தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகரிடம் லட்சக்கணக்கில் மோசடி.. கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ் !

அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக ஒன்றிய பொருளாளரை ஏமாற்றிய அரசு அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகரிடம் லட்சக்கணக்கில் மோசடி..  கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன். அதிமுகவில் நாட்றம்பள்ளி ஒன்றிய பொருளாளராக இருக்கும் இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்திக்க சென்று உள்ளார்.

அப்போது அங்கே டீ கடையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், எல்லப்பனிடம் என்ன வேலைக்காக வந்தீர்கள் என்று பரமசிவம் விசாரித்துள்ளார். அப்போது எல்லப்பனோ, எனது மகன் சோமு, மருமகன் அறிவழகன், மற்றும் உறவினர்களான தாமோதரன், கார்த்திக் ஆகியோருக்கு அரசு விவகாரம் தொடர்பாக வந்தேன் என்றுள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகரிடம் லட்சக்கணக்கில் மோசடி..  கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ் !

இதையடுத்து பரமசிவம், தனக்கு தெரிந்த அரசு அதிகாரியான பாலதண்டாயுதம் என்ற நபர் ஒருவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கோட்டூர் தோட்டக்கலை உதவி அலுவலராக பணிபுரிந்து வருவதாகவும், அவரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய அதிமுக பிரமுகரும், சில நாட்கள் கழித்து பரமசிவனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது பரமசிவம், அரசு அதிகாரியான பாலதண்டாயுதத்தை கூட்டிக்கொண்டு எல்லப்பனின் வீட்டுக்கு சென்றார். அங்கே குடும்பத்துடன் அனைவரும் கலந்தாலோசித்தனர். அப்போது எல்லப்பனின் மகன் சோமு, மருமகன் அறிவழகன், உறவினர் மகன்கள் - தாமோதரன் மற்றும் கார்த்திக் ஆகிய 4 பெரும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) GROUP-4 தேர்வு எழுதியபோதும், அவர்கள் நான்கு பேரும் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்தது.

அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகரிடம் லட்சக்கணக்கில் மோசடி..  கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ் !

இதையடுத்து அந்த நான்கு பேரையும் தேர்வில் தேர்ச்சி பெற்றது போல் மாற்றி பணி ஆணை பெற்றுத் தருவதாகவும், அவர்கள் அனைவருக்கும் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று பரமசிவம் நம்பிக்கை தெரிவித்து உறுதியளித்தார். எனவே இதனை நம்பிய எல்லப்பன், பரமசிவம் - பாலதண்டாயுதம் ஆகியோரிடம் முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயும், இரண்டாவது தவணையாக 10 லட்சம் ரூபாயும், மேலும் வங்கியில் 7 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளனர்.

அப்போது பரமசிவமோ, முதலில் இரண்டு பேருக்கு மட்டும் அரசு பணி ஆணை பெற்று தருவதாகவும், மீதி இரண்டு பேருக்கு சில நாட்களில் தருவதாகவும் கூறி, போலியான அரசாணை தயார் செய்து கொடுத்துள்ளார். இதைப் பெற்றுக் கொண்ட தாமோதரன் மற்றும் சோமு ஆகியோர் பணியில் சேர்வதற்காக சென்றபோது இது போலியானது என்று தெரியவந்தது.

அரசு வேலை வாங்கி தருவதாக அதிமுக பிரமுகரிடம் லட்சக்கணக்கில் மோசடி..  கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ் !

இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த எல்லப்பன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 28.02.2022 அன்று புகார் கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திருத்துறைப்பூண்டி கோட்டூர் தோட்டக்கலை உதவி அலுவலராக பணிபுரிந்து வரும் பாலதண்டாயுதம், திருநெல்வேலி மாவட்டம் பரமசிவம், திருவாரூர் பகுதியை சேர்ந்த சுரேஷ், ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து திம்மாம் பேட்டை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு சென்று பணி முடிந்து திரும்பிய பாலதண்டாயுதத்தை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் உள்ள சுரேஷ் மற்றும் பரமசிவத்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories