தமிழ்நாடு

“யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” : தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வலு சேர்த்த உயர் நீதிமன்றம்!

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

“யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” : தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வலு சேர்த்த உயர் நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுகனேஸ்வர் கோயிலில் ஆகமத்தின் அடிப்படை ஆனது, இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், ஆகமத்தின் அடிப்படை இல்லை என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேசன் முன்பு விசாரணை வந்தபோது, இந்து அறநிலை துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி , குறிப்பிட்ட கோவில்களில் பின்பற்றக்கூடிய மரபை முடிவு செய்ய அந்த கோவில் அர்ச்சகர்களிடமிருந்து, இருந்து தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

“யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” : தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு வலு சேர்த்த உயர் நீதிமன்றம்!

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ஆகமம் மற்றும் ஆகமம் அல்லாத கோயிலை கண்டறிய உயர் நீதிமன்ற ஒரு குழுவை அமைத்துள்ளது என்றும், அந்த பணிகள் முடியும் வரை எப்படி அர்ச்சகர்களை நியமிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். குறிப்பிட்ட ஆகமத்தை பூர்த்தி செய்யாமல் எப்படி நியமிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், யார் வேண்டுமாலும் அர்ச்சகர் ஆகலாம், குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு ஆகம கோவிலிகள் எது, ஆகமம் பின்பற்றதா கோயில்கள் எது என்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தை சுட்டி காட்டிய நீதிபதி, குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றும், அந்தந்த கோவில்களின் சொத்து பதிவேட்டில் கூறப்பட்ட ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவரை நியமிக்கலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories