தமிழ்நாடு

பெண்ணை காலால் எட்டி உதைத்த பா.ஜ.க நிர்வாகி சாவர்க்கர்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: போலிஸ் விசாரணை!

கன்னியாகுமரியில் இடத்தகராறு பிரச்சனையில் பெண் ஒருவரை பா.ஜ.க நிர்வாகி காலால் எட்டி உதைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை காலால் எட்டி உதைத்த பா.ஜ.க நிர்வாகி சாவர்க்கர்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: போலிஸ் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் சொத்து தொடர்பாகப் பிரச்சனை இருந்துள்ளது.

இதனால் அதேபகுதியைச் சேர்ந்த பா.ஜ.க ஒன்றிய கவுன்சிலரான சாவர்க்கர் மற்றும் மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சரோஜாவுக்கும் இவர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

அப்போது பா.ஜ.க ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் தனது காலால் சரோஜாவை எட்டி உதைத்துள்ளார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

பெண்ணை காலால் எட்டி உதைத்த பா.ஜ.க நிர்வாகி சாவர்க்கர்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: போலிஸ் விசாரணை!

இதையடுத்து போலிஸாரிடம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சாவர்க்கர், சசிகுமார், ராஜேஷ், சபிமோள் ஆகிய நான்கு பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துக் கூறும் சரோஜா, "கடந்த பல ஆண்டுகளாக சாவர்க்கர் தன்மீது விரோதம் கொண்டு அவ்வப்போது பிரச்சனையில் ஈடுபட்டு வந்தார். தற்போது சபி மோளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சாவர்க்கர் புகுந்து தன்னை கொடூரமாகத் தாக்கியதில் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு காவல்துறை உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories