சென்னை தண்டையார்பேட்டை இ.எச் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி மையத்தின் ஏ.டி.எம் உள்ளது. இங்கு இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமாக அங்கு இங்கும் நடந்து கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலிஸார் அந்த இரண்டு வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ரபிக் பாஷா, சையது சாபி என்பது தெரியவந்தது. மேலும் பெங்களூரிலிருந்து ரயிலி மூலம் சென்னை வந்துள்ளனர். பின்னர் பெரிய மேட்டில் வாடகைக்கு அறையெடுத்து தங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றைத் திருடியுள்ளனர். பிறகு அந்த வாகனத்தில் நம்பர் பிளேட்டை மாற்றி வலம் வந்துள்ளனர். பிறகு தண்டையார்பேட்டையில் எச்டிஎப்சி ஏடிஎம்பில் பேட்டரி திருடும்போது பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள மூன்று பேட்டரிகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.