தமிழ்நாடு

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே, தன்னை ஒரு விவசாயி, எளிய வீட்டுப்பிள்ளை என்றெல்லாம் கதை விட்டு வருகிறார். அதேபோன்று இவரின் அரைவேக்காட்டுதன அரசியலைக் கண்டு பா.ஜ.க. முன்னணியினர் பலர் நொந்து நூலாகி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் பரவியது. எனவே இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து பேட்டி அளித்திருந்தார். அப்போது, அந்த வாட்ச் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டவை என்றும், தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கியதாகவும் கூறினார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

மேலும் இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்துபோது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்சுகள் தயாரிக்கப்பட்டது என்றும், இது சிறப்புப் பதிப்பு என்பதால் ரபேல் விமானத்தில் உள்ள சில பாகங்கள் இந்த வாட்ச்சில் உள்ளது என்றும் கூறினார். அதோடு அந்த 500 வாட்சுகளில் தான் வைத்திருப்பது 149-ஆவது பதிப்பு என்றும்” கூறினார்.

இவரது இந்த விளக்கத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னிடம் இருக்கும் சொத்து என்று கூறும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பினார். அதோடு ரபேல் வாட்சுக்கான பில் கேட்டு இணையத்தில் அண்ணாமலைக்கு எதிராக ட்ரெண்ட் ஆனது.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்" என்று குறிப்பிட்டார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 1-ம் தேதி இதனை வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இதனால் மார்ச் 31-ம் தேதியே "நாளை ஏப்ரல் 1.. பில் எங்கே அண்ணாமலை.." என்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இதனால் தான் ஏப்ரல் 14-ம் தேதி ரபேல் வாட்சுக்கான பில்லை வெளியிடுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த சூழலில் நெற்றி (ஏப்.14) சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரஃபேல் வாட்ச் பில்லை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். ஆனால் அது பில் அல்ல சீட்டு என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதோடு பில்லை காட்டுவதாக கூறிய அண்ணாமலை பொய் மேல் பொய் உரைத்து மக்களை முட்டாளாக்குவதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

இதனிடையே அண்ணாமலை ரபேல் வாட்சுக்கான பில் என்று சொல்லி சீட்டை காண்பித்து அதற்கான விளக்கத்தையும் அளித்தார். அப்போது பேசிய அவர், "ரபேல் வாட்ச் என்பது bell and ross உடன் சேர்ந்த டஸால்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகத்திலேயே மொத்தமாக 500 வாட்ச்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் என்னிடம் இருக்கும் வாட்ச் 147-வது ஆகும்.

இந்த வாட்சை நீங்கள் சாதரணமாக கட்ட முடியாது. ஏனென்றால் இது செங்கல் போல் மிகவும் வெயிட்டாக இருக்கும். இந்த வாட்ச் இந்தியாவில் 2 பேர் தான் வாங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் மும்பையில் இருக்கிறார். இதன் 2-வது வாட்ச் கோயம்பத்தூரில் உள்ள Zimson Time Private Limited-ல் விற்கப்பட்டுள்ளது. நான் மே 27, 2021-ம் ஆண்டு வாங்கினேன்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

ஆனால் இந்த வாட்சை மார்ச் மாதம் 2021-ல் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். எனக்கு இதுபோல் வாட்ச் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. எனவே உடனே சேரலாதன் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

இவரது இந்த இந்த விளக்கம் சரியான மழுப்பலாகவே இருக்கிறது. ஏனெனில் முதலில் அவர் காண்பித்தது பில் இல்லை, அது ஒரு சீட்டு. சீட்டு யார் வேண்டுமானாலும், எந்த தேதியில் வேண்டுமானாலும், யார் பெயரில் வேண்டுமானலும் தயாரித்து print out எடுத்து காண்பிக்கலாம். அதுவே இவர் மழுப்பியதில் முக்கிய பங்கு. நேற்று அவர் வெளியிட்டுள்ள சீட்டுடன் சேர்ந்து அவரது வங்கி கணக்கின் விவரங்களையும் இணையத்தில் வெளியிட்டார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

அதில் அவர் செய்த செலவுகள் சில குறிப்புகள் இதோ :-

>> NETFLIX அதிகம் பயன்படுத்துகிறார் போல - அதற்கு மாதா மாதம் ரூ.499-க்கு ரீ-சார்ஜ் செய்கிறார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

>> சென்னை ஹோட்டல்களில் அதிகம் செலவழித்திருக்கும் அண்ணாமலை, பெங்களூர் போனால் மட்டும் ஸ்விக்கியில் (SWIGGY) ஆர்டர் செய்கிறார்.

>> GPay scratch கார்டுகள் சுரண்டி அதன்மூலம் 2 ரூபாய் முதல் 12 ரூபாய் வென்றுள்ளார். அதுமட்டுமின்றி நிறைய நண்பர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பி விளையாடியிருக்கிறார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

>> மும்பை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்லும்போதெல்லாம் BookmyShow மூலம் டிக்கெட் புக் செய்து படம் பார்த்துள்ளார். இதன் மூலம் இவர் சினிமா ஆர்வலர் என்றும் தெரிய வந்துள்ளது.

>> 10 ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். (ஒரு வேளை 20000 புத்தகம் படித்திருக்கிறேன் என்று அவர் சொன்னது உண்மையா இருக்குமோ)

>> 'கொங்கு குடும்பம்', 'கோவை கொங்கு சங்கம்' உள்ளிட்ட சிலவற்றுக்கு சந்தாவும் செலுத்தியுள்ளார்.

>> Golf Assosication-ற்கு 1,18,000 ரூபாய் சந்தா செலுத்தி இருக்கிறார்.

NETFLIX, SWIGGY, 5 ஸ்டார் ஹோட்டல், BookmyShow.. அண்ணாமலை Bank Statement-ல் இருக்கும் முக்கிய தகவல்கள் !

>> ஒரு முறை டெல்லியிலுள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு சென்ற இவர் அங்கு தங்க 42000 ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.

2 ஆடு மட்டுமே வைத்திருக்கும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இப்படி எல்லாம் செலவு செய்வாரா என்பது மிகையாகதான் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தன் வீட்டு வாடகை, ஊழியர்களுக்கு சம்பளம், பெட்ரோலுக்கு பணம் என மாதா மாதம் 7 லட்சம் செலவுக்கு தனக்கு எல்லாவற்றையும் தனது நண்பர்கள்தான் கொடுப்பதாக பெரிய உருட்டு உருட்டிய அண்ணாமலையை இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

Related Stories

Related Stories