தமிழ்நாடு

திடீரென பற்றி எரிந்த வீடு.. 4 பேரின் உயிரை பத்திரமாக மீட்ட போலிஸார்: அதிகாலையில் நடந்தது என்ன?

சென்னை அசோக் நகரில் திடீரென வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை துரிதமாகச் செயல்பட்டு போலிஸார் மீட்டனர்.

திடீரென பற்றி எரிந்த வீடு.. 4 பேரின் உயிரை பத்திரமாக மீட்ட போலிஸார்: அதிகாலையில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அசோக் நகர் வாசுதேவ புரத்தில் முகுந்தன் என்பவர் தனது குடும்பத்தாருடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பிடித்துள்ளது.

இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இதைப்பார்த்த அருகே இருந்த குடியிருப்பு வாசிகள் உடனே போலிஸாருக் தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு விரைந்து வந்த அசோக் நகர் போலிஸார் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

திடீரென பற்றி எரிந்த வீடு.. 4 பேரின் உயிரை பத்திரமாக மீட்ட போலிஸார்: அதிகாலையில் நடந்தது என்ன?

பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற அசோக் நகர் போலிஸார் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே மிகவும் துரிதமாகச் செயல்பட்டு முதல் மாடியிலிருந்த ஜன்னல் கம்பிகளை உடைத்து வீட்டுக்குள் இருந்த 4 பேரையும் மீட்டனர்.

இந்த விபத்தில் வீட்டிலிருந்த கட்டில் மெத்தை மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே அசோக் நகர் போலிஸார் மிகவும் துரிதமாகச் செயல்பட்டு வீட்டினுள் இருந்த நான்கு பேரையும் உயிருடன் பத்திரமாக அமைப்பதற்கு உயர் அதிகாரிகள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories