தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் CBSE பள்ளியாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி !

தமிழ்நாட்டில் CBSE பள்ளியாக இருந்தாலும் தமிழ் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் CBSE பள்ளியாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கோவை தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் ஆணை வழங்கினோம். இன்று கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு ஆணை வழங்கவுள்ளோம். தனியார் பள்ளிக்கு அங்கீகார ஆணை தேடி வந்து வழங்கி வருகிறோம். தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது தவறு.

“தமிழ்நாட்டில் CBSE பள்ளியாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி !

சி இ ஒ மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, ஆய்வு செய்து உடனடியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க செய்ய சொல்கிறோம். கால அவகாசம் வழங்குகிறோம். பள்ளி கட்டிடத்திற்கு விதிமுறைகள் உள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறோம்.

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம். ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு CBSE பள்ளியாக இருந்தாலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம். 'தாய் மொழியாம் தமிழ் மொழி'யை எழுத படிக்க எல்லா வசதியும் தர வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறோம்.

“தமிழ்நாட்டில் CBSE பள்ளியாக இருந்தாலும் தமிழ் கட்டாயம்..” - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிரடி !

185 ஊராட்சிகள் இருக்கின்ற தொடக்கநிலை பள்ளிகளின் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்காக நபார்டு வங்கி நிதிக்கு காத்திருகிறோம். வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். எங்கெல்லாம் மரத்துக்கு அடியில் இருந்து மாணவர்கள் படிக்கிறார்கள், அவைகள் முற்றிலும் மாற்றப்படும். இந்த மாற்றத்திற்கு முக்கியதுவம் கொடுக்கப்படும். நபார்டு வங்கியில் இருந்து பணம் வந்தவுடன் உடனடியாக கட்டிடங்கள் கட்டி தரப்படும்." என்றார்.

தொடர்ந்து காலை உணவு திட்டத்தில் சத்துணவு பணியாளர்களை பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "காலை உணவு திட்டம் சமூக நலத்துறை சார்ந்தது. சமூகநலத்துறை அமைச்சர் முடிவெடுப்பார்." என்றார்.

banner

Related Stories

Related Stories