தமிழ்நாடு

”அனைவரும் சொல்வோம் இட ஒதுக்கீடு நமது உரிமை”... இளம் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தனியார் தொலைக்காட்சியில் இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய இளம் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

”அனைவரும் சொல்வோம்  இட ஒதுக்கீடு நமது உரிமை”... இளம் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனியார் தொலைக்காட்சியில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் போட்டியாளர்கள் அடுக்கு மொழிகளில் தங்களின் பேச்சுத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த நர்மதா என்ற போட்டியாளர் 'இட ஒதுக்கீடு எனது உரிமை' என்ற தலைப்பில் பேசினார். இவரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், "2000 ஆண்டுகாலமாக எந்த சாதியின் அடிப்படையில் எனது கல்வி, வேலை வாய்ப்பு உரிமை மறுக்கப்பட்டதோ அதே சாதியை அடிப்படையாகக் கொண்டு எனக்குக் கொடுக்கப்படும் இடஒதுக்கீடு எனது உரிமை" என இட ஒதுக்கீட்டு அவசியத்தைத் தனது பேச்சால் தெளிவாக விளக்கினார்.

”அனைவரும் சொல்வோம்  இட ஒதுக்கீடு நமது உரிமை”... இளம் பெண்ணுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

இதனைத் தொடர்ந்து 'இட ஒதுக்கீடு நமது உரிமை' என்ற தலைப்பில் பேசிய நர்மதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை.

அதனால்தான் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்! அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories