தமிழ்நாடு

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாகக் கூறுகிறேன்.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“நான், முதல்-அமைச்சர்! ஆனால், என்னுடைய துறையான உள்துறையின் மீதான மானியக் கோரிக்கைதான் அனைத்துத் துறைகளிலும் கடைசியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அனைத்துத் துறைகளும் உங்கள் துறைதானே என்று நீங்கள் நினைப்பதால்தான், அப்படி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், தனது துறையின் சார்பில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களின் ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், நாம் வகிக்கக்கூடிய துறைகள் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ‘அண்ணாத்துரை’-யைச் சேர்ந்தவர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதாகச் இங்கே எடுத்துச் சொன்னார். உண்மைதான்,

எனக்கு தலைவர் கலைஞர் முதலில் வைக்க நினைத்த பெயர் என்னவென்றால், அய்யாத்துரை! எனவே, அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறையை வகித்தாலும் நீங்கள் அனைவரும் இந்த அய்யாதுரையின் இரத்த நாளங்கள்தான்.

இது ஏப்ரல் 2023; 2 ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஏப்ரல் மாதத்தில்தான் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முடிவெடுத்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால், வீழ்ந்து கிடக்கும் தமிழ்நாடு எழுச்சி பெறும்; “தாழ்ந்த தமிழ்நாடு தலைநிமிரும்” என்று மக்கள் முடிவெடுத்தார்கள்! மே 7-ஆம் நாள், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்!" என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்னும் இரண்டு வார காலத்தில், இரண்டு ஆண்டுகாலம் நிறைவடைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளவேண்டும் என்று மக்கள் மனநிறைவுடன் முடிவெடுக்கும் வகையில் இந்த இரண்டாண்டு காலமாக நாம் ஆட்சியை ஆட்சி நடத்தி வருகிறோம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

மிக மோசமான நிதி நெருக்கடி, நிதி மேலாண்மையில் ஒன்றிய அரசின் உதவியின்மை ஆகிய மிகக் கடினமான சூழல்கள் உள்ள போதிலும், மகத்தான சாதனைகளை கழக அரசு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்து கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாடு அரசு நன்மை செய்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும்!

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி செய்து தரப்பட்டதன் மூலமாக, இதுவரை 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை செப்டம்பர் மாதம் முதல் தரவிருக்கிறோம். இதன் மூலம் ஒரு கோடி மகளிர், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறப் போகிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் நான் கலந்துகொண்ட நலத்திட்ட உதவி விழாக்களின் மூலமாக மட்டும் ஒரு கோடிப் பேருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம்.

தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வேளாண் உற்பத்தி அதிகமாயிருக்கிறது. பாசனப் பரப்பும் அதிகமாகியிருக்கிறது.

இப்படித் துறைவாரியாக நான் சொல்லத் தேவையில்லை. அனைத்து அமைச்சர்களும் அவற்றை இதே அவையில், விரிவாக ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்கள். இப்படி துறைரீதியாகச் சாதனைகளை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் திராவிட மாடல் அரசாக நமது அரசு அமைந்துள்ளது.

உதயசூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து உழவுக்குச் செல்லும் உழவர்களின் முகத்தில் மலர்ச்சி இருக்கிறது; காரணம், இலவச மின்சாரம் கிடைக்கிறது.

காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது, காரணம், பள்ளியிலேயே காலை உணவு கிடைக்கிறது.

பல்வேறு பணிகளுக்காக புறப்படும் மகளிர் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது – காரணம் - பேருந்துகளில் கட்டணமில்லை.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

இப்படி மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. அதனால்தான் அவதூறுகளை யார் அள்ளி வீசினாலும், திசைதிருப்பும் திருகுவேலைகளை யார் செய்தாலும், மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை; ஏமாற்றவும் முடியவில்லை! நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை; மக்களின் மனங்களையும் வென்று, அவர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறோம்.

இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல; இது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசாக, எட்டுக் கோடி மக்களின் அரசாக, ஒரு கொள்கையின் அரசாக இருக்கிறது; திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. சமூகநீதி-சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் - மொழி உரிமை-இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய ‘திராவிடவியல் கோட்பாடு’ என்பதே திராவிட மாடல் சாசனம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அய்யன் வள்ளுவர் நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கும் – திராவிட இயக்கத்தின் தீரர்களாம் சர். பிட்டி தியாகராயரும், டி.எம். நாயரும் - நடேசனாரும் காட்டிய வழியும், தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சமதர்மமும்,– பேரறிஞர் அண்ணாவின் தமிழ்நாடு உரிமை முழக்கங்களும் – தமிழினத் தலைவர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் சமூகநீதிச் செயல்பாடுகளும், இனமானப் பேராசிரியரின் மொழி, இன உரிமை வழிகாட்டுதல்களும் - என்னுள் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறது.

இவைதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய சாதனைக்கும், கம்பீரத்துக்கும், வெற்றிக்கும், துணிச்சலுக்கும் காரணங்கள்! ஓர் அரசு மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கான உதவிகளை மட்டும் செய்துவிட்டு, கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்று விடக் கூடாது. ஒரு பக்கம் மக்கள் நலன், இன்னொரு பக்கம் கொள்கை உரம். இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக இரண்டாண்டுகளை நாம் நிறைவு செய்யப்போகிறோம்.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

இது இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது, என்னுடைய பெருமை மட்டுமல்ல; இந்த அமைச்சரவையின் பெருமை! ஏன், எங்களோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளுடைய பெருமை! இன்னும் சொல்லப்போனால், நாங்கள் கவனிக்கத் தவறும் இடங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் உண்டு. ஆனால், அந்தக் கடமையிலிருந்து தவறி, என்ன நிலைக்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி பேரவைத் தலைவர் அவர்கள் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் எனக்கும் வேதனையாக இருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த அவை பல ஆரோக்கியமான விவாதங்களை கண்டிருக்கிறது. அதேபோன்ற ஆரோக்கியமான விவாதமாகவே உங்கள் அனைவரது உரைகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மக்களுக்காகத்தான் பேசுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்பவனாக, ஏற்றுக் கொள்பவனாக நான் இருக்கிறேன். ஆசிரியராய் இருந்து இந்த அவைக்கு தலைமை ஆசிரியராக மட்டுமல்ல, சட்டமன்ற நெறிமுறைகளுக்கு ஆசானாகவும் திகழ்ந்து வரும் பேரவைத் தலைவரான தங்களுக்கும் எனது நன்றியைத் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 12 பேர் பேசி இருக்கிறார்கள். பாராட்டி பேசி இருந்தாலும், விமர்சித்து பேசி இருந்தாலும் இரண்டு தரப்புக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில காவலர்களின் செயல்பாடுகள் குறித்து இங்கே விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இதுபற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதை, இதே அவையில் பேசியதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். "எந்த சமுதாயத்தில் இருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக் கண்ணாடியாக அந்தப் படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பது இல்லை.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

போலீஸ் படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதேபோல் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறு இழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறைபாட்டையே அவை காட்டுகின்றன. தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகின்ற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது.

சகல விதத்திலும் சகிப்புத் தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்ற பயிற்சிக்கு ஒப்ப, கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள், அப்படித்தான் காவல் துறையினர் நடந்து வருகிறார்கள்.

அவர்களது செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டனவே தவிர, கண்டும் காணாமல் விடப்படவில்லை. சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பிவிட்டார் என்றோ, குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றோ, குற்றவாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல்லுங்கள்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதியாக நான் இருக்கிறேன். எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாகக் கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனைத் திருத்திக் கொள்ளும் பண்பை காவல் துறையினர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவரும் இந்த மாநிலத்தில் என்னென்ன இருக்கிறது என்று பேசினார்கள். என்னென்ன இல்லை என்பதைச் சொல்வதாக என்னுடைய உள்துறை அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை.

மதச்சண்டைகள் இல்லை.

கூட்டு வன்முறைகள் இல்லை.

கலவரங்கள் இல்லை.

துப்பாக்கிச் சூடு இல்லை.

காவல் நிலைய மரணங்கள் இல்லை.

இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான்...

புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.

புதிய முதலீடுகள் வருகின்றன.

புதிய நிறுவனங்கள் வருகின்றன.

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது.

ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது.

“அமைதியான மாநிலம் தமிழ்நாடு” என்ற நற்பெயர் வருகிறது.

ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள்.

சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது நமது அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.

“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை" - என்கிறார் வள்ளுவர்.

அதாவது, ஒருவர் செய்த குற்றங்களை எப்பக்கமும் சாயாமல், நடுநிலையோடு பாரபட்சமின்றி ஆராய்ந்து, குற்றத்திற்குத் தக்க தண்டனையை வழங்குதல் நீதியாகும் என்ற அய்யன் வள்ளுவரின் வாக்குப்படி அரசு செயல்பட்டு வருகிறது. மாநில காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வருவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

காவல்துறையினர், மாநிலம் முழுவதும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து கொலை, கொள்ளை மற்றும் சமுதாயக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்துதல், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல், அதிக வட்டி வசூலித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கஞ்சா, நிதி நிறுவன மோசடி, சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களைத் தடுப்பு காவலில் அடைத்து வருகின்றனர். குற்றம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன.

மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேகமான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். தமிழ்நாட்டில், பீகார், அசாம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தங்கள் தொழில்களில் ஈடுபடும் வண்ணம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையேதான், அந்த வதந்தி தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது. இதுகுறித்து, என்னுடைய தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு வதந்திக் காணொளிகளை பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டேன்.

வடமாநிலங்களில் இரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று சித்தரித்துக் காட்டியுள்ளதாகக் காவல் துறை இயக்குநர் அவர்கள் உடனடியாக விளக்கம் தந்தார். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரும், காவல் துறையினரும், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் போன்றவற்றுக்குச் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களது அச்சத்தைப் போக்கக்கூடியகும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

“இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல.. கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்” : முதலமைச்சர் ஆற்றிய முக்கிய உரை!

பீகார் மாநில முதலமைச்சர் மாண்புமிகு நிதீஷ் குமார் அவர்களை நானே தொலைபேசியில் தொடர்புகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் 07.03.2023 அன்று பீகார் முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு. பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு வந்து சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசனை செய்ததோடு, பீகார் மாநில தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் குழுவினர் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு அதுகுறித்து பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்திருக்கின்றனர்.

7-3-2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்களைச் நானே நேரிடையாக சந்தித்து அவர்களின் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினேன். இந்த விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம்

88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 178 பேர் கைது செய்யப்பட்டார்கள். குறிப்பாக, தமிழ்நாடு காவல் துறையின் தனிப்படையினர் தெலுங்கானா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பரை 06.03.2023 அன்று தெலங்கானாவிலும், பிரசாந்த் குமார் என்பவரை 11.03.2023 அன்று ஜார்கண்ட் மாநிலத்திலும், உபேந்திர சஹானி என்பவரை 18.03.2023 அன்று பீகாரிலும் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். வதந்தி காணொலியைப் பரப்பிய உத்திர பிரதேச மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர்மீதும் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்ற ஜாமீன் பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி, யூடியூப் சேனல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகளால் உலகளவில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெருமளவில் இருக்கும் என்று பலராலும் கூறப்படுகின்ற நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிற மாநில அரசுகளும் மனந்திறந்து பாராட்டின.

முன்னணி ஊடகங்களான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் எழுதியது. ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘ஃபிரண்ட் லைன்’ போன்ற இதழ்கள் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியிருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்களின் பங்களிப்பை இந்த அரசு நன்றாக உணர்ந்துள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த வடமாநிலத்தவர்களையும் நமது மாநிலத்தவராக கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழ்நாட்டிலும், சில வடமாநிலங்களிலும் கொந்தளிப்பு எழாமல், அது தவிர்க்கப்பட்டது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதைப் பொறுத்தவரையில், போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது எந்த ஆட்சியில் என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள். அதைப் பற்றியெல்லாம் விளக்கமாக பேசி, மீண்டும் ஒருமுறை விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

ஆனால், நேற்று இந்த அவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டைப் பற்றிப் பேசினார். நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுப்ப விரும்புகிறேன். அறையிலிருந்து அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே, அந்த உரிமையோடு அவர்களை கேட்க விரும்புகிறேன்.

100 நாட்கள் நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே மாட்டேன் என்கிறார். முதலமைச்சராக இருந்தபோதும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பின்பும் அவர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நமது அரசைப் பொறுத்தவரை, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்காதவாறு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகிறது.

12.07.2022 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து நடந்த தாக்குதல் சம்பவத்தை காவல் துறையினர் திறமையாக கையாண்டதோடு உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டனரே, அதுவே ஒரு அரசு மக்கள் போராட்டத்தை எப்படி பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

காவல்நிலைய மரணங்களை தடுப்பதைப் பொறுத்தவரையில், அதிலும் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 11 காவல் நிலையங்களில் 11 நபர்கள் இறந்த நிலை மாற்றப்பட்டு, 2023-ஆம் ஆண்டு இதுநாள் வரையில், காவல்நிலைய மரணங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையை அடைந்துள்ளோம். கடந்த ஆட்சியோடு ஒப்பிடும்போது தற்போதைய ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் பெருமளவில் குறைந்து விட்டன. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைவதற்கான வழிவகைகளில் இந்த அரசு நிச்சயம் ஈடுபடும்.

குற்றங்களைத் தடுப்பதே இந்த அரசின் முக்கிய இலக்கு. அதையும் மீறி அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் நடைபெறக்கூடிய குற்றங்களிலும் வழக்கமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களிலும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தீவிரவாத - மதவாத - தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணித்தும், மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், கடலோர மாவட்டங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தியும், மலைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிர சோதனைகள் நடத்தியும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், 26.10.2022 அன்று எனது தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வழக்கில் மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பு இருந்ததால், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

மூன்றே நாளில், ஒரு மாநில அரசு இதுபோன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றியது என்றால், அது தமிழ்நாடு அரசுதான். இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் இவ்வளவு விரைவாக வழக்கினை மாற்றியிருக்கும். மேலும், கோயம்புத்தூர் மாநகரின் பாதுகாப்பைக் கருதி கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல் துறையில் சிறப்புப் படையை உருவாக்கவும், கோயம்புத்தூர் பகுதியில் முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

தமிழ்நாடு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் சிறப்புப் பிரிவின் நுண்ணறிவுத் தகவல்களின்படி விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் மதரீதியான மோதல்கள் எதுவுமின்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

தீவிரவாத அமைப்புகளின் மூளைச்சலவையில் இருந்து இளைஞர்ளைக் காக்க சமய அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள் உதவியோடு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2022-2023-ஆம் ஆண்டில் 20 இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டுவருவது குறித்து, புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தாக்கலான: 182 ஆதாயக்கொலை வழக்குகளில் 171 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 194 கொலை வழக்குகளில் 3 ஆயிரத்து 144 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 252 கூட்டுக் கொள்ளை வழக்குகளில் 242 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

5 ஆயிரத்து 281 கொள்ளை வழக்குகளில் 4 ஆயிரத்து 240 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 874 வன்புணர்வு வழக்குகளில் 849 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 90 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், 75 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 9 ஆயிரத்து 440 போக்சோ வழக்குகளில். 9 ஆயிரத்து 340 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த அரசின் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் குற்றம் நடைபெற்றவுடன் புகார் கொடுக்க மக்கள் முன் வருகிறார்கள். காவல் நிலையங்களில் "வரவேற்பாளர்" நியமனம், காவல்துறையின் மனிதநேய அணுகுமுறை போன்றவற்றால் பதிவு செய்யப்படும் வழக்குகள் ஒரு சில குற்றங்களில் அதிகரிக்கலாம். அதற்கு காரணம், புகார்கள் வரும்பொழுது, கடந்த ஆட்சியில் இழுத்தடித்ததுபோல் இல்லாமல், இப்போது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மூடி வைக்காமல் உடனடியாக விசாரித்து குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள், எதிரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் என்பதை இந்த மன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நேற்று உறுப்பினர்களின் பேசும்போது, ஆருத்ரா போன்ற நிதிநிறுவனங்களின் மோசடிகள் பற்றிக் குறிப்பிட்டு பேசினார்கள். நான் நேற்றே இதுகுறித்து விளக்கமாக பதிலளித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். மக்களிடம் ஆசையைத் தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இத்தகைய நிதி நிறுவனங்களின் மோசடிகளைத் தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டு வந்ததும், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். மேலும், இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

நான், முதல்-அமைச்சர்! ஆனால், என்னுடைய துறையான உள்துறையின் மீதான மானியக் கோரிக்கைதான் அனைத்துத் துறைகளிலும் கடைசியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இது ஏன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். அனைத்துத் துறைகளும் உங்கள் துறைதானே என்று நீங்கள் நினைப்பதால்தான், அப்படி எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதற்கு முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், தனது துறையின் சார்பில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசியபோது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பேசிய ஒன்றைச் சுட்டிக் காட்டினார். பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களின் ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், நாம் வகிக்கக்கூடிய துறைகள் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் ‘அண்ணாத்துரை’-யைச் சேர்ந்தவர்கள் என்று தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதாகச் இங்கே எடுத்துச் சொன்னார். உண்மைதான், 

எனக்கு தலைவர் கலைஞர் முதலில் வைக்க நினைத்த பெயர் என்னவென்றால், அய்யாத்துரை! எனவே, மாண்புமிகு அமைச்சர்கள் அனைவரும் தனித்தனி துறையை வகித்தாலும் நீங்கள் அனைவரும் இந்த அய்யாதுரையின் இரத்த நாளங்கள்தான்.

இது ஏப்ரல் 2023; 2 ஆண்டுகளுக்கு முன்னால் இதே ஏப்ரல் மாதத்தில்தான் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவதற்கு முடிவெடுத்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால், வீழ்ந்து கிடக்கும் தமிழ்நாடு எழுச்சி பெறும்; “தாழ்ந்த தமிழ்நாடு தலைநிமிரும்” என்று மக்கள் முடிவெடுத்தார்கள்! மே 7-ஆம் நாள், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்!" என்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

இன்னும் இரண்டு வார காலத்தில், இரண்டு ஆண்டுகாலம் நிறைவடைந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக திராவிட முன்னேற்றக் கழகம்தான் ஆளவேண்டும் என்று மக்கள் மனநிறைவுடன் முடிவெடுக்கும் வகையில் இந்த இரண்டாண்டு காலமாக நாம் ஆட்சியை  நடத்தி வருகிறோம் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

மிக மோசமான நிதி நெருக்கடி, நிதி மேலாண்மையில் ஒன்றிய அரசின் உதவியின்மை ஆகிய மிகக் கடினமான சூழல்கள் உள்ள போதிலும், மகத்தான சாதனைகளை கழக அரசு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் செய்து கொடுத்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாடு அரசு நன்மை செய்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் தலைநிமிர்ந்து சொல்ல முடியும்!

 • மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி செய்து தரப்பட்டதன் மூலமாக, இதுவரை 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளார்கள். 

 • குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை செப்டம்பர் மாதம் முதல் தரவிருக்கிறோம். இதன் மூலம் ஒரு கோடி மகளிர், மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறப் போகிறார்கள்.

 • பல்வேறு மாவட்டங்களில் நான் கலந்துகொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் மூலமாக மட்டும் ஒரு கோடிப் பேருக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது 62 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, நடப்பு மதிப்பீடுகளில் 30 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைத்துள்ளோம். 

 • தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளை நாம் ஈர்த்துள்ளோம்.

 • மாநில உள்நாட்டு உற்பத்தி 6.11 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

 • வேளாண் உற்பத்தி அதிகமாயிருக்கிறது. பாசனப் பரப்பும் அதிகமாகியிருக்கிறது.

இப்படித் துறைவாரியாக நான் சொல்லத் தேவையில்லை. அனைத்து அமைச்சர்களும் அவற்றை இதே அவையில், விரிவாக ஆதாரங்களோடு சொல்லி இருக்கிறார்கள். இப்படி துறைரீதியாகச் சாதனைகளை நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் திராவிட மாடல் அரசாக நமது அரசு அமைந்துள்ளது.

 • உதயசூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து உழவுக்குச் செல்லும் உழவர்களின் முகத்தில் மலர்ச்சி இருக்கிறது; காரணம், இலவச மின்சாரம் கிடைக்கிறது. 

 • காலை நேரத்தில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது, காரணம், பள்ளியிலேயே காலை உணவு கிடைக்கிறது. 

 • பல்வேறு பணிகளுக்காக புறப்படும் மகளிர் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது – காரணம் - பேருந்துகளில் கட்டணமில்லை.

இப்படி மக்களுக்கு நேரடியாக தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு இருக்கிறது. அதனால்தான் அவதூறுகளை யார் அள்ளி வீசினாலும், திசைதிருப்பும் திருகுவேலைகளை யார் செய்தாலும், மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை; ஏமாற்றவும் முடியவில்லை! நாங்கள் தேர்தலில் மட்டும் வெல்லவில்லை; மக்களின் மனங்களையும் வென்று, அவர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறோம்.

இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல; இது திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல; ஒரு இனத்தின் அரசாக, எட்டுக் கோடி மக்களின் அரசாக, ஒரு கொள்கையின் அரசாக இருக்கிறது; திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. சமூகநீதி-சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் - மொழி உரிமை-இன உரிமை - மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய ‘திராவிடவியல் கோட்பாடு’ என்பதே திராவிட மாடல் சாசனம்.

 • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அய்யன் வள்ளுவர் நெறியும், 

 • யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வாக்கும் – 

 • திராவிட இயக்கத்தின் தீரர்களாம் சர். பிட்டி தியாகராயரும், டி.எம். நாயரும் - நடேசனாரும் காட்டிய வழியும், 

 • தந்தை பெரியாரின் சுயமரியாதைச் சமதர்மமும்,– 

 • பேரறிஞர் அண்ணாவின் தமிழ்நாடு உரிமை முழக்கங்களும் – 

 • தமிழினத் தலைவர் கலைஞரின் ஒடுக்கப்பட்டோர் சமூகநீதிச் செயல்பாடுகளும்,

 • இனமானப் பேராசிரியரின் மொழி, இன உரிமை வழிகாட்டுதல்களும் - என்னுள் இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறது. 

இவைதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய சாதனைக்கும், கம்பீரத்துக்கும், வெற்றிக்கும், துணிச்சலுக்கும் காரணங்கள்! ஓர் அரசு மக்கள் நல அரசாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கொள்கை அரசாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கான உதவிகளை மட்டும் செய்துவிட்டு, கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்று விடக் கூடாது. ஒரு பக்கம் மக்கள் நலன், இன்னொரு பக்கம் கொள்கை உரம். இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக இரண்டாண்டுகளை நாம் நிறைவு செய்யப்போகிறோம்.

இது இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக அமைந்துள்ளது என்பது, என்னுடைய பெருமை மட்டுமல்ல; இந்த அமைச்சரவையின் பெருமை! ஏன், எங்களோடு தோளோடு தோள் சேர்த்து நிற்கும் கூட்டணிக் கட்சிகளுடைய பெருமை! இன்னும் சொல்லப்போனால், நாங்கள் கவனிக்கத் தவறும் இடங்களைச் சுட்டிக்காட்டும் உரிமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் உண்டு.  ஆனால், அந்தக் கடமையிலிருந்து தவறி, என்ன நிலைக்கு அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி பேரவைத் தலைவர் அவர்கள் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.  அதுதான் எனக்கும் வேதனையாக இருக்கிறது.  இருந்தாலும், அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

இந்த அவை பல ஆரோக்கியமான விவாதங்களை கண்டிருக்கிறது. அதேபோன்ற ஆரோக்கியமான விவாதமாகவே உங்கள் அனைவரது உரைகளையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆதரித்தாலும், எதிர்த்தாலும் மக்களுக்காகத்தான் பேசுகிறீர்கள் என்று எடுத்துக் கொள்பவனாக, ஏற்றுக் கொள்பவனாக நான் இருக்கிறேன். ஆசிரியராய் இருந்து இந்த அவைக்கு தலைமை ஆசிரியராக மட்டுமல்ல, சட்டமன்ற நெறிமுறைகளுக்கு ஆசானாகவும் திகழ்ந்து வரும் பேரவைத் தலைவரான தங்களுக்கும் எனது நன்றியைத் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

, உள்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் 12 பேர் பேசி இருக்கிறார்கள். பாராட்டி பேசி இருந்தாலும், விமர்சித்து பேசி இருந்தாலும் இரண்டு தரப்புக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில காவலர்களின் செயல்பாடுகள் குறித்து இங்கே விமர்சனங்கள் வைக்கப்பட்டன. 

இதுபற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதை, இதே அவையில் பேசியதை நான் நினைவூட்ட விரும்புகிறேன். "எந்த சமுதாயத்தில் இருந்து போலீஸ் படையினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ, அந்தச் சமுதாயத்தைப் பிரதிபலிக்கின்ற நிலைக் கண்ணாடியாக அந்தப் படையினர் விளங்குவார்கள். அந்தச் சமுதாயத்திலிருந்து வெகுதூரம் அவர்கள் விலகி இருப்பது இல்லை.

போலீஸ் படை நன்றாக நேர்த்தியாகச் செயல்படுகிறது என்றால், அது சமுதாயத்தின் தன்மையைக் காட்டும். அதேபோல் போலீஸ் படையினர் எங்கேனும் செயலாற்றுவதில் தவறு இழைத்தால், சமுதாயத்தில் நிலவும் குறைபாட்டையே அவை காட்டுகின்றன. தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். முரண்பாடு ஏற்படுகின்ற இடங்களில் எல்லாம் அவர்கள் இருந்தாக வேண்டியிருக்கிறது.

சகல விதத்திலும் சகிப்புத் தன்மையோடு அவர்கள் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன் நடந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பெற்ற பயிற்சிக்கு ஒப்ப, கடமை உணர்ச்சி மிக்கவர்களாக அவர்கள் நடந்துகொள்ள வேண்டி இருக்கிறது" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள், அப்படித்தான் காவல் துறையினர் நடந்து வருகிறார்கள்.

அவர்களது செயல்பாட்டில் குற்றங்குறைகள் இருக்கலாம். குறையே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். குறை கண்டுபிடிக்கப்பட்டதும், அவை திருத்தப்பட்டனவே தவிர, கண்டும் காணாமல் விடப்படவில்லை. சம்பவம் நடந்ததும் குற்றவாளி தப்பிவிட்டார் என்றோ, குற்றவாளியைக் கைது செய்யவில்லை என்றோ, குற்றவாளியைக் காப்பாற்றினார்கள் என்றோ புகார் இருந்தால் சொல்லுங்கள்.  உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன், அதில் உறுதியாக நான் இருக்கிறேன். எந்தக் குற்றவாளியையும், அது யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும், அவர்களை நாங்கள் நிச்சயமாக காப்பாற்ற மாட்டோம் என்று இந்த மாமன்றத்தில் உறுதியாகக் கூறுகிறேன். சிறுசிறு தவறுகள் நடந்திருந்தாலும், அதனைத் திருத்திக் கொள்ளும் பண்பை காவல் துறையினர் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அனைவரும் இந்த மாநிலத்தில் என்னென்ன இருக்கிறது என்று பேசினார்கள். என்னென்ன இல்லை என்பதைச் சொல்வதாக என்னுடைய உள்துறை அமைந்துள்ளது. 

 • தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள் இல்லை. 

 • மதச்சண்டைகள் இல்லை. 

 • கூட்டு வன்முறைகள் இல்லை. 

 • கலவரங்கள் இல்லை. 

 • துப்பாக்கிச் சூடு இல்லை. 

 • காவல் நிலைய மரணங்கள் இல்லை. 

இப்படி இல்லை... இல்லை... இல்லை... என்றுதான் என்னால் சொல்ல முடியும்.

இதெல்லாம் இல்லை என்பதற்கு அடையாளமாகத்தான்... 

 • புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. 

 • புதிய முதலீடுகள் வருகின்றன. 

 • புதிய நிறுவனங்கள் வருகின்றன. 

 • அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி வருகிறது. 

 • ஆட்சிக்கு நல்ல பெயர் வருகிறது.

 • “அமைதியான மாநிலம் தமிழ்நாடு” என்ற நற்பெயர் வருகிறது. 

ஒரு மாநிலம் வளருகிறது என்றால், அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள். 

சட்டம் ஒழுங்கைப் பேணி, பொதுமக்களிடம் அச்ச உணர்வைப் போக்கி இருக்கிறது நமது அரசு. எந்தவிதக் குறுக்கீடும் இன்றி காவல் துறையை செயல்பட அனுமதித்துள்ளோம். இதனால்தான் சமூகவிரோதிகள், கொள்ளையர்கள், வன்முறையாளர்கள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.

“ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை" - என்கிறார் வள்ளுவர். 

அதாவது, ஒருவர் செய்த குற்றங்களை எப்பக்கமும் சாயாமல், நடுநிலையோடு பாரபட்சமின்றி ஆராய்ந்து, குற்றத்திற்குத் தக்க தண்டனையை வழங்குதல் நீதியாகும் என்ற அய்யன் வள்ளுவரின் வாக்குப்படி அரசு செயல்பட்டு வருகிறது. மாநில காவல் துறையினர் சட்டம்-ஒழுங்கை, தொடர்ந்து சிறப்பாகப் பராமரித்து வருவதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சாதி, சமய வெறியர்கள், சமூக விரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக, சாதி, சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. 

காவல்துறையினர், மாநிலம் முழுவதும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து கொலை, கொள்ளை மற்றும் சமுதாயக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதும், ஆட்களை கடத்தி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்துதல், கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடுதல், அதிக வட்டி வசூலித்தல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கஞ்சா, நிதி நிறுவன மோசடி, சைபர் குற்றங்கள், சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவோர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களைத் தடுப்பு காவலில் அடைத்து வருகின்றனர். குற்றம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதால் குற்றங்கள் குறைந்துள்ளன.

மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேகமான நடவடிக்கைகளால் எப்படி தவிர்க்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். தமிழ்நாட்டில், பீகார், அசாம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் தங்கள் தொழில்களில் ஈடுபடும் வண்ணம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையேதான், அந்த வதந்தி தமிழ்நாட்டில் பரப்பப்பட்டது. இதுகுறித்து, என்னுடைய தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு வதந்திக் காணொளிகளை பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டேன்.

வடமாநிலங்களில் இரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதல் சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போன்று சித்தரித்துக் காட்டியுள்ளதாகக் காவல் துறை இயக்குநர் அவர்கள் உடனடியாக விளக்கம் தந்தார். அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரும், காவல் துறையினரும், வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகள், கட்டுமான நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் போன்றவற்றுக்குச் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களது அச்சத்தைப் போக்கக்கூடியகும் வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

பீகார் மாநில முதலமைச்சர் மாண்புமிகு நிதீஷ் குமார் அவர்களை நானே தொலைபேசியில் தொடர்புகொண்டு வடமாநில தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்கள் 07.03.2023 அன்று பீகார் முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்துப் பேசியிருக்கிறார் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் திரு. பாலமுருகன் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு வந்து சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசனை செய்ததோடு, பீகார் மாநில தொழிலாளர்களையும் சந்தித்துப் பேசினார்கள். இந்தக் குழுவினர் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு அதுகுறித்து பத்திரிகைகளுக்குப் பேட்டியும் அளித்திருக்கின்றனர்.

7-3-2023 அன்று திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்களைச் நானே நேரிடையாக சந்தித்து அவர்களின் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி பேசினேன். இந்த விவகாரம் தொடர்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம்
88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 178 பேர் கைது செய்யப்பட்டார்கள். 

குறிப்பாக, தமிழ்நாடு காவல் துறையின் தனிப்படையினர் தெலுங்கானா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ் குமார் என்பரை 06.03.2023 அன்று தெலங்கானாவிலும், பிரசாந்த் குமார் என்பவரை 11.03.2023 அன்று ஜார்கண்ட் மாநிலத்திலும், உபேந்திர சஹானி என்பவரை 18.03.2023 அன்று பீகாரிலும் கைது செய்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தனர். வதந்தி காணொலியைப் பரப்பிய உத்திர பிரதேச மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர்மீதும் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்ற ஜாமீன் பெற்றுள்ளார்.

அது மட்டுமின்றி, யூடியூப் சேனல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படக்கூடிய வதந்திகளால் உலகளவில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெருமளவில் இருக்கும் என்று பலராலும் கூறப்படுகின்ற நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பிற மாநில அரசுகளும் மனந்திறந்து பாராட்டின. 

முன்னணி ஊடகங்களான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தலையங்கம் எழுதியது.  ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘ஃபிரண்ட் லைன்’ போன்ற இதழ்கள் பாராட்டியும் கட்டுரைகள் எழுதியிருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்கு வடமாநில தொழிலாளர்களின் பங்களிப்பை இந்த அரசு நன்றாக உணர்ந்துள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த வடமாநிலத்தவர்களையும் நமது மாநிலத்தவராக கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால்தான் தமிழ்நாட்டிலும், சில வடமாநிலங்களிலும் கொந்தளிப்பு எழாமல், அது தவிர்க்கப்பட்டது.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதைப் பொறுத்தவரையில், போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைத்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது எந்த ஆட்சியில் என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள். அதைப் பற்றியெல்லாம் விளக்கமாக பேசி, மீண்டும் ஒருமுறை விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

ஆனால், நேற்று இந்த அவையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசும்போது, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டைப் பற்றிப் பேசினார். நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுப்ப விரும்புகிறேன்.   அறையிலிருந்து அவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  எனவே, அந்த உரிமையோடு அவர்களை கேட்க விரும்புகிறேன்.  100 நாட்கள் அமைதியாக நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே மாட்டேன் என்கிறார். முதலமைச்சராக இருந்தபோதும் சொல்ல விரும்பவில்லை. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பின்பும் அவர் சொல்ல விரும்பவில்லை.   ஆனால், நமது அரசைப் பொறுத்தவரை, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்காதவாறு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகிறது. 

12.07.2022 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து நடந்த தாக்குதல் சம்பவத்தை காவல் துறையினர் திறமையாக கையாண்டதோடு உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டனரே,  அதுவே ஒரு அரசு மக்கள் போராட்டத்தை எப்படி பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

காவல்நிலைய மரணங்களை தடுப்பதைப் பொறுத்தவரையில், அதிலும் இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2019-ஆம் ஆண்டு 11 காவல் நிலையங்களில் 11 நபர்கள் இறந்த நிலை மாற்றப்பட்டு, 2023-ஆம் ஆண்டு இதுநாள் வரையில், காவல்நிலைய மரணங்கள் ஏதும் நடைபெறவில்லை என்ற நிலையை அடைந்துள்ளோம். கடந்த ஆட்சியோடு ஒப்பிடும்போது தற்போதைய ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் பெருமளவில் குறைந்து விட்டன. காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை அடைவதற்கான வழிவகைகளில் இந்த அரசு நிச்சயம் ஈடுபடும்.

குற்றங்களைத் தடுப்பதே இந்த அரசின் முக்கிய இலக்கு. அதையும் மீறி அங்கும் இங்குமாக ஓரிரு இடங்களில் நடைபெறக்கூடிய குற்றங்களிலும் வழக்கமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களிலும் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.  

தீவிரவாத - மதவாத - தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணித்தும், மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், கடலோர மாவட்டங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தியும், மலைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி தீவிர சோதனைகள் நடத்தியும், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 23.10.2022 அன்று கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.  மேலும், 26.10.2022 அன்று எனது தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வழக்கில் மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்பு இருந்ததால், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிட ஒன்றிய அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 

மூன்றே நாளில், ஒரு மாநில அரசு இதுபோன்ற வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றியது என்றால், அது தமிழ்நாடு அரசுதான். இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசுதான் இவ்வளவு விரைவாக வழக்கினை மாற்றியிருக்கும். மேலும், கோயம்புத்தூர் மாநகரின் பாதுகாப்பைக் கருதி கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கவும், இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல் துறையில் சிறப்புப் படையை உருவாக்கவும், கோயம்புத்தூர் பகுதியில் முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 

தமிழ்நாடு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் சிறப்புப் பிரிவின் நுண்ணறிவுத் தகவல்களின்படி விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் மூலம் மதரீதியான மோதல்கள் எதுவுமின்றி தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. 

தீவிரவாத அமைப்புகளின் மூளைச்சலவையில் இருந்து இளைஞர்ளைக் காக்க சமய அறிஞர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள் உதவியோடு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.  அதன்படி, 2022-2023-ஆம் ஆண்டில் 20 இளைஞர்கள் நல்வழிப்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாகச் செயல்பட்டுவருவது குறித்து, புள்ளிவிவரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தாக்கலான: 182 ஆதாயக்கொலை வழக்குகளில் 171 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  3 ஆயிரத்து 194 கொலை வழக்குகளில் 3 ஆயிரத்து 144 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  252 கூட்டுக் கொள்ளை வழக்குகளில் 242 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  5 ஆயிரத்து 281 கொள்ளை வழக்குகளில் 4 ஆயிரத்து 240 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  874 வன்புணர்வு வழக்குகளில் 849 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  90 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில், 75 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.  9 ஆயிரத்து 440 போக்சோ வழக்குகளில். 9 ஆயிரத்து 340 வழக்குகளில் எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

இந்த அரசின் விழிப்புணர்வு பிரச்சாரங்களால் குற்றம் நடைபெற்றவுடன் புகார் கொடுக்க மக்கள் முன் வருகிறார்கள்.  காவல் நிலையங்களில் "வரவேற்பாளர்" நியமனம், காவல்துறையின் மனிதநேய அணுகுமுறை போன்றவற்றால் பதிவு செய்யப்படும் வழக்குகள் ஒரு சில குற்றங்களில் அதிகரிக்கலாம். அதற்கு காரணம், புகார்கள் வரும்பொழுது, கடந்த ஆட்சியில் இழுத்தடித்ததுபோல் இல்லாமல், இப்போது உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மூடி வைக்காமல் உடனடியாக விசாரித்து குற்றவாளிகளும் கண்டுபிடிக்கப்படுகிறார்கள், எதிரிகள் கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் என்பதை இந்த மன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

நேற்று மாண்புமிகு உறுப்பினர்களின் பேசும்போது, ஆருத்ரா போன்ற நிதிநிறுவனங்களின் மோசடிகள் பற்றிக் குறிப்பிட்டு பேசினார்கள். நான் நேற்றே இதுகுறித்து விளக்கமாக பதிலளித்து இருக்கிறேன். இருந்தாலும் ஒன்றை மட்டும் அழுத்தம் திருத்தமாக இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். மக்களிடம் ஆசையைத் தூண்டி இதுபோன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன. இத்தகைய நிதி நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிக்குமாறு காவல்துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இத்தகைய நிதி நிறுவனங்களின் மோசடிகளைத் தடுக்க முதன்முதலில் சட்டம் கொண்டு வந்ததும், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் என்பதைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். மேலும், இதுபோன்ற நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது பொதுமக்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சில முக்கியமான குற்றச் சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்காததால், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

பொள்ளாச்சி பாலியல் புகார் வழக்கும் சென்ற ஆட்சியினுடைய தலைப்புச் செய்திகளுள் ஒன்று என்று உறுப்பினர்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள். இந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யவே பொதுமக்கள் ஒருபக்கம் போராடினார்கள். அரசியல் கட்சிகள் ஒருபக்கம் போராடினார்கள் தி.மு.க. கட்சி ஒருபக்கம் போராடினார்கள். ஆக, இப்படி தன்னார்வ தொண்டு அமைப்பைச் சார்ந்தவர்கள் எல்லோரும் போராடினார்கள். அப்படி ஒரு நிலை சென்ற ஆட்சியில் ஏற்பட்டது.  பிறகு, மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு, அங்கும் முறைப்படி விசாரிக்காத காரணத்தாலே மீண்டும் அதற்காகப் போராடி, அந்த வழக்கை சிபிஐ-க்கு கொண்டு போனோம். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் அ.தி.மு.க. இளைஞரணி நிர்வாகி ஒருவரும் உண்டு. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஒழிக்க விரும்பக்கூடிய கழக அரசு பொறுப்பேற்றவுடன், சிபிஐ விசாரணைக்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு பெண் எஸ்.பி.-யை நியமித்தோம்.   

19 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, சிறப்பு நீதிமன்றம் அமைத்தோம். அந்த சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் சிசிடிவி கண்காணிப்பு, காணொளி விசாரணை அறை, நீதிபதி அறை, சாட்சிகளுக்கான தனி பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.

மூன்று மாதங்களுக்கு முன்பு நீதிமன்ற விசாரணை துவங்கப்பட்டு, 80 சாட்சிகளில் இதுவரை 4 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் உரிய தண்டனை பெற இந்த அரசு வழக்குகளின் அடிப்படையில் விசாரணையை உன்னிப்புடன் கண்காணித்து விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நேற்று பேசும்போது, ‘கொடநாடு வழக்கை நாங்கள் சிபிஐ-க்கு கொண்டு போக கோரிக்கை வைக்கப் போகிறோம்’ என்றார். இந்த சம்பவம் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சியில். கொடநாடு பங்களா என்பது, அந்தக் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்கள் "முகாம் அலுவலகமாக" பயன்படுத்திய பங்களா. அங்கு மர்மமான முறையில் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து எல்லாம் நடந்தன.

அவர்கள் ஆட்சிக் காலத்திலேயே முறையாகக் கண்டுபிடித்திருந்தால், இந்தக் கோரிக்கையை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் இப்போது வைத்திருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது. அந்தச் சம்பவம் நடந்ததும், உடனடியாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, தடயங்களையும் காப்பாற்றி, வாக்குமூலங்களையும் முறையாகப் பெற்று வைத்திருந்தால், வழக்கை விரைந்து முடித்திருக்க முடியும்.

ஆண்டுகள் பல உருண்டோடியதால், சில விஷயங்களை முழுமையாக வெளிக்கொண்டுவர தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், சிபிசிஐடி விசாரணையில் முக்கியத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, 2021 செப்டம்பர் 9 ஆம் தேதி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், “கொடநாடு வழக்கை நடத்துங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, புது விசாரணை செய்யுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை” என்று சொன்னார்கள். அவரே ஆகஸ்ட் 18-ஆம் தேதி பேசும்போது, ‘வழக்கு முடியும் தருவாயில் இருக்கும்போது எதற்காக மேல் விசாரணை செய்ய வேண்டும்?’ என்று பேட்டியும் கொடுத்தார்கள். இப்போது சிபிஐ-க்குப் போவேன் என்கிறார். எத்தனை முரண்பாடு? ஏன் இந்தத் தடுமாற்றம்?

இன்னொன்றையும் குறிப்பிட்டுள்ளார். கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட சயனுக்கு தி.மு.க. வழக்கறிஞர்கள் உதவி செய்தார்கள் என்று கூறியிருக்கிறார். சம்பந்தப்பட்ட எதிரிகள் 11-1-2019 அன்று புதுடெல்லியில் தெஹல்கா பத்திரிக்கையாளர், மேத்யூ சாமுவேல் என்பவரோடு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அப்போது முதலமைச்சராக இருந்த மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் மீது குற்றம் சாட்டினார்கள். உடனே அதிகாரத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தும் வகையில் அவர்கள்மீது வழக்கு புனைந்தது யார்? ஒரு முதலமைச்சர் மீது புகார் கூறுவோர் மீது பொய் வழக்கு போடும்போது, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அன்று இருந்த தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் சட்ட உதவியைச் செய்தார்கள். இதுதான் உண்மை.

முன்னாள் முதலமைச்சர் அம்மையார் அவர்களின் பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளையை அவர் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முயலும்போது, தி.மு.க. எப்படி சும்மா இருக்க முடியும்? ஆகவே, கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் யார், முறையாக விசாரணையை நடத்தாமல் திசை திருப்பியது யார் என்பதை எல்லாம், உறுதியாக சொல்கிறேன்; நிச்சயமாக சொல்கிறேன்; சிபிசிஐடி விசாரணையில் வெளிவரும் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அ.தி.மு.க. ஆட்சி விட்டுச் சென்ற "பேரழிவுகளில்" போதைப் பொருட்கள் நடமாட்டமும் ஒன்று. 10 ஆண்டு ஆட்சியில் இருந்தவர்கள் விட்டுச் சென்ற படு பாதகங்களில் ஒன்றுதான், இந்தச் சீரழிவுக்குக் காரணம். அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் "ஆப்பரேஷன் கஞ்சா வேட்டைகள்" அடுத்தடுத்து தொடங்கப் போவதை அறிவித்து, போதைப் பொருட்களையெல்லாம் கைப்பற்றினோம்.

போதை மருந்துகள் மற்றும் உள வெறியூட்டும் பொருட்கள் சட்டம், 1985-ன்படி கஞ்சா விற்போரின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவது ஓர் இயக்கமாகவே தொடங்கப்பட்டது. போதைப் பொருட்களை ஒழிக்க என் தலைமையில்  மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. முதலமைச்சரின்கீழ் இதற்காக ஆய்வுக் கூட்டம் தனியாக நடத்தப்பட்டது இதுதான் முதல் முறை. இதுவரையில் இதுபோன்ற ஒரு கூட்டம் நடந்ததே கிடையாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, என் தலைமையில் நடைபெற்ற கூட்டம்தான் முதல் கூட்டம்.

இப்படி தொடர் நடவடிக்கைகளின் பலனாக,  இன்று கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்ததைவிட பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  சில காவல் நிலைய எல்லைகளில் போதைப் பொருட்களே இல்லை என்ற நிலை எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு கடத்தப்படுவதை தடுக்கும்பொருட்டு, தற்போது மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுடன் ஒன்றிணைத்து அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக அமலாக்கப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு,             11-8-2022 அன்று ஒரே நாளில் 74 இலட்சம் மாணவர்கள் "போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை" எடுத்துக்கொண்டார்கள். அது ஒரு உலக சாதனை நிகழ்வாக அமைந்தது; அதில் நானும் கலந்து கொண்டேன். ஆகவே, அனைத்து முனைகளிலும் சட்டத் துணையுடன் அரசு நடத்தும் இந்த தாக்குதலில், பத்தாண்டு காலமாக வேரூன்றியிருந்த "போதைப் பொருட்கள் சாம்ராஜ்யம்" சரிந்துள்ளது. அதுதான் இந்த அரசினுடைய சாதனை!

கோட்டையில் அமர்ந்து திட்டங்களைத் தீட்டினால் மட்டும் போதாது; அவையெல்லாம் தானாக நடந்துவிடும் என்று நினைக்காமல், மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களைக் கண்காணிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தோடுதான்,
'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை நான் தொடங்கினேன். மாவட்டங்களுக்கே நேரடியாகச் சென்று, தொடர்புடைய அதிகாரிகளை அழைத்துப் பேசி வருகிறேன். இது அனைத்துத் துறைகளிலும் ஒரு நல்ல விளைவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதில் காவல் துறை செயல்பாடுகள் தொடர்பாக தனி ஆய்வுக் கூட்டமே நடத்துகிறேன். வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுடன் நேரடி ஆலோசனைகள் நடத்தியிருக்கிறேன். இந்த ஆய்வுக் கூட்டங்களின்போது, நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் எனக் குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்கள் மட்டுமின்றி, காவலர் மற்றும் பொதுமக்கள் நலனில் காவல் துறையின் பங்கும் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்போது வழங்கப்பட்ட அறிவுரைகளின் காரணமாக, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் காவல் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் எனக்கு அடிக்கடி தகவல் தந்து கொண்டிருக்கிறார்கள். 

கடந்த மூன்று மாதங்களுடன், சென்ற ஆண்டின் முதல் மூன்று மாத சராசரியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கொலை சம்பவங்கள் 13 விழுக்காடு குறைந்துள்ளன, கொள்ளை சம்பவங்கள் 18 விழுக்காடு, கன்னக்களவு 11 விழுக்காடு, கலவர வழக்குகள் 26 விழுக்காடு குறைந்துள்ளன. குறிப்பாக, முக்கிய வழக்குகளில் புலன் விசாரணையை தீவிரப்படுத்துதல், போதைப் பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக தொடர் சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல், நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்றுதல், பொதுமக்கள் மற்றும் காவலர் குறை தீர்ப்பு முகாம்களை காவல் கண்காணிப்பாளர்கள் முறையாக நடத்தி மனுக்களுக்குத் தீர்வு காணுதல், காவலர் வரவேற்புத் திட்டம் மற்றும் வார ஓய்வுத் திட்டம் ஆகியவற்றை முறையாக அமல்படுத்துதல் போன்றவற்றில் கூடுதல் ஈடுபாட்டுடன் செயல்படுவதாக நான் அறிகிறேன். 

இத்தகைய கள ஆய்வின்போது காவல் நிலையங்கள் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் நான் திடீர் சோதனை மேற்கொள்ளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு  அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனால் காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளில் புது வேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 29-9-2021 அன்று தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்கும், 15-4-2022 அன்று அம்பத்தூர் காவல் நிலையத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்கள் அளித்த புகார்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, உரிய அறிவுரைகளை வழங்கினேன். இவை அனைத்தும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் ஆட்சிக்குமான நெருக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டுமல்ல, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் துறையாகக் காவல் துறை செயல்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். அந்த வகையில் காவல் துறையின் செயல்பாடு காரணமாக குற்றங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. குற்றங்களைத் தடுக்க காவலர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் (Body worn Camera) வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் காவல் துறையில், 1) ஸ்மார்ட் காவலர், 2) முகம் அடையாளம் காணும் திட்டம் (Face Recognition System), 3) தேசிய கைரேகை அடையாளம் காணும் திட்டம் (National Fingerprint Identification System), 4) காவல் உதவி செயலி, 5) Senior Officer பெட்டிஷன் சிஸ்டம், 6) E-Office, 7) பந்தோபஸ்து மேனேஜர், 8) Road Safety Portal, 9) Drones - எனப் புதுமையான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுள் ஒரு சில திட்டங்கள் முன்பு அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களாக இருந்தாலும், இங்கே, நேற்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் 45 நிமிடங்கள் அவர்களுடைய ஆட்சியில் என்ன நடந்தது, என்ன திட்டம் தீட்டினார்கள் என்று பட்டியல் போட்டார்.  ஆனால், அதுவெல்லாம் எந்த நிலையில் இருந்தது என்று சொல்லவில்லை. செயல்படாமல் இருந்த நிலையையெல்லாம் இன்றைக்கு நாங்கள் சீர்படுத்தி, அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே, முன்பு அறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களாக இருந்தாலும், அவர்கள் அறிவித்தார்களே என்று கிடப்பில் போட்டுவிடவில்லை.  அதை இன்றைக்கு முறைப்படுத்தி, அதையெல்லாம் இப்போது அரசு முழு வீச்சில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது.  இதுதான் உண்மை.  

தமிழ்நாட்டைக் காவலர்கள் பாதுகாக்கும்போது அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை நான் நன்றாக அறிவேன். கழக ஆட்சிக் காலத்தில் காவலர் நலன் எப்போதும் பேணிப் பாதுகாக்கப்பட்டுள்ளது. காவலர் நலன் காக்க, தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, கலைஞர் எப்போதெல்லாம் முதலமைச்சராக வருகிறாரோ, அப்போதெல்லாம் ஆணையங்கள் மூன்று முறை அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறைக்காக, காவல் துறையினுடைய சீர்திருத்தத்திற்காக ஆணையங்கள் அமைக்கப்பட்டது.  

கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், காவல் ஆணையம் அமையுங்கள், அமையுங்கள் என்று பலமுறை இதே அவையில் கோரிக்கை வைத்தேன். அமைக்கப்படும் என்று அன்றைய முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த நான்காவது காவல் ஆணையத்தையும் முறையாக அமைக்கவில்லை. பெயருக்கு அறிவித்தார்கள்.  அதை முறையாக அமைக்கவில்லை; செயல்படவும் இல்லை.  

எனவே, நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் அவர்கள் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையத்தையும் புதிதாக அமைத்துள்ளோம். அந்த ஆணையத்தின் இடைக்கால அறிக்கை 17-3-2023 அன்று பெறப்பட்டது. அதன் பரிந்துரைகளின் அடிப்படையிலான நடவடிக்கைகளை இன்றைய அறிவிப்புகளில் நீங்கள் காணலாம். முழு அறிக்கை வந்தவுடன், காவலர் நலன் காக்கும் மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் உறுதியாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்றுக் குறைகளைக் கேட்டறிய ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் (Receptionist) நியமிக்கப்பட்டனர். இப்பணிக்கு மறைந்த காவலர்களினுடைய வாரிசுகள் 1,132 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதில் 1,088 நபர்களுக்கு இதுவரை பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

13-6-2021 முதல் முதலமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வழிக்காவல் பணியிலிருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இலகுவான பணிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

9-11-2021 முதல் காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தற்போது வழங்கப்படும் வீடுகளின் அளவை விட விகிதாச்சாரப்படி உயர்த்தி வழங்கி ஆணையிடப்பட்டது.

10-11-2021 முதல் காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பிற்கு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் “CLAPP”, அது ஒரு APP “CLAPP” 10 இலட்சம் ரூபாய் செலவில் அமல்படுத்தப்பட்டது. 

16-11-2021 அன்று காவலர்களுக்கு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ள 38 மாவட்டங்கள் மற்றும் 7 மாநகரங்களில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்க தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் 90 இலட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

காவல் துறையினரின் நலன்களைப் பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்படி 24-11-2021 அரசாணையின்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

1-12-2021 முதல் காவலர்களின் வாழ்க்கை துணைவியாருக்கும் மருத்துவ பரிசோதனை, பெண்களுக்கான சிறப்பு பரிசோதனை ஆகியவை அளிக்கப்பட்டு வருகிறது.

24.1.2022 முதல் காவல் நிலையங்களில் உடனடி மற்றும் அவசரச் செலவுகளை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ரொக்க சில்லறை செலவின நிதி (Cash Contingency Fund) உயர்த்தி வழங்கப்பட்டது. 4.3.2022 அன்று புதிதாக ஆறு மாவட்டங்களில் காவலர் அங்காடிகள் நிறுவ உத்தரவிடப்பட்டது.  1.8.2022 அரசாணைமூலம் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்குவதை தடுக்க “மெரினா கடற்கரை உயிர் காப்பு பிரிவு” அமைக்கப்பட்டது. இப்படி அறிவிப்புகளை ஆணையாக உடனுக்குடன் பிறப்பித்துள்ளதன் காரணத்தால்தான் இந்த அரசு இதை கம்பீரமாக, இவைகளையெல்லாம் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.  அதிலும் குறிப்பாக பெண் காவலர் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. போலீஸ் போன்ற அதிகாரமிக்க பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்.  

வரும் ஜூன் 3-ஆம் நாள், ‘தமிழினத் தலைவர்' கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கவிருக்கிறது. அவரது நூற்றாண்டு தொடங்கும் ஆண்டிலேயே, அவர் முன்னெடுத்த முக்கியத் திட்டமான, தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்ததன் 50-ஆவது ஆண்டு நிறைவு பெறுகிறது. முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால்தான் இன்று ஏராளமான பெண்களின் காவல்துறை கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் அதிக பெண் காவலர்களைக் கொண்ட முதல் ஐந்து மாநிலக் காவல்துறைகளில் தமிழ்நாடு காவல்துறையும் இன்றைக்கு இடம்பெற்றிருக்கிறது.  தற்போது, எனது பாதுகாப்புக்கான உள்வட்ட பாதுகாப்புப் பிரிவிலேயே ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் எட்டு பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்ததன் 50-ஆம் ஆண்டு பொன்விழாவைத்தான் 17.03.2023 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலே சிறப்பாகக் கொண்டாடினோம். அந்த நிகழ்ச்சியிலே சிறப்பு அஞ்சல் உறையினை வெளியிட்டோம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அவள்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்த விழாவில் பெண் காவலர்களுக்கான சிறப்பு வாய்ந்த நவரத்தின திட்டங்களை அறிவித்தேன். ரோல்கால் என்ற காவல் வருகை அணிவகுப்பிற்கான நேரம் காலை 7 மணி என்பதைத் தளர்த்தி 8 மணியென மாற்றியமைக்கப்படும்.  சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்குக் கழிப்பறைகளுடன் தனி ஓய்வு அறை கட்டித்தரப்படும்.  தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும். கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டுதோறும்  வழங்கப்படும். பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிடமாறுதல் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும். பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும். பெண் காவலர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண 'காவல் துறையில் பெண்கள்' என்ற தேசிய மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.  பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்பன அந்த 9 அறிவிப்புகள். இவற்றை விரைந்து நிறைவேற்றவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் பெண்ணியத்தையும், பெண் உரிமையையும், பெண் பாதுகாப்பையும் உறுதிசெய்யக்கூடிய வகையில், காவல்துறையில் பெண்காவலர்கள் முதல் பெண் அதிகாரிகள் வரை அனைவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, அவர்களது நலனை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதனை உணர்ந்தே தி.மு.க. அரசு பெண் காவலர்களுக்குப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 

காவலர் பணியிடங்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு 11 ஆயிரத்து 812 நபர்கள் 2021-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, 2022-ஆம் ஆண்டு, 3 ஆயிரத்து 552 காலிப்பணியிடங்களுக்கு, காவலர்களை நியமித்திட தேர்வு நடத்தப்பட்டு, 29.3.2023 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சார்பு ஆய்வாளர் பணியிடத்திற்கு
2022-இல் தேர்வு நடத்தப்பட்டு, 438 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  

மேலும், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை மற்றும் தாலுகா உள்ளிட்ட பிரிவுகளுக்கு, 615 சார்பு ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காகவும், ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் 2 ஆயிரத்து 599 பணியிடங்களை நிரப்புவதற்கும், 106 சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்புவதற்கும், 63 சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களை நிரப்புவதற்கும் உரிய அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் பொறுத்தவரையில், அந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த 2021-2022 ஆம் ஆண்டிற்கான 91 நபர்களை உள்ளடக்கிய தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2022-2023 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில், காவல் துணைக் கண்காணிப்பாளருக்கான காலிப்பணியிடம் 47 என நிர்ணயிக்கப்பட்டு, தேர்ந்தோர் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2021-2022 ஆம் ஆண்டு காவல் துறையின் மானியக் கோரிக்கையின்போது, காவலர்கள் மீதான சிறு தண்டனைகள் கைவிடப்பட்டு, அவர்களுக்கு உரிய பதவி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டோம். அந்த அறிவிப்பிற்கிணங்க, கடந்த 7-12-2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் 2,249 சிறுதண்டனைகள் அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், “உங்கள் துறையில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின்கீழ், மொத்தம் 3,329 மனுக்கள் காவலர்களிடமிருந்து, காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களால்
1-7-2021 முதல் 31-3-2023 வரை பெறப்பட்டு, அவற்றுள் 2,930 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடுமட்டுமல்லாமல், நான் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தை, 22-9-2022 அன்று ஆய்வு செய்தபோது, சிறு தண்டனைகளை ரத்து செய்யக் கோரி, காவலர்கள் என்னிடம் மனுக்களை அளித்தனர். 

அவற்றில், மொத்தம் 336 மனுக்கள் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது அவை அரசின் நடவடிக்கையில் உள்ளது. எனவே, காவலர்கள் மீதான சிறுதண்டனையைப் பொறுத்தவரையில், மொத்தம் பெறப்பட்ட 5,922 மனுக்களில், 5,179 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, காவலர்கள் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை இம்மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தடய அறிவியல் துறையின் பங்கு இன்றியமையாதது. நமது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 15 தடயவியல் ஆய்வுப் பிரிவுகள் கொண்ட சென்னை தலைமை ஆய்வகம் 13-5-2022 அன்று இந்தியத் தரச் சான்று நிறுவனத்தின் சான்றிதழை பெற்றுள்ளது.

2022 துவக்கத்தில் 19 ஆயிரத்து 347 வழக்குகள் ஆய்வுக்காக நிலுவையில் இருந்தன. 2022-ல் பெறப்பட்ட 81 ஆயிரத்து 328 வழக்குகளையும் சேர்த்து, மொத்தம்
1 இலட்சத்து 675 வழக்குகள். இவற்றில் 31-12-2022 வரை 91 ஆயிரத்து 506 வழக்குகளில் தடய அறிவியல் துறை ஆய்வு அறிக்கை வழங்கியிருக்கிறது.

தடய அறிவியல் துறை வரலாற்றில் முதல் முறையாக கழக ஆட்சியில்தான் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் அளிக்கப்பட்டு, இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இதை மேலும் வலுப்படுத்தும் வகையில், கோவையில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவு, மதுரை அறிவியல் ஆய்வகத்திற்கு ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பில் அதி நவீன மரபியல் ஆய்வுக் கருவி, போதைப் பொருட்களை துல்லியமாக கண்டறிய 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் LC-MS எனும் அதி நவீன கருவி வாங்க ஒப்புதல் என பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ குற்றங்களின் விசாரணை, போதைப் பொருள் ஒழிப்பிற்கு தேவையான விரைவான ஆய்வு என அனைத்திற்கும் முன்னுரிமை அளித்து, இத்துறை இந்த அரசில் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தன்னலமற்று உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்றும் பணியினை சிறப்பாக செய்து வருகிறது. தீ விபத்து மற்றும் மீட்புப் பணி அழைப்புகளில் உடனடியாக தலையிட்டு, 2022 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 275 மனித உயிர்களையும், 249 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள உடமைகளையும் காப்பாற்றியிருக்கிறார்கள்.

தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் மக்களை பாதுகாக்க முடியும். அதனால், 1,350 தீ பாதுகாப்பு உடைகள், 450 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன்கூடிய 3,000 மீட்பு உடைகள் 49 கோடியே 62 இலட்சம் மதிப்பில் வாங்கி, வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் சிறப்பான சேவைக்கு தீயணைப்பு நிலையங்கள் மிக, மிக முக்கியம்.  ஆகவே, 62 கோடியே 18 இலட்சம் ரூபாய் மதிப்பில், மாநிலம் முழுவதும் 17 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ட்ரோன்கள், புதிய நீர் தாங்கி வண்டிகள், அவசர கால சிறிய மீட்பு ஊர்திகள், வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, உயரழுத்த நீர் தாங்கி வண்டி உள்ளிட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்குத் தேவையான பல்வேறு வாகனங்கள் 24 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

செங்குன்றம், போடிநாயக்கனூர், துறையூர், ராணிப்பேட்டை, சிவகாசி, பெரும்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் தீயணைப்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு 40 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பில் 172 குடியிருப்புகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறை பணியாளர்களின் நலனுக்காக இவ்வாறு பல்வேறு திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கு உரையாற்றும்போது, தமிழ்நாட்டில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, அதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்கள். இதனைப் பொறுத்தவரையில், மானியக் கோரிக்கை எண் 25, இயக்கூர்திகள் சட்டங்கள்-நிருவாகம் குறித்த உள்துறை போக்குவரத்து (Home Transport) கொள்கை விளக்கக் குறிப்பில், பக்கம் 56-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அவருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். சாலைப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில், எங்களது அரசு பல சீரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அரசுக்கு அவ்வப்போது உரிய ஆலோசனைகளை வழங்கிட, மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் காவல் துறை கூடுதல் இயக்குநர் அவர்களின் தலைமையில் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்புப் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு முயற்சிகளைத் திறம்பட செயல்படுத்திட ‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ எங்களது அரசால் வகுக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 19-4-2023 வரை விபத்துக்குள்ளான 1,56,000 நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இத்திட்டத்தின்கீழ் 138 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

2019-ல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,129 ஆக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையால் 2022-ல் 17,884 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியின்கீழ் 2023-2024 ஆண்டிற்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த அரசைப் பொறுத்தமட்டில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி உச்ச நீதிமன்றத்துக்கும், ஒன்றிய அரசுக்கும் விபத்து எண்ணிக்கையைக் குறைத்து, தவறான தகவல் அளித்ததுபோல் இல்லாமல், விபத்து குறித்த உண்மைத் தகவல்களைக் கொள்கை விளக்கப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர் திரு. பொள்ளாச்சி V. ஜெயராமன் அவர்கள், பொள்ளாச்சியில் காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கான இடம் தயார் நிலையில் இருப்பதாகவும், அதனை உடனே கட்டித் தரவேண்டுமென்றும் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையைப் பொறுத்தவரையில், பொள்ளாச்சி வட்டம், ப்ளாக் எண் 26, வார்டு எண் D, பொள்ளாச்சி நகரத்தில் சர்வே எண்கள் 1592, 1594, 1597, 1599 காவல் துறைக்குச் சொந்தமான இடத்தில், 8 ஆய்வாளர் குடியிருப்புகளும், 20 உதவி ஆய்வாளர் குடியிருப்புகளும் மற்றும் 204 தலைமைக் காவலர் மற்றும் காவலர்களுக்கான குடியிருப்புகளும் கட்டுவதற்குத் திட்டமிட்டு, அதற்கான மதிப்பீடு 104 கோடி ரூபாய்க்கு தயார் செய்யப்பட்டு, தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல் துறையின் மானியக் கோரிக்கையில் பேசிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், திரு. தி. வேல்முருகன் அவர்கள்,
திரு. ம. சிந்தனை செல்வன் அவர்கள், திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் உள்ளிட்டோர் "1996 ஆம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 1,100 காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு பெற்ற பின்னர், அவர்களில் 241 பேர் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாகப் பதவி உயர்வு பெறாமல் உள்ளனர் என்றும், அவர்களுக்குக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குரிய பயிற்சி வழங்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்கள். பொதுவாக காவல் துறையில் குறிப்பிட்ட பதவிகளுக்கு காலிப் பணியிடங்கள் உருவாகும்போது அதற்கேற்றவாறு அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

ஆகவே காலிப்பணியிடங்கள் உருவாக, உருவாக நிச்சயம் காலதாமதம் இன்றி பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சென்னை மாநகர காவல் எல்லைக்குள் இரண்டரை லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்டதாக கூறினார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் உள் துறையிலிருந்து கடந்த 12-11-2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 1348-ன்படி அரசு நிதி மற்றும் தனியார் ஒத்துழைப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 282 மட்டுமே குறிப்பிடப்பட்டு, அவற்றின் பராமரிப்பிற்காக 50 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதே உண்மை! 

அது மட்டுமல்ல, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னை மாநகர காவல் துறை லிமிட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், வெறும் 60 ஆயிரத்து 997 கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே இருந்தது. அவற்றிலும் அரசு செலவில் நிறுவப்பட்டவை வெறும்
2 ஆயிரத்து 853 மட்டுமே! மற்றவை தனியார் நன்கொடை மூலமும், தனியார் இடத்தில் அவர்களாலும் பொருத்தப்பட்டவை என்பதும் கண்டறியப்பட்டது.

சில இடங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியையும் பயன்படுத்தி அந்த கேமராவை பொருத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகுதான், 22 ஆயிரத்து 229 கேமராக்கள் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் "வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம்" செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, புதிய கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

மாண்புமிகு உறுப்பினர் திரு. சிந்தனை செல்வன் அவர்கள் சமூகநீதி கருத்துகளை உள்ளடக்கி, பயிற்சி பெறும் காவலர்களுக்குப் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இதனைப் பொறுத்தவரையில், இணையவழிக் குற்றங்கள் (Cyber Crime), சமூக ஊடகங்களைக் கொண்டு, பொய்ச் செய்திகளைப் பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுப்பது மற்றும் மனித உரிமை குறித்தான வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய அம்சங்கள் இப்புதிய பாடத் திட்டத்தில் இடம் பெறும். அதற்கான கோப்பில் இரண்டு தினங்களுக்கு முன்புதான் நான் கையொப்பமிட்டேன். இதற்கான ஆணைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின்மூலம் தெரிவு செய்யப்படும் நேரடி உதவி ஆய்வாளர்கள் மாற்றியமைக்கப்பட்ட பயிற்சி பாடத்திட்டம் மற்றும் நடத்தை விதிகளின்படி பயிற்சிகளைப் பெறுவார்கள்.

மாண்புமிகு உறுப்பினர்கள் பலர் இங்கே பேசும்போது முஸ்லிம் விடுதலைப் பற்றி குறிப்பிட்டார்கள்.  பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை பற்றிக் குறிப்பிட்டார்கள்.  நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் தண்டனையைக் குறைத்து முன்விடுதலை செய்வது குறித்து, இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு உரிய விரிவான வழிமுறைகளை வகுத்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்தும் இதன்கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணை நோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத் திறனாளி சிறைவாசிகள் ஆகியோர் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில்கொண்டு இதுகுறித்தான மாண்பமை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இதுதொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. என். ஆதிநாதன் அவர்களின் தலைமையின்கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. 

ஆகவே, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு பொறுப்பேற்றவுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவ்வாறு அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. என். ஆதிநாதன் அவர்களின் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது.  முன்விடுதலையின் அடுத்த கட்டமாக அந்தப் பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலாளர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளிட்டோர் பரிசீலித்து வருகிறார்கள் என்பதை இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

காவல்துறையினர் எந்தவிதக் குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக செயல்படுகிறார்கள். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக பராமரித்து குற்றங்களில் ஈடுபடுவோர் யாராயினும் அவர்கள்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அதனால், புதிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டைத் தேடி வரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம். தொழில் பெருகி, நம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

ஆகவே, மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை, அதுவும் குறிப்பாக, 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாடு காவல்துறை "ஸ்காட்லான்ட் யார்டு" காவல்துறைக்கு இணையாகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. அத்தகைய சுதந்திரத்தைக் காவல் துறைக்கு இந்த அரசு கொடுத்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறை நிகழ்த்திய சாதனைகளுடன் திருப்தி அடையக்கூடியவன் அல்ல நான். 

அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல் துறை இப்போது பிடித்துள்ள முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பதே இந்த அரசினுடைய இலக்கு. அதற்கு இந்த அரசு முழு முயற்சி எடுக்கும். தமிழ்நாடு காவல் துறையின் கடினமான பணியை, நம் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நன்கு உணர்வார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். 

அவரவர் தொகுதியில், சட்டம் ஒழுங்குப் பணியில் நியாயமாக, நேர்மையாக நடக்கும் காவலர்களை, காவல் துறை அதிகாரிகளை நீங்களும் மனதாரப் பாராட்டி, அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். தமிழ்நாடு காவல் துறை, இந்தியாவில் முதலிடத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் அளவிற்கு உதவிட வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். காவல் துறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும், காவல் துறையினர் நம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் இணைந்து, நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் நிச்சயம் கொண்டு செல்லும் என இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த மார்ச் 20 ஆம் தேதியன்று தொடங்கிய இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர், இன்றுடன் முடிவடைகிறது. இந்த 21 அலுவல் நாட்களும் இந்த அவை ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது. மக்களாட்சிக்கு மதிப்பளிக்கும் விதமாக, அவை நடவடிக்கைகளில் ஈடுபட்ட அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டத் தொடரிலும், ஆளுங்கட்சி உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக நேரம் பேச வாய்ப்பு தரப்பட்டதாக நான் கருதுகிறேன். அந்த வகையில், இந்த அரசுக்குப் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் விதத்தில், இந்த மாமன்றத்தை வழிநடத்திய மாண்புமிகு சட்டபேரவைத் தலைவரான தங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுவதற்குமுன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

Related Stories

Related Stories