தமிழ்நாடு

”செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்”: ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

”செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்”: ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்யப்படுவதாக நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது. சட்ட ரீதியாக இதனை நாங்கள் சந்திப்போம்" என தெரிவித்திருந்தார். இப்படி ஆளுநரின் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன.

”செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்”: ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதையடுத்து அடுத்த 5 மணி நேரத்திலேயே, அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தரப்பிலிருந்து மற்றொரு அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,"தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி செயல்பட்டு வரும் நிலையில், அவரது மீதான குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

”செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார்”: ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அரசியல் சாசனம் விதிப்படி இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர்வார். அமைச்சர் பொறுப்பிலிருந்து புதியதாக ஒருவரைச் சேர்ப்பதோ அல்லது நீக்கம் செய்வதோ இத்தகைய முடிவுகள் அனைத்தும் முதலமைச்சரின் முடிவுகளுக்கு உட்பட்டது மட்டுமே.

இதில்,வேறு யாரும் உரிமை கொள்வதற்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமில்லை. தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரது தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது ஆளுநருக்கு எவ்வித உரிமையும் இல்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories