தமிழ்நாடு

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவுப் பொருளாக இருக்கக் கூடிய சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று. இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.

இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலை, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!

இந்நிலையில் இந்தாண்டு தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவுப் பொருளாக இருக்கக் கூடிய சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் விளையும் மரவள்ளி கிழங்கை கொண்டு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சேகோ உற்பத்தி ஆலைகள் உள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த ஜவ்வரிசி மிகவும் ருசியானதாக இருப்பதால் சேலம் ஜவ்வரிசிக்கு வட மாநிலங்களில் மவுசு அதிகம்.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!

இந்த நிலையில் தான் கடந்த 1980 ஆம் ஆண்டு தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு சங்கமாக சேலத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சேகோ சார்வ் என்ற கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 400 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோசர்வ் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டுறவு விற்பனை மையம் மூலமாக ஜவ்வரிசியானது வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாரம்பரியமிக்க ஒரு உணவுப் பொருளாக இருக்கக் கூடிய சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து முயற்சி மேற்கொண்டதில் தற்போது மத்திய அரசு சார்பில் சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று சேலம் சேகோசர்வ் வளாகத்தில் நடைபெற்றது.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!

சேகோசர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு. லலித் ஆதித்ய நீலம் ஐஏஎஸ் அவர்களின் தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலரான சஞ்சய் காந்தி சேலம் ஜவ்வரிசிக்கான புவிசார் குறியீடு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்களிடம் வழங்கினார்.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “சேலத்தின் பாரம்பரியமிக்க உணவான ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், சேலம் ஜவ்வரிசி உலகம் முழுவதும் ஒரு புகழ்பெற்ற உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் என அனைவரும் பயனடைவார்கள்.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!

1820 இல் பஞ்சம் ஏற்பட்ட போது, மாற்று உணவாக கிழங்கு இருந்தது. தற்போதும் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக மாற்று உணவாக ஜவ்வரிசி உள்ளது. வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிராக மரவள்ளி கிழங்கு உள்ளது. மரவள்ளி கிழங்குக்கு அதிக மழை தேவையில்லை. சேலம் பகுதியில் விளையும் மரவள்ளி கிழங்கு மாவுச்சத்து நிறைந்ததாக, ருசியாக இருப்பதால் இங்கு உற்பத்தியாகும் ஜவ்வரிசியும் தரமாக உள்ளது. எனவே சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்ததின் மூலம் விற்பனை பெருகும்” என்று தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு வருகிறது புவிசார் குறியீடு - தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பு என்ன?

புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கிய தமிழ்நாடு அரசு நோடல் அலுவலர் சஞ்சய் காந்தி கூறும் போது, “சேலம் ஜவ்வரிசியின் பாரம்பரியம் முழுமையாக சமர்ப்பிக்கப்பட்டதின் பேரில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால் உலக அளவில் சேலம் ஜவ்வரிசியை சந்தைப்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உலக அளவில் 167 நாடுகளில் சேலம் ஜவ்வரிசியை விற்பனைப்படுத்த முடியும்.

இந்த புவிசார் குறியீடு சேலம் நிறுவனத்திற்கு மட்டுமே உரித்தானது. இதனை வேறு யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

புவிசார் குறியீடு கிடைத்தது குறித்து உற்பத்தியாளர் கூறும்போது, “சேகோ உற்பத்தி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு மேற்கொண்ட பல்வேறு நடவடிகையினால் தற்போது கூடுதல் விலை கிடைத்து வரும் நிலையில், தற்போது புவிசார் குறியிடு கிடைத்ததால், ஜவ்வரிசியை இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் விற்பனை செய்திட முடியும். இதனால் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் என அனைவரும் பயன் பெறுவர்” என்றார்.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. இனி 167 நாடுகளில் விற்பனை : சர்வதேச அளவில் தலைநிமிரும் தமிழ்நாடு!

மேலும் இந்த ஆண்டு புவிசார் குறியீடு பெறுவதற்காக தேனி பன்னீர் திராட்சை, பண்ருட்டி பலாப்பழம், மார்த்தாண்டம் தேன், கடலூர் முந்திரிப் பருப்பு, கோவை நகமும் பருத்தி சேலை, மதுரை சோழவந்தான் வெற்றிலை, திருச்செந்தூர் ஆத்தூர் வெற்றிலை, மயிலாடுதுறை கொள்ளிடம் தைக்கால் ஊஞ்சல், கன்னியாகுமரி மயிலாடி கற்சிற்பம் உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமாயின் இந்திய அளவில் அதிகப்படியான புவிசார் பொருட்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இடம்பெறும். இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories