தமிழ்நாடு

“ஊழலைப் பற்றி பேச அரைவேக்காட்டு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” : சீறும் CPIM பாலகிருஷ்ணன் !

பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் அரைவேக்காட்டுத்தனமாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“ஊழலைப் பற்றி பேச அரைவேக்காட்டு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” : சீறும் CPIM  பாலகிருஷ்ணன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், மதம் மாறிய தலித்துகளுக்கு இட ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும், தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இதை வரவேற்பதாக தெரிவித்தார்.

“ஊழலைப் பற்றி பேச அரைவேக்காட்டு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” : சீறும் CPIM  பாலகிருஷ்ணன் !

அண்மையில் பா..ஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஊழல் பட்டியல் என ஒன்றை வெளியிட்டார். அப்படி வெளியிடுவதற்கு அண்ணாமலைக்கு அடிப்படையில் என்ன தகுதி இருக்கிறது. ஆருத்ரா கோல்ட் நிறுவனம் சுமார் 2,400 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆருத்ரா நிறுவனம் பற்றி அண்ணாமலை பேச தயங்குவது ஏன்? ” எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தங்களுக்கு மக்கள் மத்தியில் பேச எந்த வாய்ப்பும் இல்லை என்பதால், மற்றவர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

“ஊழலைப் பற்றி பேச அரைவேக்காட்டு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது?” : சீறும் CPIM  பாலகிருஷ்ணன் !

தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஊழல் பட்டியல் என்ற பெயரில் சொத்து பட்டியலை வெளியிட்டு அரைவேக்காட்டுத்தனமாக அண்ணாமலை செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பில் கொடுக்கப்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற தான் ஆளுநர் இருக்கிறார். ஆனால்15 மசோதாக்கள் தேக்கமடைந்த நிலையில் அந்த மசோதாக்களை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு பல்வேறு வேலைகளை ஆளுநர் செய்து வருகிறார்.

அப்படி செய்வதென்றால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜக தலைவராகவோ அல்லது RSS தாலைவராகவோ என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். இதற்கெல்லாம் காரணம் பாஜக அவர்கள் ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் ஆளுநரை பயன்படுத்தி அரசாங்கத்தை முடக்க நினைக்கின்றனர் என குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது நியாயம் இல்லாத ஒன்று எனவும் அந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories