தமிழ்நாடு

”நேரில் ஆஜராக வேண்டும்”.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றம்: என்ன வழக்கு?

அவதூறு வழக்கில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”நேரில் ஆஜராக வேண்டும்”..  அண்ணாமலைக்கு உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றம்: என்ன வழக்கு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான வீடியோ ஒன்றைச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டிருந்தார். இதையடுத்து தி.மு.க மீது போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அண்ணாமலைக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இவரைத் தொடர்ந்து தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ரூ.100 கோடி இழப்பீடு கேட்டும், கனிமொழி எம்.பியும் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

”நேரில் ஆஜராக வேண்டும்”..  அண்ணாமலைக்கு உத்தரவிட்ட சைதாப்பேட்டை நீதிமன்றம்: என்ன வழக்கு?

இதன் தொடர்ச்சியாக தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, அண்ணாமலைக்கு எதிராகச் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "60 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories