந்தவர்களே பிடிபடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட கஞ்சா கடத்திய வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்கா கடத்தி வந்த பா.ஜ.க கவுன்சிலர்.. தனிப்படை அமைத்து அதிரடி கைது !

மேலும் அதற்கு முன்னதாக சைக்கிளில் போதை பொருள் கடத்தி விற்பனை செய்து வந்த அதிமுகவை சேர்ந்தவர் பிடிபட்டார். அண்மையில் கூட பாஜகவை சேர்ந்த முக்கிய நபரும் கைது செய்யப்பட்டார். இப்படி தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் பாஜகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்கா கடத்தி வந்த பா.ஜ.க கவுன்சிலர்.. தனிப்படை அமைத்து அதிரடி கைது !

கேரளாவில் இருந்து புளியரை வழியாக செங்கோட்டைக்கு 1250 கிலோ குட்கா போதைப் பொருட்களை பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கோட்டை நகராட்சியில் 24-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் செண்பக ராஜன். பாஜகவை சேர்ந்த இவர் தற்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளார்.

ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1250 கிலோ குட்கா கடத்தி வந்த பா.ஜ.க கவுன்சிலர்.. தனிப்படை அமைத்து அதிரடி கைது !

குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் விவாகரத்தை தடுக்க தென்காசியில் தனிப்படை ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி அவர்களுக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் நள்ளிரவு புளியரை சுங்க சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது லாரியில் கடத்தி செல்லப்பட்ட குட்காவோடு குற்றவாளிகள் பிடிபட்டனர். சுமார் 1250 கிலோ

நேற்று கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த பாஜக நிர்வாகி தூத்துக்குடியில் கைதான நிலையில் இன்று பாஜக கவுன்சிலர் செண்பக ராஜன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் இதே செண்பகராஜன் சேலத்தில் இருந்து ராஜபாளையம் பகுதிக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்த போது போலீசில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories