தமிழ்நாடு

"தமிழ்நாடு 2 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்" -நிதி ஆயோக் முன்னாள் தலைவர் புகழாரம் !

தமிழ்நாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று நிதி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த் கூறியிருக்கிறார்.

"தமிழ்நாடு 2 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்" -நிதி ஆயோக் முன்னாள் தலைவர் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்க அழைப்பு விடுத்தார்.

அதன்படி தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன. இதன் மூலம் ஏராளமான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் மேலும் முதலீடுகளை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

"தமிழ்நாடு 2 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்" -நிதி ஆயோக் முன்னாள் தலைவர் புகழாரம் !

அங்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் சாதகங்களை எடுத்துக்கூறி பல்வேறு நிறுவனங்களுக்கும் தொழில்தொடங்க முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். இதனால் தமிழ்நாட்டில் வரும் காலத்தில் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று நிதி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் காந்த் கூறியிருக்கிறார். தனியார் நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அவர், :இந்தியப் பொருளாதாரத்தில் தென்னிந்தியாவின் பங்களிப்பு 30 சதவிகிதமாக இருக்கிறது. அதேபோல் நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தென்னிந்திய மாநிலங்களில் தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது.

"தமிழ்நாடு 2 ஆண்டுகளில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்" -நிதி ஆயோக் முன்னாள் தலைவர் புகழாரம் !

இதற்கு முக்கிய காரணமாக தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் விளங்குகிறது. தமிழ்நாட்டில் மிகத் திறமையான தொழிலாளர் சக்தி இருக்கிறது. இதனால் தமிழ்நாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரங்களாக மாறும்.தென் மாநிலங்கள் மனித வளர்ச்சி குறியீடுகளிலும், கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து போன்ற சமூக குறியீடுகளிலும் சிறப்பாக உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் வெகு தூரத்துக்கு சென்றுவிட்டன. ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் சமூக வளர்ச்சிக்கான கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதால் தென் மாநிலங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories