தமிழ்நாடு

"ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு மிகவும் மோசம்".. இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு மிகவும் மோசம்".. இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்த மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்தத சட்டமன்ற உரையின் போது கூட ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் இருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லூயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை வேண்டும் என்றே தவிர்த்து வாசித்தார்.

"ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு மிகவும் மோசம்".. இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!

மேலும் சட்டமன்றத்தில் சிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருந்து தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாகப் பொருள் என்று கூறி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

"ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு மிகவும் மோசம்".. இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!

தமிழ்நாட்டு ஆளுநரின் இந்த பேச்சு மக்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு, ஆளுநர் போக்கை கண்டித்து வரும் 12-ம் தேதி ஆளுநர் மாளிகை முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக மதற்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித்தும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய பா.இரங்சித், ஆளுநர் தன்னுடைய வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார். அவரின் போக்கு மிகவும் மோசமாக உள்ளது.

தொடர்ந்து ஏதாவது பேசி ஆளுநர் பொது சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். எந்த தகவலின் அடிப்படையில் ஆளுநர் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆளுநர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories