தமிழ்நாடு

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

சிங்கப்பூரின் ‘தமிழ் முரசு’ நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த அளித்த சிறப்பு நேர்காணல்!

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்ற தமது இலக்கை எட்டும் வகையில், முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த வாரம் சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ் முரசு நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் பின்வருமாறு:

'நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் சொல்வார். அந்த வகையில், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளியலை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக (S$1.35 டிரில்லியன்) உயர்த்த வேண்டும் என்று இலக்கு வகுத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த இலக்கை எட்டிச் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதன்று எனத் தெரிந்தாலும் அது தாங்களாகவே வகுத்துக்கொண்ட இலக்கு!

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

அந்த இலக்கை அடையத் திட்டமிட்டுச் செயல்பட்டு, அதற்கான வரைவுத்திட்டத்தைத் தயாரிக்க 'போஸ்டன் கன்சல்ட்டிங் குரூப்' எனும் ஆலோசனை நிறுவனத்தைப் பணியிலமர்த்தி உள்ளோம். ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் என்ற இலக்கை எட்ட தமிழ்நாட்டிற்கு மேலும் 2,300,000 கோடி ரூபாய் முதலீடு தேவை. அதன்மூலம் 4,600,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கான எல்லா முயற்சிகளையும் தாங்கள் எடுத்து வருவதால் தங்களால் இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நம்பிக்கை தரும் சிங்கப்பூர்!

தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும் நாடு, தமிழர்கள் அதிகம் வாழும் நாடு என்பதால் சிங்கப்பூர்மீது அளவில்லாப் பற்று கொண்டுள்ளதாகவும் அது தம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 சிங்கப்பூர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அசெண்டாஸ் நிறுவனம், தரமணியில் ஒரு மிகப் பெரிய தொழில்நுட்பப் பூங்காவை நிறுவியுள்ளது. தெமாசெக், டிபிஎஸ் வங்கி, மேப்பிள்ட்ரீ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் செய்து வருகின்றன.

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!
இர்ஷாத் முஹம்மது

"கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரூ.4,800 கோடி (S$785 மில்லியன்) முதலீட்டில் நான்கு சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்மூலம் 6,200 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல திட்டங்களுக்கு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. "மின்னணுவியல், வாகன உதிரி பாகங்கள், தடையற்ற வணிக, பொருளியல் மண்டலங்கள், தகவல் தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்துதல், மருந்து, ஆடை போன்ற பல்வேறு துறைகளில் அந்நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. மின்வாகனங்களுக்கான மின்னூட்ட நிலையங்கள் போன்ற புதிய துறைகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், பல்வேறு மாவட்டங்களிலும் இந்தத் திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் சிங்கப்பூர் பெரும்பங்காற்றி வருகிறது. இன்னும் கூடுதலாகப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். "புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை- யில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும்படி சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் வந்துள்ளேன்.

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

உலகத் தமிழருக்கு ஆதரவு!

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, உலகெங்கும் பரவியுள்ள தமிழ்ச் சமூகத்தின் தலைவராகவும் விளங்கியவர். அதே வழியைத் தாமும் பின்பற்றுகிறேன். உலகில் எங்கு தமிழர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவோம். அண்மையில் இலங்கையில் பொருளியல் நெருக்கடி ஏற்பட்டபோது தமிழ்நாடு கைகொடுத்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நாட்டுக்கு அரிசி, பால் மாவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தோம்.

மேலும், தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்குச் சிறப்பான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தித் தரும் நோக்குடன் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் செலவில் 7,400 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் திறன்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. "உக்ரேன் நாட்டில் போர் நடந்ததன் காரணமாக, தமிழ்நாட்டில் இருந்து அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் பாதிக்கப்- பட்டார்கள். உடனடியாக பத்திரமாக அவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் வீடுவரை கொண்டு சேர்த்தோம்.

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்-இணைப்புப் பாலம்!

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் அப்போதைய திமுக அரசால் இயற்றப்பட்டது. அவ்வகையில், தேர்தலில் வென்று திமுக மீண்டும் அரியணை ஏறியதும் `வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட்டது. அவ்வாரியத்தின்மூலம் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், உலகம் முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தாய்வீடு என்பது தமிழ்நாடுதான். "உலகம் முழுக்க வாழும் தமிழர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வரும் அமைப்பாக அவ்வாரியம் அமைய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுத்து- வோம். தாய்த்தமிழ்நாட்டையும் அயலகத் தமிழர்களையும் இணைக்கும் ஒரு பாலமாக, அவ்வாரியம் செயல்படும். தமிழ்மொழி, தமிழிசை, நாட்டியம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்குக் கொண்டு செல்லும் பணியையும் அந்த வாரியம் செய்யும்!

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

சவாலான காலகட்டம்!

கேள்வி :- பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு என்னென்ன சவால்களைக் கடந்து வந்துள்ளது, இனி எத்தகைய சவால்களை எதிர்நோக்குகிறது?

முதலமைச்சர் பதில் :- "உண்மையில் இது சவாலான காலம்தான். பூக்கள் நிறைந்த அழகிய சாலையில் நான் பயணம் செய்யவில்லை. முற்றிலும் பாழ்படுத்தப்பட்ட சாலையில் - குண்டும் குழியும் - மேடும் பள்ளமும் - கல்லும் முள்ளும் ஆணியும் கொண்ட சாலையில் பயணம் செய்வதைப் போலத்தான் முதல் சில மாதங்கள் இருந்தன.

தமிழக அரசுக்கு 500,000 கோடி ரூபாய் கடன் என்றதொரு கடினமான சூழலில்தான் முதல்வராக நான் பதவியேற்றேன். அந்த நேரத்தில் கொரோனா இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கி இருந்தது. அப்பேரிடரிலிருந்து மக்களைக் காப்பதே முதல் கடமையாக இருந்தது.

அதனைச் சரியாக நிறைவேற்றி, அதன் பிறகு தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சவாலான பணியை மேற்கொள்ளத் தொடங்கினோம். நிதி நிலைமை ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்திருக்கிறோம். உற்பத்தி பெருகி உள்ளது. புதிய நிறுவனங்கள் வந்துள்ளன. வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இருப்பினும், நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னமும் இருக்கிறது.

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

என்னைப் பொறுத்தவரை, இவற்றையெல்லாம் சவால்களாக நினைக்கவில்லை. பொதுவாழ்க்கையில், அரசு நிர்வாகத்தில் இவற்றை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். "எதிர்மறையாகப் பேசி காரணங்களைத் தேடுவதைவிட, நேர்மறையாகச் சிந்தித்து சாதனைகளைச் செய்வதையே நான் விரும்புகிறேன். அப்படித்தான் செயல்பட்டு வருகிறேன்,

தமிழர் நலனே முக்கியம்!

கேள்வி :- 'தமிழ்நாட்டில் இப்போது வடஇந்தியர்கள் பெருகிவிட்டனர். சிறுநகரங்களிலும்கூட அவர்களை அதிகம் காண முடிகிறது. அவர்கள் இல்லையேல் தொழிற்சாலைகள் முடங்கிப் போகும்' என்ற நிலை இருப்பதாக தமிழக வட்டாரங்கள் கூறுகின்றன. இதனையடுத்து, வடஇந்தியர்களின் வருகை அதிகரிப்பால் தமிழ்நாட்டிற்கு நன்மையா தீமையா என்று தமிழ் முரசு கேட்டது.

முதலமைச்சர் பதில் :- "தமிழ்நாடு வளர்ந்த, வளமிக்க மாநிலமாக இருப்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காகத் தமிழகத்திற்கு வருகிறார்கள், அவ்வளவுதான்! இது தமிழ்நாட்டுக்கு நன்மையே தவிர தீமையன்று. அதற்காக மற்றவர்களது வேலைவாய்ப்பை அவர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

எங்களைப் பொறுத்தவரை, தமிழர் நலனும் தமிழ்நாட்டின் மேன்மையுமே முக்கியம். அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். தமிழ் கட்டாயம், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

சொத்து வரி உயர்வு!

தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்துச் சிங்கப்பூரில் வாழும் தமிழ்நாட்டுத் தமிழர்களில் சிலர் கவலை தெரிவித்து இருப்பது குறித்தும் முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அதற்கு, இந்திய அரசின் 15வது நிதி ஆணையம் அறிவித்த வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் சொத்து வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி விகிதத்தை மாற்றி அமைத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சொத்து வரியானது, இந்தியாவின் மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடும்போது, மிகவும் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.

மும்பை, பெங்களூரு, கோல்கத்தா, புனே ஆகிய நகரங்களைக் காட்டிலும் சென்னையில் சொத்து வரி குறைவு. அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்துவரி உயர்வு என்பது 83 விழுக்காடு வீடுகளுக்கு மிகக் குறைவான அளவில்தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது."எனத் தெரிவித்தார்.

“நம்பிக்கை தரும் பயணம்..” : சிங்கப்பூரின் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த சிறப்பு நேர்காணல்!

கொள்கை உரமும் தொண்டர் படையும்!

கேள்வி :- அதிமுக பிளவுபட்டுக் கிடப்பது திமுகவிற்குச் சாதகமா?

முதலமைச்சர் பதில் :- “அதிமுக இப்போது நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. அவர்களது பலவீனத்தை நாங்கள் அரசியல் செய்வதில்லை. எங்களது கொள்கைகளையும் தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம். பாஜகவுடன் திமுக கூட்டு சேர வாய்ப்பில்லை. வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜகவிற்கும் இன்றைய பாஜகவிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் முரசு யோசனைக்கு முதலமைச்சர் வரவேற்பு!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளை அங்கீகரித்து சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, “நல்ல யோசனை. உறுதியாகச் செய்யலாம்," என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

அத்துடன், முன்னைய திமுக ஆட்சியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியதுபோல, இம்முறையும் அதற்கான திட்டம் உண்டு என்றும் அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி : தமிழ் முரசு இணையதளம்

Related Stories

Related Stories