தமிழ்நாடு

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் போலிஸார் அதிரடி சோதனை:ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

கும்பகோணம் அருகே நிலத்தை எழுதி தரக்கோரி உரிமையாளரை மிரட்டிய பாஜக நிர்வாகி வீட்டில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவையை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் போலிஸார் அதிரடி சோதனை:ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ள இவர் மீது, 2016-ல் மருதா நல்லூர் மதன் சக்கரவர்த்தி கொலை, 2017-ல் தாராசுரம் சிவானந்தம் கொலை, 2022-ல் 2 கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால் நாச்சியார் கோவில் மற்றும் கும்பகோணம் தாலுகா போலிஸ் ஸ்டேஷன்களில் ரெளடிகள் பெயர் பட்டியலில் உள்ளார்.

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் போலிஸார் அதிரடி சோதனை:ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

இந்த நிலையில் கருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம், பாஜக நிர்வாகி கார்த்திகேயன் வீட்டிற்கு பின்புறம் உள்ளது. 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை தனக்கு இலவசமாக எழுதிதர வேண்டும் என சிவகுமாரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிவக்குமார், கடந்த 26-ம் தேதி நாச்சியார் கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் போலிஸார் அதிரடி சோதனை:ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

இந்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் 15-க்கும் மேற்பட்ட போலிசார் கார்த்திகேயன் வீட்டுக்கு சென்றனர். அப்போது போலிஸ் வருவதை கண்டு கார்த்திகேயன் தப்பியோடி தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இருப்பினும் அவரது கார்த்திகேயன் குடும்பத்தினர் மட்டும் இருந்தனர்.

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் போலிஸார் அதிரடி சோதனை:ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

இதனையடுத்து போலிசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கிருந்து வெடிபொருட்கள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வீடியோ கேமராவின் பதிவுகளை பார்க்க பயன்படும் டி.வி.ஆர் கண்ட்ரோல் யூனிட் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து நாச்சியார்கோவில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெளடி பட்டியலில் இருக்கும் பாஜக நிர்வாகி வீட்டில் போலிஸார் அதிரடி சோதனை:ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

பாஜக நிர்வாகி வீட்டில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருந்துள்ள சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இதே போல் பாஜக நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும்போது அது வெடித்து இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். மேலும் பாஜக நிர்வாகிகள் இதுபோல் பல சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும், அவர்களை போலிசார் கைது செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories