தமிழ்நாடு

Online மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நைஜீரியரை கைது செய்த சென்னை போலிஸ்!

Online மூலம் மிரட்டி பண மோசடி செய்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நைஜீரிய நாட்டை சேர்ந்த நபரை சென்னை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Online மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நைஜீரியரை கைது செய்த சென்னை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையைச் சேர்ந்தவர் அஸ்வினி. 20 வயது இளம்பெண்ணான இவர், தனது படிப்பை முடித்து விட்டு பியூட்டி பார்லர் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவர் பார்லருக்கு தேவையான அழகு சாதன பொருட்களை எல்லாம் ஆன்லைனில் பார்த்து வந்துள்ளார். அப்போது இவருக்கு லண்டனில் இருப்பதாக கூறி மர்ம நபர் ஒருவரிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

இருவரும் தொடர்ந்து சமூக வலைதள வாயிலாக பேசி வந்த நிலையில், அந்த லண்டன் இளைஞர் அஸ்வினியை காதலிப்பதாக கூறியதோடு, தான் சென்னை வந்து திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர் அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பியுள்ளதாகவும், அதனை பெற வேண்டும் என்றால் வங்கி கணக்குக்கு 25 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தவில்லை என்றால், சுங்க அதிகாரிகள் கைது செய்து விடுவார் என்று மிரட்டியுள்ளார்.

Online மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நைஜீரியரை கைது செய்த சென்னை போலிஸ்!

அதேபோல் மறுநாள் அந்த பெண்ணின் வீட்டு முகவரிக்கு சுங்க அதிகாரி போல் வந்த ஒருவர் அந்த பெண்ணை கைது செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த பெண் உடனடியாக அந்த வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் மேலும் 45 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடந்த 6-ம் தேதி கடிதம் எழுதி வைத்து தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இந்த தற்கொலை விவகாரம் குறித்தும், மோசடி குறித்தும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் வெளி மாநிலத்திலிருந்து ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் நபர்களை குறி வைத்து மிரட்டி பண பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

Online மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நைஜீரியரை கைது செய்த சென்னை போலிஸ்!

இதனை அடுத்து இந்த மோசடி கும்பலை பிடிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையடுத்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபால் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி சென்று நைஜீரியா நாட்டை சேர்ந்த மோசா என்பவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கீழ்பாக்கம் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்த நைஜீரியா நாட்டை சேர்ந்த மோஸாவை டிரான்சிட் வாரண்ட் பெற்று இன்று காலை சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னை அனைத்துவரப்பட்ட மோஷாவிடம் மோசடி கும்பல்கள் தொடர்பாக கீழ்பாக்கம் துணையான தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Online மூலம் மிரட்டி பண மோசடி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நைஜீரியரை கைது செய்த சென்னை போலிஸ்!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories