தமிழ்நாடு

”இரட்டை என்ஜின் தடம் புரண்டது”.. ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து ப.சிதம்பரம் ட்வீட்!

இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது என ஒன்றிய அரசை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

”இரட்டை என்ஜின் தடம் புரண்டது”.. ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து ப.சிதம்பரம் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் 2014ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. அதிலிருந்தே டெல்லி அரசின் முடிவுகளில் ஒன்றிய அரசு தொடர்ச்சியாகத் தலையிட்டு வருகிறது. குறிப்பாகத் துணை நிலை ஆளுநருக்குத் தான் அதிகரம் உள்ளது என கூறியது.

இதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , "சட்டமன்ற அதிகாரத்துக்கு வெளியே உள்ள சில அம்சங்களில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும். மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரம் சட்டமன்றத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயக அரசாங்கத்தில் நிர்வாக அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம்தான் இருக்க வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது" என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

”இரட்டை என்ஜின் தடம் புரண்டது”.. ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து ப.சிதம்பரம் ட்வீட்!

இதேபோல், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்ததற்கு எதிராக உத்தவ் தாக்ரே தரப்பில் தொடரப்பட்ட வழக்கிலும் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், மகாவிகாஸ் கூட்டணி அரசை அன்றைய ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த இரண்டு தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பின்னடைவாக அரசியல் வட்டத்தில் கருதப்படுகிறது.

இந்நிலையில் இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது என ஒன்றிய அரசை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மகாராஷ்டிரா ஆளுநர் செய்தது தவறு. டில்லி துணை ஆளுநர் செய்தது தவறு.

மகாராஷ்டிரா சபாநாயகர் செய்தது தவறு. புதிய கொறடாவை அங்கீகரித்தது தவறு. கட்சி தாவிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதியிழப்பு மனுவில் சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்காதது தவறு.

தவறு செய்தவர்கள் வெறும் பொம்மைகள் என்ற சந்தேகம் எழுவதால் பொம்மலாட்டுக்காரர் யார் என்ற கேள்வி எழுகிறது. பொம்மலாட்டுக்காரர் பேச மாட்டார்கள், உச்ச நீதி மன்றத் தீர்ப்பைப் பற்றிக் கருத்துச சொல்லமாட்டார்கள். இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது" என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories